Published:Updated:

கடலூர்: ``முதல்வர் பதவி இலக்கல்ல..!" – அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

``பா.ம.க-வில் 2.0 தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒற்றுமை தேவை. மற்ற கட்சிகளை குறை கூறி பதிவுகளை போடுங்கள். ஆனால் அது நமது கட்சிக்குள் வேண்டாம்.” - அன்புமணி ராமதாஸ்

கடலூர்: ``முதல்வர் பதவி இலக்கல்ல..!" – அன்புமணி

``பா.ம.க-வில் 2.0 தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒற்றுமை தேவை. மற்ற கட்சிகளை குறை கூறி பதிவுகளை போடுங்கள். ஆனால் அது நமது கட்சிக்குள் வேண்டாம்.” - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க-வின் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் நேற்று இரவு நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``தமிழக மக்கள் தங்களுக்கு புதியவர்கள், புதிய செயல்பாடுகள் வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர். அந்த கருத்துகளை முன்னெடுத்து வாக்குகளாக மாற்ற வேண்டும். பா.ம.க-வினர் மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கைகளை பெறுங்கள். 2025-ல் பாமக ஆட்சிக்கு வர வேண்டுமென உறுதியேற்றுக் கொள்ளுங்கள். என்.எல்.சி, சிப்காட் உட்பட தமிழகத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதையும், அதற்கு என்னென்ன தீர்வு என்பதையும் அறிந்து வைத்திருப்பது பா.ம.க மட்டுமே.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்
மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

நம்மிடம் அனைத்தும் உள்ளது. ஆனால் அரசியல் அதிகாரம் மட்டும்தான் இல்லை. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மது அருந்துகின்றனர். அதற்குக் காரணம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள்தான். என் இலக்கு முதல்வராவதல்ல. தமிழகத்தை முன்னேற்றுவதே என் இலக்கு. ஒரே மாதத்தில் கடலூர் மாவட்டத்தில் எந்த கிராமத்துக்குச் சென்றாலும் அங்கு பா.ம.க கொடி இருக்க வேண்டும். அடுத்த நான்கு ஆண்டு காலம் நமக்கு மிகவும் முக்கியமானது. நாம் கட்சி தொடங்கி 32 ஆண்டுகளாகியும் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. பா.ம.க 2.0 தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒற்றுமை தேவை. மற்ற கட்சிகளை குறை கூறி பதிவுகளை போடுங்கள். ஆனால் அது நமது கட்சிக்குள் வேண்டாம். பதிவுகள் போடுவதால் எதுவும் நடைபெறாது. அதனால் அதை நிறுத்திக்கொள்ளுங்கள். 10.5% இட ஒதுக்கீடு ஒரு சாதிக்கானது அல்ல. அது சமூகநீதி” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``என்.எல்.சி வேலை வாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி தரப்பில் முதலீடுகள் ஏதுமில்லை. என்.எல்.சி தொடங்கிய காலத்தில் 8 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது 800 அடி வரை சென்றுள்ளது. மாவட்டத்தில் பலா, முந்திரி அதிக அளவில் விளைச்சலை கொண்டிருக்கிறது. பலா மதிப்பு கூட்டுதல் மூலம் 80 வகையான பொருட்கள் தயார் செய்யலாம். எனவே பலா, முந்திரி ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

மேலும் மாவட்ட மக்களுக்கு தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையில் பலா, முந்திரி மண்டலங்கள் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் ஐந்து பிரதான ஆறுகள் பாய்ந்து செல்லும் நிலையில் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை ஏற்படுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாவட்டத்தில் காவல்துறை பா.ம.க-வினர் மீது பொய் வழக்கு போடுவதை கடமையாக கொண்டுள்ளனர். வேண்டும் என்றே பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த நிலை தொடருமேயானால் நானே நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் .தொடர் போராட்டம் நடத்தப்படும். மாணவர் கலாசாரம் மாறி வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனையைத் தடுக்கிற வகையில் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவது காரணமாக கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பத்து மாத காலம் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஓராண்டில் இதுபோன்ற சூழ்நிலையில் செயல்பாட்டில் தமிழக ஆட்சியாளர் செயல்பாடு பாராட்டத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை இனி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 முதல் 15 வயது வரை உள்ள பெண்களும் தற்போது மது குடிக்க ஆரம்பித்துவிட்டனர் .எனவே பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டால் யாரும் மது குடிக்க மாட்டார்கள். தற்போது பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 2026-ல் ஆட்சி நடத்த பா.ம.க முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ஆளுநரும், தமிழக அரசும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் வளம் பெற்று நன்றாக மக்களுக்கு திட்டங்களைக் கொண்டு செல்ல முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism