Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

முதன்மையானவருக்குப் பக்கபலமாக இருக்கும் இனிஷியல் அமைச்சருக்கும், அந்த இடத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ‘பவர்ஃபுல்’ அமைச்சருக்குமிடையே மோதல் தூள்பறக்கிறதாம். எந்தக் கட்சிக்குப் போனாலும் கிச்சன் கேபினட்டின் ஆதரவைப் பெறுவது ‘பவர்ஃபுல்’ அமைச்சரின் வழக்கம். ஆனால், இனிஷியில் அமைச்சரின் செல்வாக்கைத் தாண்டி ‘பவர்ஃபுல்’ அமைச்சரால் உள்ளே நுழைய முடியவில்லையாம். இந்நிலையில், இனிஷியல் அமைச்சரைப் பெண் சம்பந்தமான சர்ச்சையில் சிக்கிய வராகச் சித்திரித்து, செய்திகளைக் கசியவிட்டாராம் ‘பவர்ஃபுல்’ அமைச்சர். முதன்மையானவரிடமும் சரியான நேரத்தில் போட்டுக்கொடுத்து, சர்ச்சைக்குரிய பெண்மணியைக் கட்சியை விட்டும் கட்டம்கட்ட வைத்துவிட்டாராம். ‘இந்த மாதிரி எத்தனையோ பேரைக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்…’ எனப் புலம்பும் இனிஷியல் அமைச்சர், சீக்கிரமே இதுகுறித்து முதன்மையானவரிடம் பேசப்போகிறாராம். ‘ஜெயிக்கப்போவது இனிஷியலா, ‘பவர்ஃபுல்லா?’ என அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பான பட்டிமன்றமே நடக்கிறது. #அமைதிப்படை பார்ட் 3!

கிசுகிசு

முதன்மையானவரை வரவேற்க, மதுரை விமான நிலையத்தில் ஆளும்கட்சியின் அத்தனை நிர்வாகிகளும் குழுமியிருக்க, புதிதாகப் பொறுப்பேற்ற மேயரை மட்டும் காணவில்லையாம். ‘முதல்வரின் வருகையையே புறக்கணிக்கிற அளவுக்குப் போய்ட்டாரா?’ என விசாரணைகள் பறந்ததாம். ‘உடல்நிலை சரியில்லை’ எனக் காரணம் சொல்லப்பட்டாலும், ‘உள்ளூர் அமைச்சரின் உத்தரவின்றி எதையும் செய்ய நினைக்காத மேயரின் மனநிலைதான்’ உண்மையான காரணமாம். அன்றைய நாளில், உள்ளூர் அமைச்சர் வேறு பணிக்காக வெளியூர் போயிருந்தாராம். தான் பதவி பெறக் காரணமான அவர் இல்லாத இடத்தில், எப்படிப் போய் நிற்பது என்றெண்ணித்தான் விமான நிலையத்துக்கு மேயர் செல்லவில்லையாம். ‘இதுகாலம் வரை கட்சிக்குள் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா?’ எனக் குமுறுகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். #உடல் நிலையோ... மனநிலையோ... மொத்தத்துல சரியில்ல!

கிசுகிசு

இலைக்கட்சியில் நடக்கும் பலவிதமான குளறுபடி களுக்கும் காரணம் பணிவானவர்தான் என முக்கிய நிர்வாகிகளும் மாஜிகளும் உறுதியாக நினைக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தின் ட்ரீட்மென்ட் புள்ளியும், உப்புக்குப் பெயர்போன ஊரின் மாஜியும் சின்ன தலைவிக்கு எதிராகத்தான் இத்தனை காலம் இருந்தார்கள். ஆனால், பணிவானவரின் உள்ளடி வேலைகளும் துணிவானவரின் உதாசினமும் இந்த இருவரையும் ரொம்பவே ஆத்திரத்தில் தள்ளியிருக்கிறதாம். அதனால், சின்ன தலைவியைக் கட்சிக்குள் கொண்டுவர பெரிய அளவிலான ஒருங்கிணைப்பை இந்த இருவருமே முன்னெடுக்கிறார்களாம். இதற்கான முதல் ஆளாகக் கொங்கு மண்டலத்தின் தங்கமான மாஜியிடம் இருவரும் பேசினார்களாம். ‘உங்கள் எண்ணம்தான் சரி. நானும் அதற்கு உடன்படுகிறேன்’ எனத் தங்கமான மாஜி சொல்ல, தடதடவென மற்ற நிர்வாகிகளை மசியவைக்கும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்களாம் இருவரும். #சட்டுபுட்டுனு முடிங்க பாஸூ!

கிசுகிசு

இரவு நேரங்களில், வாரிசின் போனிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ் பறக்கிறதாம். ‘அதை மாற்று… இதைச் செய்…’ எனச் சகட்டுமேனிக்குக் கறார் உத்தரவுகளாம். உயரதிகாரி களிடம் கலந்து பேசி செய்ய வேண்டிய விஷயங்களை, வாரிசு சொன்னதற்காக இஷ்டத்துக்கு எப்படி செய்ய முடியும் எனத் திண்டாடியிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்நிலையில்தான் வாரிசின் போனிலிருந்து வருகிற எஸ்.எம்.எஸ், அவருடைய கவனத்துக்கு அப்பாற்பட்டு சிலரால் அனுப்பப்படுகிற தகவல் என வெளியே கசிந்திருக்கிறது. கடந்த ஆட்சியிலும் நிழல் சக்தியாக இருந்த, நான்கெழுத்து இளைய புள்ளிதான் வாரிசின் செல்போனைக் கையிலெடுத்து இப்படி கபடி ஆடுகிறாராம். தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகக் குமுறிக் கொட்டுகிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். #ஒரே ஒரு ஃப்ரெண்ட வெச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே... அய்ய்ய்யய்யோ!

கிசுகிசு

கூட்டணி தர்மத்தைத் தாண்டி உள்ளாட்சிப் பொறுப்புக்கு வந்த நிர்வாகிகளை, பதவி விலகச் சொல்லி முதன்மையானவர் அறிக்கை வெளியிட்டார். ‘சட்டப்படி இந்த அறிக்கை மிகத் தவறானது’ என இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துப் பொதுநல வழக்குப் போட வைக்கப் போகிறார்களாம் சிலர். காவிக் கட்சியின் அறிவுஜீவிகள்தாம் இதன் பின்னணியில் இருக்கிறார்களாம். ‘ஜனநாயக அடிப்படையில் தேர்வானவர்களை, முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமற்றது. கூட்டணி முக்கியம் என்றால், ஜனநாயகம் முக்கியம் இல்லையா?’ என்கிற வாதங்களின் அடிப்படையில் பாய்ன்டுகளை அடுக்கி வருகிறார்கள். முதல்வருக்கு நெருக்கமான சட்டப் புள்ளிகளோ, ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதே தவறு என்கிற பாய்ன்டிலேயே இந்த வழக்கு அடிபட்டுப் போய்விடும்’ எனச் சொன்னார்களாம். #‘இதத்தான் உட்காந்து ராத்திரி பூரா ஒட்டிக்கிட்டிருந்தியாக்கும்’ மொமன்ட்!

கிசுகிசு

இத்தனை நாள் காத்திருப்புக்கு நல்லது நடக்கும் விதமாக, இலைக்கட்சிக்குள்ளிருந்தே பலரும் சின்ன தலைவிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள். அதனால், ‘சில காலத்துக்கு அமைதியாக இரு’ என இனிஷியல் புள்ளியிடம் சொன்னாராம் சின்ன தலைவி. இணைப்பு சாத்தியமாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் இனிஷியல் புள்ளி, அனுதினமும் பத்திரிகை யாளர்களைச் சந்தித்து கெத்து குறையாதவராகப் பேசிக்கொண்டே இருக்கிறார். மனமாற்றத்தில் இருந்த இலைக்கட்சியின் பல நிர்வாகிகளை இந்தப் பேச்சு கடும் கோபத்துக்கு ஆளாக்கிவிட்டது. சின்ன தலைவியிடம் போனில் பேசுகிற அளவுக்கு நெருங்கிய மாஜிக்கள்கூட, ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ எனப் பின்வாங்கி விட்டார்களாம். ‘இந்த மனுஷன் இருக்கிற வரைக்கும் நமக்கு எந்தக் கவலையும் இல்லை’ என இனிஷியல் புள்ளியின் அனுதின பிரஸ்மீட் பார்த்துக் கலாய்த்தாராம் இலைக்கட்சியின் துணிவானவர். #குக்கர் விசிலை நிப்பாட்டலன்னா சோறு குழைஞ்சிறும்... அதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism