Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

பல வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் முன்னாள் ‘குட்கா’ புகழ் அரசியல் புள்ளி, ஆளும்கட்சியை அனுசரிக்க, பல வகையில் தூதுவிட்டாராம். சிலரிடம் பணரீதியான பேரங்களையும்கூட பேசினாராம். எதிர்பாராத திருப்பமாக, ‘கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு’வில் அவருக்கு இடம் கிடைக்க, தன் தூதுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாக ஆள் ரொம்பவே குஷியாகிவிட்டாராம். ‘தன் மீதான வழக்குகள் இனி சூடுபிடிக்காது’ எனக் குடும்பத்தினரிடம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார். #வெள்ளந்தியான மனுஷனா இருக்காரே!

கிசுகிசு

மில்க் மினிஸ்டரின் டிரைவர், தலைமைச் செயலக காவலருடன் தகராறு செய்ய, விஷயம் வீடியோவாக வைரலாகிவிட்டது. ‘‘இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?’’ எனப் பெரிய இடத்திலிருந்து டோஸ் விழுந்திருக்கிறது. ‘‘இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில இப்பத்தாண்டா பதவிக்கு வந்திருக்கேன். அதைக் காலி பண்ணிடாதீங்கடா’’ என டிரைவர், உதவியாளர் உள்ளிட்ட பலரிடமும் கையெடுத்துக் கும்பிட்டாராம் மிஸ்டர் மில்க். #அப்ரசன்டி பாய்ஸ்... ஃபர்னிச்சர் பத்திரம்ப்பா!

25 லட்சமா, 2.5 கோடியா எனக் கிளம்பிய குளறுபடியில், ரொம்பவே நிம்மதி இழந்துவிட்டாராம் வலிமையான நடிகர். ‘‘அரசுத் தரப்பில் இருக்கிற அதிகாரிகள் இவ்வளவு மெத்தனமாகவா இருப்பது... தவறான தகவலை வெளியிட்டது அவர்கள். இதில் ஏதோ நான் தவறு செய்ததுபோல் ஆகிவிட்டதே?’’ எனப் புலம்பித் தீர்த்திருக்கிறார். ஒருகட்டத்தில், ‘‘வெளியான தகவலில் சொல்லப்பட்டதுபோல 2.5 கோடியையே நிவாரணமாகக் கொடுத்துவிடலாமா?’’ நடிகர் கேட்க, போராடி அவரைச் சாந்தப்படுத்தியிருக்கிறது குடும்பத் தரப்பு. #சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்!

கிசுகிசு

அதிகாரிகள் மாற்றத்தில் தன் பெயர் தொடர்ந்து தப்பிப்பதைப் பார்த்து, ஹெல்த் அதிகாரிக்குப் பெரிய ஆச்சர்யம். ‘‘அவரை மட்டும் ஏன் விட்டுவெச்சுருக்கீங்க?’’ எனக் கோட்டை வட்டாரத்திலும் கேள்வியாம். ‘‘கொரோனா நெருக்கடிகளை அவர்தான் தொடர்ந்து கவனிக்கிறார். இந்த நேரத்தில் அவர்தான் இந்தத் துறைக்குத் தேவை’’ எனச் சொன்னாராம் முதன்மையானவர். #அவரவருக்கு அவரவர் நெருக்கடி!

மாநகரப் பொறுப்புக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் அதிகாரி, ‘‘கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டிருப்போருக்கு உதவ, அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்யலாமா?’’ எனக் கேட்டாராம். பதில் வர தாமதமாகவே, தன்னார்வலர்கள் 2,000 பேரை ஒரே நாளில் ஏற்பாடு செய்து அசத்திவிட்டாராம். இப்போதுதான் அவர் உதவி கேட்ட தகவலே உரியவர்களை எட்டியிருக்கிறது. #ரொம்பத் தாமதம்!

நல்ல துறைகள் கிடைக்காததால், பல மாண்புமிகுக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை மனதில்வைத்து, முருகப் பிரமுகரிடம் கேரளாவில் அமைந்திருக்கும் புது அமைச்சரவையைச் சுட்டிக்காட்டினாராம் முதன்மையானவர். ‘‘அங்க பாருங்க... பழைய ஆட்களுக்கு அமைச்சரவையில் இடமே இல்லை. நான் என்ன அப்படியா பண்ணியிருக்கேன்?” என முதன்மையானவர் கேட்க, ‘‘இப்படி டம்மி பதவிகளைக் கொடுத்ததுக்கு நீங்க அப்படியே பண்ணியிருக்கலாம்” என்றாராம் முருகப் பிரமுகர். #துரைன்னாலே பிரச்னைதான். சாரி, துறை!

கிசுகிசு

சீறும் கட்சியின் வேட்பாளர்களில் நிச்சயம் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர், பெயரிலேயே அரசைக்கொண்ட வேட்பாளர். அவர் தோற்றது கட்சிக்குள் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ‘கூட்டணிக் கட்சியின் உள்ளடி வேலைதான் தோல்விக்குக் காரணம்’ எனச் சிலர் சொன்ன குற்றச்சாட்டை ஆளுங்கட்சியின் ஆளுமைப் புள்ளியின் கவனத்துக்குக் கொண்டுபோனார்களாம். ‘‘சம்பந்தமே இல்லாத தொகுதியில் அவரை ஏன் நிற்கவெச்சீங்க? அவர் தோற்க நீங்கதான் காரணம்’’ எனக் குற்றச்சாட்டு சொன்னவர்களையே குடைந்தெடுத்துவிட்டாராம் ஆளுமைப் புள்ளி. #கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா...