Published:Updated:

``160-ல் கவனம் செலுத்தினாலே பா.ம.க-வின் ஆட்சிதான்!" - தீரன் பேட்டி

பேராசிரியர் தீரன் பயணித்த கட்சி வழிப்பாதை மிக நீண்டது. தற்போது பா.ம.க-வின் அரசியல் தலைமைக்குழுத் தலைவராக இருக்கும் தீரனின் `விறுவிறு' பேட்டியிலிருந்து...

"பல மாவட்டங்களில் உங்கள் கட்சிக்குக் கிளைகளே இல்லையே?''

"பத்து எம்.எல்.ஏ-க்களுடன் ஹரியானாவில் துஷ்யந்த் துணை முதல்வராகவில்லையா... உத்தரப் பிரதேசத்தில் வெறும் 65 எம்.எல்.ஏ-க்களுடன் மாயாவதி முதல்வராகவில்லையா? மாநிலம் முழுவதும் கட்சி வலுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வன்னியர்கள் வலுவாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில 160 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு கவனம் செலுத்தினாலேயே ஆட்சியைப் பிடித்துவிடுவோம்.''

"முதல்வராக ஆசைப்படும் அன்புமணி, சாதி அடையாளத்தைக் கையில் டாட்டூ குத்திக்கொள்ளலாமா?"

"சாதி அடையாளத்துக்குள் எங்களைச் சுருக்கிவிட வேண்டாம். எங்கள் கட்சிக்குக் கிடைத்த முதல் மத்திய மந்திரி பதவியை தலித் ஒருவருக்குத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக தலித் ஒருவர்தான் வர முடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட எங்களுக்குக் கிடைத்த ஏழு இடங்களில், நான்கு இடங்களைப் பிற சமூகத்தினருக்குத்தான் கொடுத்தோம். 1991-ம் ஆண்டு தேர்தலிலேயே 'தலித் ஒருவரை முதல்வராக்குவோம்' என்று முழங்கியவர் எங்கள் ஐயாதான்!"

"பிறகு ஏன், ராமதாஸ் அந்தக் கொள்கையைக் கைவிட்டார், மகன் அன்புமணிக்காகவா?''

"இல்லை. தலித் மக்களே எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிவைக்க வேண்டியதாயிற்று. நாங்கள் பொதுவானவர்கள். எங்களுக்குச் சாதிய சிந்தனை இல்லை.''

"ஆனாலும், பா.ம.க மீது 'சாதிக்கட்சி' என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?''

"வன்னியர் சங்கமாக இருந்து, அரசியல் கட்சியாக மாறியதால் அப்படியொரு பார்வை இருந்தது. ஆனால், நாங்கள் 'தமிழர் உரிமை மாநாடு' நடத்தியபோது முற்போக்காளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் கலந்துகொண்டு ஆதரித்தார்களே!''

"இப்போதும் ஆதரிக்கிறார்களா?''

"நிச்சயமாக. என்ன... தேர்தல் கூட்டணியின்போது மட்டும் விமர்சனம் செய்வார்கள். ஆனாலும், அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நாங்கள் மட்டுமே!''

தீரன்
தீரன்

"வன்னியர்களுக்கு பா.ம.க துரோகம் இழைத்துவிட்டதாக வேல்முருகன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆகியோர் வைக்கும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

"காடுவெட்டி குருவுக்கு மணி மண்டபம் கட்டியிருக்கிறோம், அவருக்குச் சிலை வைத்திருக்கிறோம். 'வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யவில்லை' என்று சொல்பவர்கள் வன்னியர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? துரோகிகள்!''

> "வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிடுமா, அ.தி.மு.க கூட்டணியில் தொடருமா?''

> "மத்திய பா.ஜ.க அரசு, மாநில உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பறித்துவருகிறது. ஒருகாலத்தில் மாநில உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய பா.ம.க., தற்போது பதவிக்காக அமைதிகாக்கிறதா?"

> "கோரிக்கை வைப்பது, அறிக்கைவிடுவதெல்லாம் எதிர்ப்பரசியலா?''

> "நீங்கள்தானே 'தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி' என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?"

> "என்னது! கட்சி தொடங்கப்பட்டு 31 ஆண்டுகளாகிவிட்டன. இப்போதுதான் கட்டமைப்பையே வலுப்படுத்திவருகிறீர்களா?''

> "கருணாநிதியோடு அரசியலில் பயணித்தவர் நீங்கள். ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

> "ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க - எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க. ஓர் ஒப்பீடு?''

இந்தக் கேள்விகளுக்கு பதில்களுடனான முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3hRLwiw > "அன்புமணியை முதல்வராக்குவதே லட்சியம்!" https://bit.ly/3hRLwiw

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு