Published:Updated:

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு சம்மன்

தேவேந்திர பட்நவிஸ்
News
தேவேந்திர பட்நவிஸ்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு சம்மன்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Published:Updated:
தேவேந்திர பட்நவிஸ்
News
தேவேந்திர பட்நவிஸ்

மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு பாஜகவின் ஆதரவு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரேஷ்மி சுக்லா 2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு பதவி ஏற்ற போது மகாராஷ்டிரா அமைச்சர்கள், அதிகாரிகளின் போன் உரையாடல்களை சட்டவிரோதமாக பதிவு செய்து அதனை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அந்த போன் உரையாடலில் மகாராஷ்டிராவில் போலீஸ் அதிகாரிகளின் இடமாறுதலில் இடைத்தரகர்கள் மற்றும் அமைச்சர்களின் குறுக்கீடு இருந்ததாக கூறப்படுகிறது. இக்குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தேவேந்திர பட்நவிஸ் கோரிக்கை விடுத்தார். இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

அவ்விசாரணையின் அடிப்படையில் ரேஷ்மி சுக்லா மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரேஷ்மி சுக்லா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுக்லா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

தேவேந்திர பட்நவிஸ்
தேவேந்திர பட்நவிஸ்

இந்நிலையில் போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு சைபர் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். 13ம் தேதி காலையில் பாந்த்ரா-குர்லா சைபர் பிரிவு போலீஸில் ஆஜராக தனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார். சம்மனை ஏற்று தான் விசாரணைக்கு ஆஜராகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரேஷ்மி சுக்லா போன்களை ஒட்டுக்கேட்டு பதிவு செய்த வழக்கில் பட்நவிஸை சாட்சியாக சேர்த்திருப்பதாகவும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு வழக்கறிஞர் அஜய் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.