Published:Updated:

பஞ்சாப்: `ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார்? ; மக்களே முடிவு செய்வார்கள்!’ - கெஜ்ரிவால் அதிரடி

பத்திரிகையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால்
News
பத்திரிகையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால்

`ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் தவிர்த்து விவசாயிகள் சங்கமும் போட்டியிடுகிறது. விவசாயிகள் சங்கத்துடன் கூட்டணிவைக்க ஆம் ஆத்மி கட்சி முயன்றுவருகிறது. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கை ஓங்கியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இது குறித்து இன்று (வியாழக்கிழமை) ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ``ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். பொதுமக்கள் `7074870748’ என்ற எண்ணில் முதல்வராக யார் வர வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம். இம்மாதம் 17-ம் தேதி வரை மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். முதல்வருக்கான போட்டியில் நான் நிச்சயமாக இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வராக யார் வர வேண்டும் என்பதை எங்களது கட்சிதான் பொதுமக்களிடம் கேட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் தலைவர் பக்வாண்ட் மானிடம் முதல்வருக்கான வேட்பாளராக நிற்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் யார் முதல்வராக வர வேண்டும் என்று மக்களிடமே கேட்டுவிடலாம் என்று தெரிவித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பக்வாண்ட் மான் பெயர்தான் ஆம் ஆத்மி கட்சியில் முதல்வருக்கான பெயர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் பொதுமக்களிடமும் கருத்து கேட்டு நிறுத்தினால் கூடுதல் செல்வாக்கைப் பெற முடியும் என்று கருதி ஆம் ஆத்மி கட்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.