Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

ஆளுங்கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில், சுயேச்சையாகப் போட்டியிட்டு கையையும் கௌரவத்தையும் சுட்டுக்கொண்ட மாஜி மந்திரி, மறுபடியும் தாய்க்கழகத்திலேயே ஐக்கியமாக நினைத்தாராம். துணிவானவர் ஆதரிக்க, பணிவானவர் எதிர்க்க மண்டை காய்ந்துபோனது மாஜிக்கு. வேறு வழியில்லாமல், ஆளுங்கட்சியில் சேர அணில் அமைச்சரை அணுகினாராம். முதன்மையானவரிடம் பேசி அணில் அமைச்சர் கிரீன் சிக்னல் வாங்க, சொந்த மாவட்டத்தின் முத்தான சீனியர் அமைச்சருக்கு செம கோபமாம். ‘கட்சியில் சேர்வதாக இருந்தால் என்னைத்தானே அணுகியிருக்கணும்’ எனக் குரல் உயர்த்தி சீனியர் அமைச்சர் கட்டையைப்போட, மறுபடியும் அழுகிற நிலைக்கு ஆளாகிவிட்டாராம் மாஜி. #தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனிதான்!

கிசுகிசு

வாரியப் பதவிகளை வாரிக்கொடுக்கத் தொடங்கிவிட்டதால், உப்பு வாரியம் தொடங்கி பனை வாரியம் வரை பதவி கேட்டு கிச்சன் கேபினெட்டைப் பாடாய்ப்படுத்துகிறார்களாம் நிர்வாகிகள் பலரும். வாரியங்கள் பல இருந்தாலும் பலரும் குறிவைப்பது பாடநூல் கழகத்தின் பதவியைப் பெறத்தானாம். ‘இந்தப் பதவிக்கு ஒரு பெண்மணியை நியமிக்கலாம்’ எனக் கற்பிக்கும் துறையின் அமைச்சர் யதார்த்தமாகச் சொல்ல, மகளிரணிக் கூட்டமும் மல்லுக்கட்டுக்கிறதாம். #ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!

சட்டமன்றத் தேர்தலில் உரிய ஒதுக்கீட்டையும் பெற்று, உரிய வெற்றியையும் அடைந்த கதர்க் கட்சியின் தலைவருக்கு டெல்லியில் நல்ல பெயர். ஆனாலும், அவர் பதவிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டதால், அவரை மாற்றக் கோரி டெல்லிக்குக் காவடி எடுக்கத் தொடங்கிவிட்டார்கள் கதர்க் கட்சி நிர்வாகிகள் பலரும். பஞ்சாயத்து டெல்லியின் வாரிசு கவனத்துக்குப் போக, அவர் தமிழகத்தின் பொறுப்பாளராக இருக்கும் பல்க் பிரமுகரிடம் கருத்து கேட்டிருக்கிறார். “தலைவரை மாற்றுகிறீர்களோ இல்லையோ, என்னை மாற்றிடுங்க… இவ்வளவு கோஷ்டிப்பூசலை நான் பார்த்ததே இல்ல…” என்றாராம் மனம் வெறுத்துப்போய். #சண்டையில கிழியாத கதர்ச்சட்டை எங்கேயிருக்கு?!

கைவசம் இருக்கும் மூன்று படங்களோடு சினிமா துறைக்கு முழுக்குப்போட முடிவெடுத்திருக்கிறார் வாரிசு எம்.எல்.ஏ. ‘இனி முழு நேரமும் அரசியல்தான்’ எனப் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, அடுத்தடுத்து உயரங்களை அடைவதுதான் இலக்காம். கொரோனா நெருக்கடி காலத்திலும் எவ்வித அச்சமுமின்றி தொகுதியைச் சுற்றிவந்த வகையில், வாரிசுக்கு ஏக நல்ல பெயர். இனி தமிழகம் முழுக்க இதேபோல் அடிக்கடி வலம்வருவாராம். #எம்புட்டு இருக்குது ஆசை...

மலைக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கோடியை அமுக்கிய வழக்கில் கைதாகியிருக்கும் சாமி பெயர்கொண்ட தாதா, குட்கா புகழ் மாஜியைப் பற்றிய பல ரகசியங்களை வாக்குமூலமாகக் கக்கியிருக்கிறாராம். ‘கிட்டத்தட்ட 200 சி வரையிலான பணப் பட்டுவாடா நடந்ததே குட்கா புகழ் மாஜி மூலமாகத்தான்’ என தாதா சொன்ன வாக்குமூலத்தை, தலைமைக்குத் தகவலாக அனுப்பியிருக்கிறது போலீஸ். #ஏ... சாமி... சிக்குவாரா ஆசாமி?

தென் மண்டலத்தை ஆட்டிப்படைத்த அண்ணன் தலைவரின் மகன்மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என உளவுக்குத் தகவல் வந்திருக்கிறதாம். ஆடிய காலத்தில் தேடிய பகையால் வந்த வினையாம். ‘எச்சரிக்கையாக இருங்கள்’ என்று அண்ணன் மகனுக்குத் தகவல் சொல்லியிருக்கும் உளவுத்தரப்பு, அவருக்கே தெரியாமல் ரகசியமாக அவருக்குப் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் தகவல். #என்னென்ன தேவைகள்... அண்ணனைக் கேளுங்கள்!

கிசுகிசு

தோட்டத்தைவிட்டு வெளியே வராவிட்டாலும், இணையவழியாகக் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார் பெரிய டாக்டர். தனக்கு உற்ற துணையாக இருக்கும் வழக்கறிஞரின் தோல்விக்குக் காரணமானவர்களை இணையவழியாகவே வறுத்தெடுத்துவிட்டாராம். ‘கட்சிக்கு அவ்வளவு பக்கபலமாக இருக்கும் அவரையே உள்ளடி பண்ணி தோற்கடிச்ச நீங்க, என்னைய வீழ்த்தக்கூடத் தயங்க மாட்டீங்க…’ என்கிற அளவுக்கு அவர் கொந்தளிக்க, மிரண்டுபோனார்களாம் நிர்வாகிகள். #உள்ளடிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துதானே ஆகணும்!

எதிரணியில் வெற்றிபெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு திடீர் திடீரென ஸ்வீட் பாக்ஸுகள் வருகின்றனவாம். ‘என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி’ என ஏற்கெனவே ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அசத்திய துணிவானவர், மறுபடியும் ஸ்வீட் பாக்ஸ் அனுப்ப, ‘இது எதுக்கு?’ என வியந்திருக்கிறார்கள் பலரும். ‘உங்கள் அன்பும் பாசமும் எப்போதும் எனக்குத் தேவை’ என்று மட்டும் பதில் வந்ததாம். #பாக்ஸ் உனக்கு... பாசம் எனக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism