Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

சிங்கிள் டீ, கிடா விருந்து, பரிசு, போஸ்டர், அடாவடி

‘வட்டம்’ பாலா - ‘‘சிங்கிள் டீக்குக்கூட வழியில்லை!’’

ஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே, மாவட்ட தி.மு.க அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயம்’ அமைந்திருக்கிறது. கிராமப்புறப் பகுதிகளிலிருந்து இங்கு வந்து செல்லும் தொண்டர்களுக்கு, முன்பெல்லாம் அறிவாலய நிர்வாகிகள் டீ கொடுத்து உபசரிப்பார்கள். அங்கிருக்கும் தொண்டர்கள் குடிப்பதற்காகவே அங்கே எந்நேரமும் டீ கேன் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போதோ, ‘‘பல மாதங்களாகவே டீ கேன் வைக்கப்படுவதில்லை. குடிப்பதற்குத் தண்ணீர்கூட முறையாக வைப்பதில்லை. லிஃப்ட் பழுதடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. பழுதைச் சரிசெய்யவும் யாரும் முயற்சி எடுக்கவில்லை’’ என்று புகார்கள் வரிசைகட்டுகின்றன. ‘‘நிர்வாகிகளிடையே கோஷ்டிப்பூசல் பெரிய அளவில் நிலவுவதால், செலவை யார் ஏற்றுக்கொள்வது என்ற பிரச்னையில் எதையும் கண்டுகொள்வதில்லை’’ என்று இதற்குக் காரணம் சொல்கிறார்கள். கலைஞர் அறிவாலயம் பக்கம் தலைகாட்டும் ஒன்றிரண்டு தொண்டர்களும், ‘‘இங்கே வந்தா சிங்கிள் டீக்குக்கூட பிரயோஜனம் இருக்காது’’ எனத் தலையிலடித்துக்கொள்கிறார்கள்!

கரை வேட்டி டாட் காம்

பதவியைப் பறிக்க கிடா விருந்து!

ம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான வில்வநாதன், பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்புவகிக்கிறார். இந்தச் சூழலில், முன்னாள் ஒன்றியப் பிரமுகர் ஒருவர், எம்.எல்.ஏ வகிக்கும் ஒன்றியச் செயலாளர் பதவியைக் குறிவைத்துக் கூட்டத்தைச் சேர்த்துவருகிறாராம். அண்மையில், தி.மு.க-வினரைத் திரட்டி கிடா விருந்துவைத்த அந்தப் பிரமுகர், விருந்துக்கு வந்தவர்களை வாடகை வேன்களில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பொதுச்செயலாளர் துரைமுருகனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே, எம்.எல்.ஏ-வுக்கு எதிராக கோரஸாகக் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம்தான் `தன் செருப்பை பட்டியல் சமூக நிர்வாகியின் கைகளில் கொடுத்து, சுமந்து வரச் சொன்னதாக’ சர்ச்சையில் சிக்கியிருந்தார் எம்.எல்.ஏ வில்வநாதன். இந்தநிலையில், தன்னிலை விளக்கம் கொடுக்கச் சென்ற வில்வநாதனிடம், ‘‘உன்னைப் பத்தி தெரியும்யா... போய் வேலையைப் பாருய்யா’’ என்று அதட்டியிருக்கிறார் துரைமுருகன். அடிக்கு மேல் அடி விழுவதால் ஆடிப்போயிருக்கிறாராம் வில்வநாதன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதயசூரியனை உதிக்கவைக்கும் பா.ஜ.க!

துரையைச் சேர்ந்த பா.ஜ.க-வின் மாநிலத் துணைத்தலைவர் மஹாலட்சுமியின் படம் அச்சிடப்பட்ட பைகள், விசிறிகளை மதுரை தெற்குத் தொகுதியிலுள்ள வீடுகளில் சிலர் வீசிவிட்டுச் செல்கிறார்கள். ‘பா.ஜ.க-விலுள்ள நிர்வாகிகள் தங்களை ஓவராக விளம்பரம் செய்துகொள்ளக் கூடாது’ என்று கட்சியில் கட்டுப்பாடு இருந்தும், மஹாலட்சுமியை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லையாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ``டெல்லி வரை செல்வாக்கு இருப்பதால், எனக்குத்தான் சீட்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கடுத்து மாநகராட்சித் தேர்தல் அறிவித்தபோது ``நான்தான் மேயர் வேட்பாளர்” என்று ஓவர் பில்டப் செய்தார். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. இந்தநிலையில்தான், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக அடுத்த அட்ராசிட்டியை ஆரம்பித்திருக்கிறார். பரிசுகளை முதலில் சொந்தக் கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுப்பார்கள். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் வீடுகளில் பரிசுகளைப் போடுகிறார்’’ என்று புலம்பும் பா.ஜ.க தொண்டர்கள், ‘‘அதுவும் அந்த விசிறியில் இடம்பெற்றிருக்கும் தாமரைப் படம், உதயசூரியன்போலவே இருக்கிறது’’ என்கிறார்கள் முத்தாய்ப்பாக.

கரை வேட்டி டாட் காம்

‘‘நாங்களாவது எதிர்க்கட்சி...நீங்க?’’

கோவையில் தி.மு.க-வை விமர்சித்து அ.தி.மு.க போஸ்டர் ஒட்டியதைக் கண்டித்து, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தலைமையில் தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் வேலுமணி ஆகியோரை உதயநிதி கடுமையாக விமர்சித்ததால், தி.மு.க-வை எதிர்த்து கறுப்புச்சட்டை அணிந்து கோவை அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். அதை, ‘‘உலகத்துலேயே ஆளுங்கட்சியா இருந்துக்கிட்டு, எதிர்க்கட்சியை எதிர்த்துப் போராட்டம் பண்ற ஒரே கோஷ்டி அ.தி.மு.க-தான்’’ என தி.மு.க-வினர் கலாய்த்தனர். இந்தநிலையில், கோவை தி.மு.க ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ‘‘காலங்காலமாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, புதியவர்களுக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்’’ என்று தி.மு.க-வினர் சிலர் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இதனால், உட்கட்சிப் பூசல் புகைகிறது. கிணத்துக்கடவு பகுதியில் தி.மு.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் சின்னசாமி தலைமையில் இந்த நியமனத்தை எதிர்த்துப் போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். அதையடுத்து, ‘‘நாங்களாச்சும் ஆளுங்கட்சியா இருந்து உங்களை எதிர்த்துப் போராட்டம் பண்ணோம். ஆனா, இப்போ உங்க கட்சிக்குள்ள இருந்தே உங்களை எதிர்த்துப் போராடுறாங்க. முதல்ல அதைச் சரிபண்ணுங்கப்பா” என்று அ.தி.மு.க-வினர் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

மாற்றுக் கட்சிகளில் ஐக்கியமாகும் ராணிப்பேட்டை பா.ம.க-வினர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், பா.ம.க-வின் மாநிலப் பிரமுகர், மாவட்டப் பிரமுகர் இருவர் பற்றி புலம்பித் தள்ளுகிறார்கள் தொண்டர்கள். கட்சிக் கூட்டங்களில் நிர்வாகிகளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, கேள்வி கேட்பவர்களை ஓரங்கட்டுவது என அடாவடித்தனம் செய்கிறார்களாம். இதனால், நொந்துபோன பா.ம.க-வினர், கூட்டணியிலுள்ள அ.தி.மு.க., பா.ஜ.க-விலும், எதிர்க்கட்சியான தி.மு.க-விலும் ஐக்கியமாகிவருகிறார்கள். ‘‘இப்படியே போனால், 2021 சட்டமன்றத் தேர்தலில், ராணிப்பேட்டையில் பா.ம.க-வுக்கு வேலை செய்ய தைலாபுரத்திலிருந்துதான் ஆட்களைக் கூட்டிவர வேண்டும்’’ என்று தலையிலடித்துக்கொள்கிறார்கள் தொண்டர்கள்.