Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

சென்னையிலுள்ள குறிப்பிடத்தக்க கல்லூரிகளில் ஒன்று, குடும்பப் பஞ்சாயத்தில் சிக்கித் தவிக்கிறது. ‘தீர்வு ஏற்படுத்தித்தருகிறோம்’ என இறங்கியிருக்கும் ஆளுங்கட்சியின் நிழல் புள்ளிகள், வேண்டுமென்றே சிக்கலைப் பெரிதாக்குகிறார்களாம். பஞ்சாயத்தைப் பெரிதாக்கி, கல்வி நிறுவனத்தில் தங்களுக்கும் ஷேர் வாங்குவதுதான் நிழல் புள்ளிகளின் திட்டமாம். இது தெரியாமல் அவர்களையே மலைபோல் நம்பியிருக்கிறாராம் கல்லூரி நிறுவனர். #பத்திரமா ஆத்தக் கடக்கணும்னு முதலை மேல ஏறினானாம்!

சூழலைக் காக்கும் மாண்புமிகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். சூழலைக் காக்கும் அமைப்பு ஒன்றின் நிர்வாகிகளோடு கலந்து பேசி, உரிய தெளிவோடு அத்தனை திட்டங்களும் தொகுக்கப்பட்டனவாம். இந்த விஷயத்தை முதன்மையானவரிடமும் மறைக்காமல் சொன்னாராம் அந்த மாண்புமிகு. ‘ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறையில் தெளிவான ஆட்களோடு இப்படிக் கலந்துபேசி தெளிவு பெற வேண்டும்’ என அதிகாரிகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார் முதன்மையானவர். #மெய்யாலுமா... நண்பர்களே?!

கிசுகிசு

“வெளிநாட்டுச் சிகிச்சை முடிந்து திரும்பும்போது, பழைய கம்பீரத்துடன் அவரை அழைத்துவருவேன்!” எனச் சொல்லி கப்பல் தலைவரை சிகிச்சைக்கு அழைத்துப் போனார் அவர் மகன். உடல்நல சிகிச்சையோடு மட்டும் அல்லாமல், நன்கு பேச்சு வருவதற்கான பயிற்சியையும் கப்பல் தலைவருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம். ‘அப்படியே செய்வினைச் சிக்கலுக்கும் ஏதாவது தீர்வு பண்ணுப்பா’ என மகனிடம் சொன்னாராம் கப்பல் தலைவர். தன் உடல்நலப் பிரச்னைக்கு செய்வினைதான் காரணம் என இப்போதும் நினைக்கிறாராம் அவர். #கறுப்பு நிலா... நீதான் கலங்குவதேன்!

இதுநாள் வரை வாடகை வீட்டில்தான் வசித்துவருகிறார் அண்ணன் தலைவர். இந்த வருடமாவது சொந்த வீடு வாங்க நினைக்கிறாராம். ஆனால், அவர் எங்கே போய் வீடு பார்த்தாலும் அருகே இருக்கும் வீட்டினர், ‘அவர் இங்கே வந்தால் இந்த ஏரியாவே பரபரப்பாகிடும். கார் நிறுத்தக்கூட இடம் கிடைக்காது’ எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்களாம். இதனால் சொந்த வீடு கனவு தள்ளிக்கொண்டே போகிறது அண்ணன் தலைவருக்கு. #என்னப்பனுக்கு ஆறு வீடு... எனக்கில்லையா சார்... ஒரு வீடு!

கிசுகிசு

வீடியோ சர்ச்சையில் தன் பெயரும் வந்துவிடக் கூடாது எனத் தகிடுதத்தம் போடுகிறாராம் காவிக் கட்சியின் வேல் புள்ளி. “நான் எந்தத் தப்பும் பண்ணலை. ஆனா, இந்த நேரத்தில் கிராபிக்ஸ் பண்ணி வெளியிட்டால்கூட என் பதவிக்குச் சிக்கலாகிவிடுமே...” என்கிறாராம் நெருங்கியவர்களிடம். “உங்களுக்குச் சிக்கலைக் கொடுக்க வீடியோ அளவுக்குப் போக வேண்டியதில்லை. உங்க ஆடியோ போதும்” எனச் சொல்லி வேல் புள்ளியின் வயிற்றில் புளியைக் கரைத்தார்களாம் ஸ்டிங் ஆபரேஷன் செய்தவர்கள். #நீங்க ஊதவே வேணாம்!

அன்பான மாண்புமிகு வீட்டில், அனுதினமும் கூடுகிற கூட்டம் மற்ற மாண்புமிகுக்களை மிரளவைக்கிறது. ‘சார் எல்லாரையும் பார்த்துட்டுத்தான் கிளம்புவார்’ என உதவியாளர் சொல்ல, மணிக்கணக்கில் பெரும் கூட்டம் காத்துக்கிடக்கிறது. இதற்கிடையில் வீட்டு வாசலை ஒட்டி ஒருவர் பொன்னாடை விற்பனை செய்யும் கடையைப் போட, ‘எந்த அமைச்சரின் வீட்டிலும் இப்படிப்பட்ட அமர்க்களம் நடக்கலைப்பா’ எனத் தங்களுக்குள் பொருமுகிறார்கள் மற்ற மாண்புமிகுக்கள். #அரசியல்னாலே தியாகிகள்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism