Published:Updated:

‘ஒரு நாளில் 80 கி.மீ பயணம்’ - 1170 கி.மீ கடந்து மோடியின் வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்!

மோடி - கிம்சந்த் ( Twitter/@narendramodi )

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றிபெற்றதற்காக, சுமார் 1170 கி.மீ கடந்து வந்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஒரு தொண்டர்.

‘ஒரு நாளில் 80 கி.மீ பயணம்’ - 1170 கி.மீ கடந்து மோடியின் வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்!

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றிபெற்றதற்காக, சுமார் 1170 கி.மீ கடந்து வந்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஒரு தொண்டர்.

Published:Updated:
மோடி - கிம்சந்த் ( Twitter/@narendramodi )

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியைச் சேர்ந்தவர், கிம்சந்த் சந்த்ரானி (Khimchand Chandrani). இவர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னால், ‘இந்தத் தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றால், தன் வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை சைக்கிளில் சென்று மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன்’ என உறுதி மொழி எடுத்திருந்தார்.

கிம்சந்த்
கிம்சந்த்
Twitter/@narendramodi

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில், கிம்சந்த் உறுதிமொழி எடுத்துக்கொண்டது போலவே பா.ஜ.க 303 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதனால், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக, அம்ரேலியில் இருந்து டெல்லி வரையிலான 1170 கிலோ மீட்டர்களை 17 நாள்கள் சைக்கிளில் கடந்து, நேற்று பிரதமர் அலுவலகத்துக்கு வந்து மோடியையும் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிம்சந்த்துடனான சந்திப்பை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. அதில், “குஜராத்தின் அம்ரேலியைச் சேர்ந்த, மிகவும் அபூர்வமான கிம்சந்த் பாயை சந்தித்தேன். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றால் அம்ரேலியில் இருந்து டெல்லிவரை சைக்கிளில் வருவதாக உறுதிமொழி எடுத்து, தற்போது இங்கு வந்துள்ளார். அவரின் சைக்கிள் பயணம் பல தொண்டர்களை ஈர்த்ததாகக் கூறினார். அவரின் பேரார்வம் மற்றும் பணிவைப் பார்த்து நானும் ஈர்க்கப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிம்சந்த்
கிம்சந்த்
Twitter/@narendramodi

தொடர்ந்து, தன் சைக்கிள் பயணம் பற்றிப் பேசியுள்ள கிம்சந்த், “மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் சைக்கிள் பயணம் மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்தேன். அதை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளேன். அம்ரேலியில் இருந்து டெல்லி வரையிலான 1,170 கி.மீட்டரை, ஒரு நாளுக்கு 70 முதல் 80 கி.மீ எனக் கடந்து, 17 நாள்களில் டெல்லியை அடைந்தேன்.

வரும் வழியில் ஆசிரமம், கோயில்களில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன். பிரதமர் மோடி என்னுடன் ஐந்து நிமிடங்கள் வரை பேசினார். அவர் என்னிடம், ‘அம்ரேலியில் இருந்து டெல்லி வரை சைக்கிளில் வந்துள்ளீர்கள். மிகவும் தைரியமானவர் நீங்கள்’ எனக் கூறினார்” என்று சந்த் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism