Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான கூட்டணி ஒதுக்கீடுகளை கவனிக்க, நால்வர் அணியை அமைத்தது ஆளும் தரப்பு. இரு அமைச்சர்கள், இரு எம்.பி-க்கள் என அமைக்கப்பட்ட இந்தக் குழு, கறார் காட்டவும், கோபப்படவும், மிரட்டவும், வழிக்குக் கொண்டுவரவும் செய்கிறவிதமாக உருவாக்கப்பட்டதாம். முடிந்த மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைத்து ஒதுக்கீடு செய்யும்படியும், அதில் ஏதாவது மன வருத்தம் வந்தால் கூட்டணியே தேவையில்லை எனச் சொல்லும்படியும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாம். சிடுசிடு முகத்தோடு அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறது நால்வர் குழு. #நாலு பேரும் நாலுவிதமா கோபப்படுவாங்களோ!?

கிசுகிசு

ஜெயலலிதா நினைவுநாளில், `வலிமை’ படத்தின் அம்மா சிறப்பு குறித்த பாடல் ரிலீஸானது. ஜெ. பிறந்தநாளில் ‘வலிமை’ படம் ரிலீஸானது. இதைவைத்து, அஜித்குமார் அரசியலுக்கு வர எண்ணுகிறாரோ என ஜெ-யின் உதவியாளர் பூங்குன்றன் சமூக வலைதளங்களில் பதிவிட, விஷயம் பெரிதாகப் பற்றிக்கொண்டது. ‘அரசியலுக்கு வருகிற எண்ணம் இல்லை’ என இதற்கு அஜித் மறுப்பு தெரிவித்தாலும், இந்த விஷயத்தில் பூங்குன்றன் ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என இலைக் கட்சியின் துணிவானவருக்கு ஏக சந்தேகமாம். இதன் பின்னணியில், வேறு ஏதும் திட்டங்கள் இருக்கின்றனவா எனவும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். #சர்ச்சை இல்லாத ‘வலிமை’ கேட்டேன்!

கிசுகிசு

‘போர் நடக்கும் நேரத்தில், புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் ஏதும் சர்ச்சையாக வாய்ப்பிருக்கிறது…’ எனத் தயங்கினாராம் கதர்க் கட்சியின் இளையவர். இது குறித்து முதன்மையானவருக்கு `நோட்’ வைத்தது உளவுத்துறை. முதன்மையானவரும் நிகழ்வைத் தள்ளிவைக்கலாமா எனக் கலந்தாலோசிக்க, அதிகாரிகள் தரப்பு மறு தேதி பார்க்கத் தொடங்கியதாம். ஆனால், முதன்மையானவருக்கு அருகிலேயே வலம்வரும் புகழ்பாடிகள், ‘உக்ரைன் போருக்கும், உள்ளூர் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?’ எனச் சமாளித்து, சொன்ன நாளில் விழாவை நடத்தவைத்தார்களாம். #கேயாஸ் தியரி தெரியுமா பாஸ்?

கிசுகிசு

சினிமாத்துறையில் சமீபத்திய பொறுப்புக்கு வந்தவர்கள், முதன்மையானவரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்களாம். ‘வாழ்த்து பெற…’ எனப் பெயரளவுக்குக் காரணம் சொல்லப்பட்டிருந்தாலும், திரைத்துறை சார்பாக முதன்மையானவருக்கு விழா எடுப்பது குறித்துப் பேசத்தான் இந்தச் சந்திப்பு முயற்சியாம். கூடவே, பல வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருக்கும் தமிழகத் திரைப்பட விருதுகளை வழங்க ஏற்பாடு செய்கிற கோரிக்கையையும் வைக்க நினைக்கிறார்களாம். #விழா உங்களுக்கு... விருது எங்களுக்கு!

கிசுகிசு

சின்ன தலைவியின் நிதி நிர்வாகங்களை கவனிக்கும் விவேகமான புள்ளிக்கு எதிராக, ஏதாவது பூதாகர விஷயங்களைப் பரப்புங்கள் என அவருக்கு நெருக்கமான சில உறவினர்களே ஊடகங்களை அணுகிப் பேசுகிறார்களாம். சின்ன தலைவிக்கும், விவேகமான புள்ளிக்கும் இடையே இடைவெளியை உருவாக்கத்தான் இந்த முயற்சிகள் நடக்கின்றனவாம். இது தெரிந்து முன்கூட்டியே சின்ன தலைவியிடம் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் சொல்லி, அதற்கான விளக்கத்தையும் ஒப்பித்துவிட்டு வந்தாராம் விவேகமான புள்ளி. #விவகாரமான புள்ளிதான்!

கிசுகிசு

முக்கியத் துறைகளுக்கு மாற்றக் கோரி, சீனியர் மினிஸ்டர்கள் பல காலமாகக் கோரிக்கை வைத்தவண்ணம் இருக்கிறார்கள். ‘பார்க்கலாம்…’ என்று மட்டுமே பதில் சொல்லிவந்த முதன்மையானவர், கடந்த சில நாள்களாக யாருக்கு, எந்தத் துறையை ஒதுக்கலாம் என ஆலோசனை நடத்துகிற அளவுக்கு வந்துவிட்டாராம். கண்ணீர் அமைச்சருக்கும், பூட்டு மாவட்டத்து அமைச்சருக்கும் பொறுப்பு மாற்றம் செய்யத் திட்டமிட்டு வந்த நிலையில், மே மாதம் வாரிசுப்புள்ளியை மாண்புமிகுவாக்கும்போதே அமைச்சரவை மாற்றத்தையும் வைத்துக்கொள்ளலாம் என இல்லத்துத் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டதாம். ‘கடைசி நேரத்தில் இப்படித் தள்ளிப்போயிடுச்சே…’ எனக் கவலைப்படுகிறார்களாம் சீனியர் மினிஸ்டர்கள். #காத்திருந்து... காத்திருந்து...