Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

இலைக் கட்சியின் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கோவைப் புள்ளி, ‘பணிவானவரையும் துணிவானவரையும் டெல்லி தரப்பு சகட்டுமேனிக்கு வறுத்து அனுப்பியதாக’ போனில் பேசிய பேச்சு, அப்படியே பதிவுசெய்யப்பட்டு முக்கிய நிர்வாகிகளுக்குப் பகிரப்பட்டிருக்கிறது. கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டவராகக் காட்டிக்கொள்ளும் ஒருவர், தனிப்பட்ட போன் உரையாடலில் இந்த அளவுக்கு வெளுத்துவாங்கியதில் பணிவானவருக்கும் துணிவானவருக்கும் பயங்கர அதிர்ச்சியாம். விரைவில் நீக்கப்பட்டியலில் கோவைப் புள்ளியின் பெயர் சேர்ந்தாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை என்கிறார்கள். #ஆடியோ திராவிட முன்னேற்றக் கழகம்!

கிசுகிசு

தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைப் பேசி, மீடியாக்களுக்குத் தீனி கொடுக்கும் மத்திய மண்டல மீசை மினிஸ்டரை போனிலேயே கடிந்துகொண்டாராம் முதன்மையானவர். “நான் தலைவர் காலத்துலருந்தே மனசுலபட்டதை பட்டுன்னு போட்டு உடைக்கிற ஆள்தான். அந்தக் காலத்துலல்லாம் டெக்னாலஜி இல்லை. இப்போ செல்போன்லயே எல்லாத்தையும் ரெக்கார்டு பண்ணி சர்ச்சையாக்கிடுறாங்க. இது புரியாம இந்த மனுஷன் என்னையத் திட்டுறார்” என ஆதங்கப்பட்டாராம் மீசை மினிஸ்டர். #இதையும் பதிவாக்கி சர்ச்சையாக்காமல் இருந்தால் சரிதான்!

“அரசுப் பதவிகளில் இல்லாத ஒருவர் எப்படி தொகுதிப் பணிகளில் தலையிடலாம்?” என கோல்டு பிரமுகருக்கு எதிராகக் கொந்தளித்தார் இலைக் கட்சியின் பணிவானவர். இதை உளவுத்துறை நோட்வைக்க, “அவர் சொல்றது நியாயம்தானே… அதுக்காகவாவது கோல்டு பிரமுகருக்கு அரசுப் பொறுப்பு கொடுத்துடுவோம்” என்றாராம் முதன்மையானவர். விஷயம் பணிவானவர் காதுக்குப்போக, “நான் திட்டியதுகூட அந்த மனுஷனுக்கு பாசிட்டிவா மாறுதே…” என நொந்துபோனாராம். #நாம என்ன செஞ்சாலும்... எகனை மொகனையாவே போகுதே!

கிசுகிசு

பணியாற்றும் துறைகளில் பம்பரமாகச் சுழல்பவர் முண்டாசு அதிகாரி. அதனால், மிகுந்த எதிர்பார்ப்போடு மாநகரப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டார் அவர். ஆனால், மாநகர மேம்பாடு குறித்துப் பெரிய அளவில் எந்த முயற்சியும் செய்யாமல் பெயருக்கு வந்து போகிறாராம். ஆக்கிரமிப்பு குறித்த புகார்களைக்கூட அக்கறையாக கவனிப்பதில்லையாம். ‘ஏன் இந்த வேண்டா வெறுப்பு...’ எனப் புரியாமல் குழம்புகிறார்கள் துறைரீதியான இதர அதிகாரிகள். #என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

மனிதவள நிர்வாக பிசினஸை ஒருபக்கம் கவனித்தபடியே அமைச்சராக இருந்த, மூவேந்தர்களில் ஒருவரின் பெயர்கொண்ட மாஜி, தேர்தலில் தோற்ற பிறகு பிசினஸில் பிஸியாகிவிட்டார். ‘எப்போதாவதுதான் அரசியல்’ என்கிற அளவுக்குக் கட்சிக்காரர்கள் சந்திப்பு, விவாதம் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டார். முக்கிய நிர்வாகிகளின் அழைப்புக்குக்கூட பதில் சொல்வது கிடையாதாம். ‘இவருக்கெல்லாம் எதற்கு அரசியல்?’ எனக் குமுறுகிறார்கள் அவர் சார்ந்த பகுதியின் நிர்வாகிகள். #பிசினஸ்ல அரசியல் பண்றதும்... அரசியல்ல பிசினஸ் பண்றதும் சகஜம்தானே!

கிசுகிசு

ஆலை விவகாரத்தில், அரசு நிலைப்பாடு மக்களுக்கு ஆதரவாக மாறியதில், தங்கைத் தலைவியின் போராட்டமும் விடாப்பிடியும் மிக முக்கியமாக இருந்தனவாம். ஆலைத் தரப்பிலிருந்து பல வழிகளில் ஆள் அனுப்பியும் தங்கைத் தலைவி அசைந்து கொடுக்கவில்லையாம். மக்களின் குமுறலாக முதன்மையானவரிடம் நிறைய விஷயங்களைச் சொல்லி ஆலையின் முயற்சிக்கு ஆப்புவைத்தாராம். #கனிவான செயலென்று மொழிகிறார்கள்!

முதன்மையானவரின் செயலாளர்களாக இருக்கும் நால்வரில் ஒருவரின் செயல்பாடு, கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைத் தாண்டி, பலவிதமான தலையீடுகளையும் செய்யும் அவர், பவர் சென்டராக விளங்கும் மருமகனிடம் அரசுத் தரப்பின் அத்தனை தகவல்களையும் அனுதினமும் ஒப்பிக்கிறாராம். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள் மீதமிருக்கும் மூன்று அதிகாரிகளும். #என்னம்மா... இப்பிடி பண்றீங்களேம்மா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism