Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

தமிழகத்தில் காலியாகி இருக்கும் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தினால், ஒன்றை அ.தி.மு.க வெல்ல வாய்ப்பிருக்கிறதாம்.

கிசுகிசு

தமிழகத்தில் காலியாகி இருக்கும் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தினால், ஒன்றை அ.தி.மு.க வெல்ல வாய்ப்பிருக்கிறதாம்.

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியின் கண்ணசைவில்தான் காவல்துறையே இயங்குகிறதாம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, காவல்துறையில் நடந்த அத்தனை டிரான்ஸ்ஃபருக்கும் அவர்தான் காரணகர்த்தாவாம். முதன்மையானவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருப்பதால், மொத்தக் காவல்துறையும் அவருக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கிறதாம். #சந்திரரே... சூரியரே... நட்சத்திர நாயகரே!

தமிழகத்தில் காலியாகி இருக்கும் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தினால், ஒன்றை அ.தி.மு.க வெல்ல வாய்ப்பிருக்கிறதாம். ஒரே கட்டமாக நடத்தினால் மூன்றும் தி.மு.க-வுக்குப் போய்விடுமாம். அதனால் ‘இரண்டு கட்டங்களாக நடத்த உத்தரவிடுங்கள்’ என டெல்லிக்குக் கோரிக்கை வைத்தாராம் மாஜி முதன்மை. ‘அப்படியே ஆகட்டும். ஆனால், அந்த ராஜ்ய சபா பதவியை எங்கள் கட்சியிலிருந்து மத்திய அமைச்சராகியிருக்கும் வேல் புள்ளிக்குக் கொடுக்க வேண்டும்’ என டெல்லி சொல்ல, மாஜி முதன்மைக்கு மயக்கம் வராத குறையாம். #இதுக்கு பருத்திமூட்டை பேசாம குடோன்லயே இருக்கலாமே!

கிசுகிசு

கப்பல் தலைவரை வீடு தேடிப்போய் சந்தித்த முதன்மையானவர், அங்கிருந்து சில வீடுகள் தள்ளியிருக்கும் காமெடி நடிகரையும் சந்திக்க விரும்பினாராம். ஆனாலும், உடனிருந்த அதிகாரிகள் ஏதோ சொல்லித் தடுத்துவிட்டார்களாம். இதற்கிடையில், இந்தத் தகவல் வேறு அதிகாரிகள் மூலமாக காமெடி நடிகருக்குச் சொல்லப்பட, கொரோனா நிதி கொடுப்பதாகச் சொல்லி முதன்மையானவரை நேரில் வந்து சந்தித்தாராம். ‘தயாரிப்பாளர்கள் சங்கம் போட்டிருக்கும் தடையை நான் சரிசெய்யச் சொல்றேன்’ என முதன்மையானவர் உறுதி கொடுக்க, காமெடி நடிகருக்குக் கண்கலங்கிவிட்டதாம். #சிரிக்க வைக்கிறவனின் கண்ணீர்... கவிதை மாதிரி இருக்கே!

சூப்பர் நடிகரின் மருமகனான ஒல்லி நடிகரும் வெளிநாட்டிலிருந்து காரை இறக்குமதி செய்து, அதற்கான வரி விலக்கு வழங்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறாராம். மெர்சலான நடிகரின் கார் விவகாரம் சமீபத்தில் சந்தி சிரிக்க, வழக்கை வாபஸ் பெறும்படி மருமகனுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறாராம் சூப்பர் நடிகர். #பயப்படுறியா குமாரு?

கிசுகிசு

கடந்த தேர்தலில் மாம்பழ மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி விழுந்தபோதும், ஒற்றை ஆளாக வென்று காட்டினார் ராஜ புள்ளி. அதனால் நிச்சயம் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாராம். ஆனாலும், அமைச்சரவைப் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அடுத்து வாரியங்களில் ஏதாவது ஒன்றைக் கைப்பற்ற பல ரூட்டிலும் காய்நகர்த்துகிறாராம். “கடந்த தேர்தலில் அவர் செய்த உள்ளடி வேலைகளையும், சமீபத்தில் அவர் வாங்கிய சொத்து விவரங்களையும் கையில் வைத்திருக்கும் கட்சித் தலைமை அவர் கைவசமிருக்கும் மாவட்டப் பதவியைப் பறிக்காமல் இருந்தாலே பெரிது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #கட்டதுரைக்குக் கட்டஞ்சரியில்ல!


ஜூம் மீட்டிங்கில் தீவிரமாக இருக்கிறார் ‘தம்பிகளின்’ தலைவர். 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் பேசி, உள்ளடி வேலை பார்த்தவர்களைக் களையெடுக்க, தினமும் மணிக்கணக்கில் உரையாடுகிறாராம். விரைவில் தமிழ்நாடு அளவில் நிறைய நிர்வாகிகள் மாற்றம் இருக்குமாம். உள்ளாட்சி மற்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான வாக்குகளை வாங்க நிர்வாகிகள் மாற்றம் உதவும் எனக் கணக்கு போடுகிறாராம் தலைவர். #அண்ணே... கால்குலேட்டர்னா... கணிப்பான்தானேண்ணே?

ஆடியோ பரபரப்பு ஒருவழியாக அடங்க, அடுத்து பேட்டி கொடுத்து பிரளயம் கிளப்பத் தயாராகிவிட்டார் சின்ன தலைவி. தன் சொந்த சேனலுக்கு பிரத்யேகப் பேட்டி கொடுத்திருக்கும் சின்ன தலைவி, அடுத்து பல ஊடகங்களுக்கும் வரிசையாகப் பேட்டி கொடுக்க ரெடியாகிவிட்டாராம். ‘சூடான பேட்டிகளைக் கொடுத்துவிட்டுச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கலாம்’ என நிழலாக நிற்கும் மருத்துவ உறவினர் சொல்ல, அதன் பிறகுதான் மீடியாக்களைச் சந்திக்க ஓகே சொன்னாராம் சின்ன தலைவி. #ஓ... அந்த ஃபர்னிச்சரையும் உடைக்கலாம்னு முடிவு பண்ணியாச்சா... சர்தான்!

டன் கணக்கில் ஸ்வீட் வாங்கிய விவகாரம் மாஜி மில்க் மினிஸ்டருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது. இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் பணி நியமனங்களைச் செய்து பசைபார்த்த விவகாரத்திலும் மாஜிக்கு எதிரான ஆதாரங்கள் ரெடி. ஆனாலும், அவசர நடவடிக்கை வேண்டாம் எனச் சொல்லி அதிகாரிகள் தரப்பை அமைதிகாக்க வைத்திருக்கிறார்களாம். துறையின் தற்போதைய அமைச்சருக்கும் மாஜி குறித்து விமர்சிக்க வேண்டாம் என உத்தரவாம். #ஏனாம்...? பால்னா பொங்குறதும் பாயசம்னா திங்கிறதும் சகஜம்தானே பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism