Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மாரத்தான் மந்திரியிடம், மத்திய மண்டலத்தின் மீசை மந்திரி சில டிரான்ஸ்ஃபர் மனுக்களைக் கொடுத்திருந்தாராம். மாதக்கணக்கில் காத்திருந்தும் டிரான்ஸ்ஃபர் போடப்படவில்லையாம். கடந்த வாரம் கோட்டையில் யதார்த்தமாக மாரத்தான் மந்திரி எதிரே வர, “நான் சொன்ன டிரான்ஸ்ஃபர் விஷயம் என்னய்யா ஆச்சு?” என்றாராம் மீசை மந்திரி. “அடுத்த மாசம் போட்டுறலாம்ணே...” என மாரத்தான் மந்திரி சொல்ல, “நீ போட வேணாம்யா… அந்த டிரான்ஸ்ஃபர் எப்படி நடக்குதுன்னு மட்டும் பாரு...” என மிரட்டலாகச் சொல்லிவிட்டு நடந்தாராம் மீசை மந்திரி. இத்தனைக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலர் பார்க்க நடந்த நிகழ்வாம் இது. #நீ மாஸ்னா... நான் பக்கா மாஸ்!

‘‘தீபாவளிக்கு எங்க படத்துக்குத் தியேட்டர் கிடைக்கலை” என முதன்மையானவரின் வாரிசிடம் நேரில் போய் வருத்தப்பட்டாராம் ‘எதிரி’ படத்தின் ஹீரோ. இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் தன் நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து, “நம்மால் என் நண்பனின் படத்துக்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது. நண்பனின் படத்துக்கும் தியேட்டர்கள் அதிகமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என அந்த ஹீரோவின் முன்னிலையிலேயே உத்தரவு போட்டாராம். விளைவு, அதற்கு முன்பு பேசி வைத்திருந்த தியேட்டர்கள்கூட ‘எதிரி’ படத்துக்குக் கிடைக்காமல் போய்விட்டனவாம்! #இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

அரசு சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளில் தலைமையான அதிகாரிக்கும், செயல் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் தொடர்கிறதாம். தலைமையான அதிகாரியின் வார்த்தைகளையும் தாண்டி செயல் அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துவதுதான் பனிப்போருக்குக் காரணமாம். இது குறித்து அமைச்சர்கள் பலரும் முதன்மையானவர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள். நடவடிக்கை அல்லது சுமுகப் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். #அன்பு உதயமாகட்டும்!

கதர்க்கட்சியுடனான கூட்டணியை உடைத்து, ஆளுங்கட்சியைக் காவிக்கட்சிப் பக்கம் கொண்டு போக எல்லாவித முயற்சிகளையும் எடுக்கிறாராம் டெல்லியின் ஆலோசகர். அதனால்தான், இன்னும் பல பத்தாண்டுகளுக்குக் காவிக் கட்சியை அசைக்க முடியாது என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தாராம். “அதேபோல இன்னும் பத்து வருடங்களுக்கு உங்க பவர் நிலைக்கிற மாதிரி பண்றேன்” என முதன்மையானவருக்கு ஆலோசனை சொல்கிறாராம். சுயாட்சி, மனசாட்சி எனப் போராடிக்கொண்டிருக்கிறாராம் முதன்மையானவர். #ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல அவருக்கு ஆசை காட்டணும் சார்!

கிசுகிசு

துணிவானவருக்கு துவாரபாலகர்களாக இருந்த மணியான இரு மாஜிக்களில், வேலானவர் பணிவானவர் பக்கம் தாவிவிட்டாராம். அதனால்தான் பணிவானவர் பேசுகிற கருத்துகளை அம்மாவின் பெயர் சொல்லும் கட்சிப் பத்திரிகையில் முக்கியத்துவத்துடன் வெளியிடச் சொன்னாராம். கட்சி விவகாரத்தில் வெளிப்படையாகப் பேசுகிற அளவுக்கு வேலானவர் துணிய, துணிவானவர் தரப்பிலிருந்து வந்த தூதுப்படை சற்றே அமைதியாக்கி வைத்திருக்கிறதாம். #யூ டூ புரூட்டஸ்!

இலைக்கட்சிக்குள் நடக்கும் யுத்தத்துக்கு முழுப் பின்னணியில் இருப்பவர், காவிக் கட்சியின் வலிமையான தலைவர்தானாம். கடந்த தேர்தலில், தான் சொன்ன யோசனைகளை ஏற்காமல் விடாப்பிடி காட்டிய இலைக்கட்சியின் துணிவானவர் மீது வலிமையான தலைவருக்கு இன்னமும் கோபம் குறையவில்லையாம். அதனால்தான், பணிவானவரைத் தூண்டிவிட்டுப் பாய்ச்சலைக் காட்டச் சொல்கிறாராம். “நீங்க சொன்னால் நான் என்ன வேணும்னாலும் பண்றேன். ஆனா, நான் உங்களை கான்டாக்ட் பண்ணுறப்பல்லாம் நீங்க தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிடுறீங்களே…” எனப் புலம்பியிருக்கிறார் பணிவானவர். “இனி அப்படி இருக்காது” என உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் வலிமையான தலைவர். #ஹிந்தியில் பேச எண் இரண்டை அழுத்தவும்!