Published:Updated:

திருத்துறைப்பூண்டி: துணை சேர்மன் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு! - போலீஸ் விசாரணை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி

திருத்துறைப்பூண்டி ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ராமலோக ஈஸ்வரியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர்மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருத்துறைப்பூண்டி: துணை சேர்மன் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு! - போலீஸ் விசாரணை

திருத்துறைப்பூண்டி ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ராமலோக ஈஸ்வரியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர்மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published:Updated:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற சி.பி.எம் கவுன்சிலர் வீட்டில் இன்று அதிகாலை பாட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதது.

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவராக தி.மு.க நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்தப் பகுதியில் பரவலாகப் பேசப்பட்டது. இவர் 5-வது வார்டில், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்துறைப்பூண்டி நகர் மன்றத்தில் பெரும்பாலான வார்டுகளை தி.மு.க கைப்பற்றியதால், ஆர்.எஸ்.பாண்டியன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என அந்தப் பகுதி தி.மு.க-வினர் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தி.மு.க தலைமை திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது.

ராமலோக ஈஸ்வரி
ராமலோக ஈஸ்வரி

இதனால் தி.மு.க-வினர் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், துணைத் தலைவர் பதவியை அந்தக் கட்சிக்கு கொடுப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை என ஆதங்கப்பட்டார்கள். இது ஒருபுறமிருக்க, துணைத் தலைவர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் 11-வது வார்டு கவுன்சிலர் ராமலோக ஈஸ்வரி அறிவிக்கப்பட்டார். இவர் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரான ரகுராமனின் மனைவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாட்டில் வெடிகுண்டு
பாட்டில் வெடிகுண்டு

துணைத் தலைவர் பதவி தொடர்பாக, திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரமுகர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை திருத்துறைப்பூண்டி ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ராமலோக ஈஸ்வரியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர்மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதில் தீப்பற்றிய நிலையில், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களைத் தேடிவருகிறார்கள். இது குறித்துப் பேசும் அந்தப் பகுதி திமுக-வினர், ``இதற்கும், எங்கள் கட்சியினருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. துணைத் தலைவர் தேர்தலில் நிலவும் சர்ச்சையைப் பயன்படுத்தி, இரு கட்சியினருக்கும் இடையே மோதலை உருவாக்கவும், குறிப்பாக தி.மு.க-வினருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் வேண்டுமென்றே யாரோ சிலர், இப்படிச் செய்திருக்கிறார்கள்" என தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism