Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

``வெற்றி சாத்தியமானால், வெகுமதியாக ராஜ்ய சபா எம்.பி பதவி தாருங்கள்’’ எனக் கேட்கிறாராம் இரண்டெழுத்து அரசியல் அட்வைஸர். ‘ஆம்’, ‘இல்லை’ எனச் செயல்புள்ளி எந்த பதிலையும் சொல்லாததால், மருமகன் மூலமாக மறுபடியும் அழுத்தம் கொடுக்கிறாராம். #எம்.பி-யும் இரண்டெழுத்துதான்!

‘கொரோனா என்பதே பொய்’ என மருத்துவமனை வாசலில் நின்று பொங்கிய வில்லன் நடிகர், போகிறபோக்கில் முன்னாள் முதல்வர் ஜெ.-வின் மரணம் குறித்தும் சில வார்த்தைகளைப் பேசினார். அதில் கடுப்பான அதிகாரிகள் தரப்பு, நடிகரைக் கைதுசெய்யும் அளவுக்குத் தீவிரமாகிவிட்டதாம். சம்பந்தப்பட்ட ஹெல்த் அதிகாரி, “அவர் என்னைத்தானே திட்டினார். கோபத்தில் இதெல்லாம் சகஜம்தான். பெரிசு பண்ண வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாராம். #பக்குவம்!

கிசுகிசு

ஓய்வுக்குப் பிறகும் பசுமைப் பதவிக்கு வந்திருக்கும் பெண் அதிகாரி, தனக்கு எதிராக கோர்ட்டை அணுகியவர்கள்மீது கடுமையான வருத்தத்தில் இருக்கிறாராம். உச்ச பதவியில் தான் இருந்தபோது, தன்னால் பாதிக்கப்பட்ட சில அதிகாரிகள்தான் தூண்டிவிடுகிறார்களோ என விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். #சூழல் சூடாகாமப் பாத்துக்கோங்க!

பக்கத்து மாநிலத்தில் படப்பிடிப்பிலிருந்த உச்ச நடிகர், நடிகர் விவேக்கின் மரணச் செய்தி கேள்விப்பட்டதும் வாய்விட்டுக் கதறிவிட்டாராம். ஷூட்டிங்கை கேன்சல் செய்யும் அளவுக்கு அவர் முடிவெடுக்க, “மறுபடி லாக்டௌவுன் போடப்போறதா செய்திகள் வருது. அதுக்குள்ள உங்க போர்ஷனை முடிச்சுட்டு வீட்ல ஓய்வெடுங்க” என வீட்டம்மா போனில் பேசினாராம். அதன் பிறகே ஷூட்டிங் தொடர்ந்ததாம். #கவலப்படாதீங்க அண்ணாத்த!

தேர்தலுக்காகச் செலவு செய்து மிகுந்த சிரமத்திலிருக்கும் தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார் முதன்மைப்புள்ளி. இழுபறிநிலை வந்தால் இழுத்துப்போடத்தான் இந்தத் திட்டமாம். இது தெரிந்து, மதில் மேல் மனசுவைத்திருக்கும் வேட்பாளர்களைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறதாம் தி.மு.க தலைமை. #அப்ப கச்சேரி இருக்கு!

கிசுகிசு

‘எப்போதுமே அணுக முடியாத ஆளாக இருக்கிறார்’ என்பதுதான் இனிஷியல் தலைவர் மீதான தொடர் குற்றச்சாட்டு. அவரை அணுக முடியாத கட்சி நிர்வாகிகள், அவருடைய உதவியாளரிடம் தங்கள் கருத்துகளைச் சொல்லிவந்தார்கள். தேர்தலுக்குப் பிறகு உதவியாளரை அணுகுவதும் பெரும்பாடாக இருக்கிறதாம். ‘கடன், கஷ்டம் எனப் புலம்புவார்கள். நாம் என்ன செய்ய முடியும்?’ எனச் சொல்லி, அவரும் லாக்டௌன் மோடுக்குப் போய்விட்டாராம். நல்ல தலைவர்; நல்ல உதவியாளர். #டோக்கன் போட்டுட்டு வரிசையில நில்லுங்க...

“தேர்தலுக்குப் பிறகு எடுத்த சர்வே திருப்திகரமாக இல்லையே?” எனக் கேட்டிருக்கிறது டெல்லி. ‘`10 லட்சியம். ஐந்து நிச்சயம்’’ என இப்போதும் அடித்துச் சொல்கிறாராம் ‘வேல்’ தலைவர். அவருக்கு வலதுகரமாக இருந்துவருபவர்களே, “இந்த மனுஷன் எந்த நம்பிக்கையில பேசுறார்னே தெரியலையே?” என்கிறார்கள் சிரிப்போடு. #அரசியல்ல இதெல்லாம்...

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க ஆதரவோடு களமிறங்கித் தோற்றவர் முன்னாள் பெண் அதிகாரி. இந்தமுறையும் அவர் தி.மு.க தரப்பில் வாய்ப்பு கேட்டாராம். ஆனால், கிடைக்கவில்லை. இதற்கிடையில், இருவர் கொலை வழக்கு குறித்து விசாரித்து அவர் கொடுத்த அறிக்கையை மாம்பழக் கட்சித் தலைவர் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார். ஆனாலும், அம்மணி ஆளுங்கட்சிப் பக்கம் ஜாகை மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறதாம் தி.மு.க தரப்பு. #பி கேர் ஃபுல். நான் என்னையச் சொன்னேன்!

கிசுகிசு

தேர்தல் பரப்புரையால் உடற்பயிற்சியைக் கைவிட்டிருந்த அண்ணன், இப்போது முழுநேரமும் ஜிம்மிலேயே கிடக்கிறார். பல மணி நேரத்துக்குப் பயிற்சிகள் எடுக்கிறார். “அண்ணன், வீட்ல இருக்கிற நேரத்தைவிட ஜிம்மில் இருப்பதுதான் அதிகம்” என்கிறார்கள் தம்பிகள். #உடம்பு தேர்தல் ரிசல்ட்டைத் தாங்கணும்ல!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மகனைப் பதவிக்குக் கொண்டுவரச் சொல்லி ‘புயல்’ தலைவருக்குப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம். ‘வாரிசு அரசியலுக்கு எதிராகப் பேசிவிட்டு, நாமே இப்படிச் செய்யலாமா?’ எனப் புயலார் தயங்க, ‘அப்போ கட்சியைத் தாய்க் கட்சியோடு இணைச்சுடலாமா?’ என நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள். தீவிர சிந்தனையிலிருக்கிறார் புயலார். #பம்பரமா சுத்துதே தலை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism