Published:Updated:

கிசுகிசு - தம்பி கொடுத்த பல்ப்!

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, எம்.பி-க்கள் ஒதுக்கீடு மூலமாகக் கொடுக்கப்படும் சீட்டுகளுக்கான வசூலில் கட்சித் தலைமைக்கும் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவாம்.

விரல் நடிகர் நீண்டகாலத்துக்குப் பிறகு வெற்றிப்படம் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அண்ணன் தலைவரிடமிருந்து அவருக்கு அழைப்பாம். வாழ்த்து சொல்லத்தான் போன் பண்ணுவார் என எண்ணி விரல் நடிகர் அட்டெண்ட் பண்ண, “ஒரு அட்டகாசமான கதைவெச்சுருக்கேன். நீ தேதி கொடுத்தால், அருமையா பண்ணிடலாம்’ என்றாராம். ‘நன்றிண்ணே... நன்றிண்ணே…’ என அண்ணன் பாணியிலேயே பதில் சொல்லிச் சமாளித்தாராம் விரல் நடிகர். #‘தம்பி’ கொடுத்த பல்ப்!

வாரிசு அரசியலைத் தாக்கி டெல்லி புள்ளிகள் வரிசையாகக் கொந்தளிக்க, முதன்மையானவர் சற்றே கவனமானாராம். டெல்லிக்கு மீடியேட்டராக இருக்கும் மில்க் புள்ளியிடம் விசாரிக்கச் சொன்னாராம். “உத்தரப்பிரதேசத் தேர்தலுக்காக நாங்கள் நடத்தும் வாரிசு குறித்த அட்டாக் அது…” என விளக்கம் சொல்லப்பட, அதன் பிறகே முதன்மையானவருக்கு நிம்மதி பிறந்ததாம். சாதாரண ஆட்களைப் பெயரளவில் பதிலடி கொடுக்கவைத்த பின்னணியும் அதுதானாம். #பயந்துட்டீங்களா..? சும்மா லூலூலாயி!

சமீபத்தில் சர்ச்சை கிளப்பிய படத்தில், காவல்துறையினரின் கொடூரச் சித்ரவதை காட்சியாக்கப்பட்டிருந்தது. அப்போது உயரதிகாரியாக இருந்தவரின் உத்தரவின்பேரிலேயே இந்தச் சித்ரவதை நடந்ததாக இப்போது பரபரப்பு கிளம்ப, மனிதர் இந்தச் செய்தியைச் சைலன்டாக்கப் படாதபாடு படுகிறாராம். ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ எனச் சிலர் இதைப் பெரிதாக்க, எந்த நேரத்திலும் சர்ச்சை வெடிக்கலாம் என்கிறார்கள். #உண்மை கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால், ஒருபோதும் சாகாது!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, எம்.பி-க்கள் ஒதுக்கீடு மூலமாகக் கொடுக்கப்படும் சீட்டுகளுக்கான வசூலில் கட்சித் தலைமைக்கும் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவாம். உதவி கேட்டுப் போனவர்களிடம் சில எம்.பி-க்களே இந்த விஷயத்தைச் சொல்ல, ‘உண்மையிலேயே தலைமை உத்தரவிட்டிருக்கிறதா... இல்லை இவர்களே அமுக்கத் துடிக்கிறார்களா?’ எனக் கட்சிக்காரர்கள் விசாரித்துவருகிறார்கள். உண்மை என்னவென்று இன்னமும் விளங்கியபாடில்லை. #சாமி... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

கிசுகிசு - தம்பி கொடுத்த பல்ப்!

மீசை மினிஸ்டருக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிகர்தண்டா பகுதி எம்.பி-க்கும் எவ்வித முன் மனத்தாங்கலும் இல்லையாம். அதையும் தாண்டி மீடியாக்கள் மத்தியில் எம்.பி-யைத் தரக்குறைவாக மீசை மினிஸ்டர் பேசியது, கட்சித் தலைமை வரை காரசாரமாக அடிபடுகிறது. ‘மீடியாக்கள் எழுப்பிய தேவையற்ற கேள்விதான் மீசை மினிஸ்டரை ஆத்திரப்படுத்திவிட்டது’ என ஆதரவாளர்கள் சமாதானம் சொன்னார்கள். மினிஸ்டர் தரப்பிலிருந்து சம்பந்தப்பட்ட எம்.பி-யிடம் ‘சாரி’ சொல்லப்படவில்லை என்பது சர்ச்சையான நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மீசை மினிஸ்டர் அது குறித்த வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், மிக கவனமாக ‘மன்னிப்பு’ என்கிற வார்த்தையைத் தவிர்த்து, ‘பொருத்தருள்க’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். #மன்னிக்கிறவன் மனுஷன்... மன்னிப்புக் கேக்குறவன் பெரிய மனுஷன்!

பிரகாச நடிகரின் அடுத்த படத்தை, சூரிய நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்நிலையில், வட மாவட்டங்களில் நடிகருக்கு எதிராகக் கொந்தளிப்பு அடங்காமல் இருப்பதால், தங்களின் படத்துக்கும் சிக்கல் வருமோ என யோசிக்கிறது சூரிய நிறுவனம். ரிலீஸ் உரிமையை ஆளும் கட்சியின் வாரிசு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டால், அவர்களே பார்த்துக்கொள்வார்கள் எனக் கணக்கு போடுகிறதாம். ஒருவேளை இந்தக் கணக்கு தவறினால், நடிகருக்கும் பழக்கட்சித் தலைவருக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும் சூரிய நிறுவனம் தயாராகிவிட்டதாம். #எதற்கும் துணிந்தவர்கள்!

சமீபத்தில், கற்பிக்கும் துறையின் அமைச்சர் வெள்ள சேதங்களைப் பார்வையிடப் போயிருந்தார். அப்போது ஒரு விவசாயி, ‘வயலில் இறங்கிப் பார்த்தாத்தானே எங்க அவலம் புரியும்’ எனச் சொல்ல, விவசாயிக்கு எதிராக வசவு வார்த்தைகளைக் கொட்டிவிட்டுக் கிளம்பினார் அமைச்சர். பாதிக்கப்பட்ட விவசாயி, மீடியாக்களைப் பார்க்கப்போகிறார் எனப் பரபரப்பு கிளம்ப, ‘எப்படியாவது அவரை அமைதிப்படுத்துங்க’ என லோக்கல் நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்தாராம். பிறகுதான் விவசாயி விஷயம் ‘கப்சிப்’ ஆனதாம். #‘பெயர்’ அளவுக்கு மட்டும் அன்பு இருந்தால் போதுமா?