Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

கட்சிப் பதவியைப் பறித்து இரட்டையர்கள் எடுத்த நடவடிக்கை, இலைக் கட்சியின் விபூதி எம்.பி-யைக் கொஞ்சம்கூடக் கவலைப்படவைக்கவில்லையாம். “உங்களைப் புகழ்ந்து பேசியதால் எம்.பி பதவியை ராஜினாமா செய்யச் சொன்னாலும் நான் செய்வேன்” என ஆளுங்கட்சியின் டெல்லி புள்ளிகளிடம் சர்வசாதாரணமாகப் பேசுகிறாராம். இலைக் கட்சி பக்கம் இருந்துகொண்டே ஆளும் புள்ளிகள் மூலமாக அனைத்தையும் சாதித்துக்கொள்ளும் இவரின் பக்குவத்தைச் சொல்லிச் சொல்லி வியக்கிறார்கள் டெல்லி புள்ளிகள். #ஆமாமா... அரசியல்வாதிகள்னாலே தியாகிகள்தானே!

கிசுகிசு

பொங்கல் பரிசுத்தொகுப்பில் நிகழ்ந்த குளறுபடிகளை மக்கள் மத்தியில் பெரிதாக அம்பலப்படுத்தி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான சேதத்தை ஆளும் தரப்புக்கு ஏற்படுத்தக் கிடைத்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என வருந்துகிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். ஆனால், கட்சியின் முன்னணி நிர்வாகிகளோ, முன்னாள் அமைச்சர்களோ ஆளும் தரப்புக்கு எதிராகப் பேசவே அஞ்சுவதாக ரொம்பவே ஆதங்கப்பட்டிருக்கிறார் துணிவானவர். சொந்த மாவட்ட நிர்வாகிகளைச் சமீபத்தில் சந்தித்தவர், கோபத்தில் கொட்டித் தீர்த்துவிட்டாராம். “இந்த வாழ்க்கையை உங்களுக்குக் கொடுத்தது இந்தக் கட்சிதான். சோறுபோட்ட கட்சியை மறந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்காதீங்க. நன்றி மறந்தவங்க, வாழ்க்கையில வென்றதா சரித்திரமே இல்லை” என்றாராம். “அவரை அவரே திட்டிக்கிற மாதிரி இருந்தது…” எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அந்த மாவட்ட நிர்வாகிகள். #ஃப்ரெண்டே.... ஃபீலாய்ட்டாப்டி!

கிசுகிசு

கடவுளின் தேசமான மாநிலத்தின் பக்கம் ஒதுங்கி, இரண்டு வாரச் சிகிச்சைகளைச் செய்துகொள்ள ஆயத்தமானாராம் அண்ணன் தலைவர். இரண்டு நாள்கள் சிகிச்சை நடந்தபோதே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட, “என்னோட நிம்மதியைக் குலைக்கவே இப்படி அவசரகதியில் அறிவிச்சுருக்காங்க. என்னைய கண்காணிக்கிறதே இந்த அரசுக்கு வேலையாப்போச்சு” எனச் சொல்லி சிகிச்சைகளைச் சீக்கிரம் முடிக்கச் சொன்னாராம். கவரேஜ் இல்லாத மலைப்பகுதிக்குச் சென்று மனரீதியான பல சங்கடங்களுக்குத் தீர்வுகாண நினைத்தவரை, பாதியிலேயே திரும்பிவர வைத்துவிட்டது தேர்தல் அறிவிப்பு. #படுத்துறாய்ங்களே என்னிய... அவ்...!

கிசுகிசு

“கட்சிப் பதவியைப் பறித்ததுகூடப் பரவாயில்லை, ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால்…’ என அதில் குறிப்பிட்டதுதான் மனதை நொறுக்கி விட்டது” என ஆதங்கப்படுகிறாராம் தம்பி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு கிளம்பியபோதே முதன்மையானவரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தாராம். அதையும் மீறி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படக் காரணம் அவரை, தங்கைத் தலைவியின் ஆதரவாளராகத் தலைமை நினைப்பதுதானாம். “நான் தங்கை பக்கம் இல்லை. உங்க பக்கம்தான் என இனி நெஞ்சைப் பிளந்து காட்டினால்தான் உண்டு” எனச் சமீபத்தில் வெடித்தாராம் தம்பி எம்.எல்.ஏ. #செஞ்சோற்றுக் கடன் தீர்க்க...

கிசுகிசு

“குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படாத நிலையில், பள்ளிகள் திறப்பு அவசியமா?” என அதிகாரிகள் வட்டாரத்தில் ஆதங்கக் குரல் ஒலிக்கிறது. ஆனாலும், கற்பிக்கும் துறையின் அமைச்சரிடம் யார் போய் இந்த ஆதங்கத்தைச் சொல்வது என்கிற தயக்கம் நீடிக்கிறது. முதன்மையானவருக்கு மிக நெருக்கமாக, கற்பிக்கும் அமைச்சர் செல்வாக்கு பெற்றிருப்பதால், உயரதிகாரிகளும் உண்மை நிலவரத்தைச் சொல்லாமல் அமைதி காக்கிறார்களாம். “சென்னையில் பரவிய காய்ச்சல் அடுத்து கிராமப்புறப் பகுதிகளை நோக்கியும் தீவிரமாகியிருக்கிறது. குழந்தைகள் நெருக்கி அமர்ந்து படிக்கவேண்டிய சூழல் அபாயத்தை உணராமல், அமைச்சர் பள்ளித் திறப்பில் அவசரப்படலாமா?” என மனதுக்குள்ளேயே குமைகிறார்கள் கோட்டையிலிருக்கும் அதிகாரிகள். #கடந்தகாலத்திலிருந்து ஆட்சியாளர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!

கிசுகிசு

கதர்க் கட்சி சார்பில் மூன்று மேயர் சீட் கேட்கப்பட, ‘ஒன்று கிடைத்தாலே பெரிது’ எனச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாராம் மீசை மினிஸ்டர். கர்ஜிக்கும் கட்சி, புயல் தலைவரின் கட்சி தலா ஒரு மேயர் சீட் கேட்கிறார்களாம். தங்களுக்கான பங்கீட்டைத் தோழர்களும் கேட்க, கவுன்சிலர் தேர்தலுக்குப் பிறகு, மேயர் பதவிக்கான முடிவுகளை எடுக்கலாம் எனச் சொல்லிவிட்டதாம் ஆளும் தலைமை. இதை, ‘முதன்மையானவரின் ராஜ தந்திர நகர்வு’ என்கிறார்கள் சீனியர் புள்ளிகள். #இலவு காத்த கிளி... இலவு காத்த கிளினு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism