Published:Updated:

`கொரோனா இல்லாத நாடு; மக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்!’ - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

`கொரோனா இல்லாத மாநிலமாக, நாடாக மாற்ற மக்கள் உறுதி எடுக்கவேண்டும்’ என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களை கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திரத்தினத்தையொட்டி எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மந்த்ராலயாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

`` மகாராஷ்டிரா கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் போராட்டம் மூலமே நாடு இந்த சுதந்திரத்தை அடைந்தது. இப்போது நாம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

உத்தவ்தாக்கரே
உத்தவ்தாக்கரே
புதுச்சேரி: `மத்திய அரசு நிதி குறைவாக கொடுக்கிறது!’ – சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி வேதனை

கொரோனா இல்லாத நாடாக, மாநிலமாக மாற்ற மக்கள் சுதந்திரத் தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு கொரோனா இல்லாமல் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடவேண்டும். கொரோனா நம் ஒவ்வொருவரையும் சுதந்திரத்திற்கு பிந்தைய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அது போன்ற ஒரு நிலையைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை.

புதிய வகை கொரோனா இப்போது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை நம்மை தாக்காத வகையில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எனவேதான் ஆக்ஸிஜன் கையிருப்பை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். சுதந்திரப்போராட்ட வரலாற்றை மனதில் வைத்துக்கொண்டு மட்டும் சுதந்திரதினத்தை கொண்டாடக்கூடாது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஏராளமானோரின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும். சுதந்திரத்தின் மதிப்பை பாதுகாப்பது நமது கடமையாகும்” என்று தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ்தான் முதலில் வித்திட்டார் என்பதையும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டினார். கொரோனாவுக்கு எதிராக பாடுபட்டு உயிரை நீத்தவர்கள் மற்றும் கொரோனாவுக்கு உயிரை விட்டவர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மரியாதை செலுத்தினார். உயர் நீதிமன்றத்தில் நடந்த சுதந்திர தின விழாவிலும் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். இவ்விழாவில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தலைமை நீதிபதி திபன்கர் ரூ.3.41 கோடிக்கான காசோலையை வழங்கினார். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து இந்த நிதியை திரட்டியிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு