Published:Updated:

``ராஜீவ் காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை; எந்த ஆட்சி வந்தாலும் அப்படித்தான்..!" - ராமதாஸ் வேதனை

மருத்துவர் ராமதாஸ்

``பஞ்சாயத்தாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அடிக்கடி சண்டை, கைகலப்பு, நாற்காலிகளைத் தூக்கி வீசுவது நடக்கிறது” - மருத்துவர் ராமதாஸ்

``ராஜீவ் காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை; எந்த ஆட்சி வந்தாலும் அப்படித்தான்..!" - ராமதாஸ் வேதனை

``பஞ்சாயத்தாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அடிக்கடி சண்டை, கைகலப்பு, நாற்காலிகளைத் தூக்கி வீசுவது நடக்கிறது” - மருத்துவர் ராமதாஸ்

Published:Updated:
மருத்துவர் ராமதாஸ்

திண்டிவனம் வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ``உள்ளாட்சி அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் முதன்மை அமைப்பு. மறைந்த ராஜீவ்காந்தி, பஞ்சாயத்திலிருந்து நகர்பாலிகா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன்பின் வந்த நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலேயே இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 11வது அட்டவணை பஞ்சாயத்து ராஜ். 12வது அட்டவணை இந்த நகர்பாலிகா. இந்த இரண்டும் மிக முக்கியமானது. அந்த பகுதி மக்களே அவர்களுக்குத் தேவையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, மக்களே ஆட்சி செய்வது. இதுதான் ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டத்தின் நோக்கம். ஆனால், இது நிறைவேறுகிறதா, நிறைவேறியதா என்றால் இல்லை.

வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

ஏனென்றால், பஞ்சாயத்தாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அடிக்கடி சண்டை, கைகலப்பு, நாற்காலிகளைத் தூக்கி வீசுவது நடக்கிறது. நகர்பாலிகா சட்டத்தில் 18 அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதில், சாலை, வறுமையை ஒழித்தல், பாலம் கட்டுதல், குடிதண்ணீர், தெருவிளக்கு, பொதுச்சுகாதாரம் ஏற்படுத்துவது என நகர மன்றத்திற்கான ஒரு சுயாட்சி மாதிரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் நடைமுறையில் இத்தனை ஆண்டுகளில் சுயாட்சியாக இயங்கியதா?. காரணம் இதுவரை ஆண்ட அரசியல்வாதிகள், இந்த அமைப்புக்கான அதிகாரங்களை அவர்களிடமே வைத்துக் கொள்கிறார்கள். அல்லது தேவையான நிதி ஆதாரங்களைக் கொடுப்பதில்லை. அதனாலேதான் இன்றும் நகர்ப்புறங்கள் ராஜீவ் காந்தி நினைத்தபடி இல்லை. அதனால் தான், பா.ம.க கொள்கை அறிக்கையில் இந்த நகராட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுப்பதோடு, அதிக நிதி ஆதாரங்களையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

அதுமட்டுமில்லாமல் எங்களது உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு, பயிலரங்க பயிற்சியில், "உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாற்காலியிலே நீங்கள் அமர்ந்து வெளியே வரும்போது நன்றாக உதறி விட்டு வெளியே வரவேண்டும், ஏனென்றால் தூசு கூட வீட்டுக்கு வரக்கூடாது அவ்வளவு பரிசுத்தமாக நீங்கள் இருக்க வேண்டும்' என்று கற்றுத்தருகிறோம். மக்களால் எம்.எல்.ஏ., அமைச்சர்களை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. வார்டு பிரதிநிதிகளை, நகர்மன்ற தலைவரை மக்களாகிய நீங்கள் எளிதில் பார்க்க முடியும், தங்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசமுடியும். அந்த வகையிலே இந்த உள்ளாட்சி அமைப்பும் மிக மிக முக்கியமானது.

இந்த தேர்தலிலே பா.ம.க மிகப் பெரிய வெற்றி பெரும். மக்கள் இன்று பா.ம.க-விற்கு வாக்களித்து வருகின்றனர். மாங்கனி சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்துத் தேர்தல் ஆணையம் மவுனம் சாதிக்கிறது என்பதைவிடக் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. அது... அப்படித்தான் இருக்கும்! ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறதா? எந்த அரசு வந்தாலும் இப்படித்தான் இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism