Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

டெல்டா மாவட்டத்தையே திகைக்கவைத்திருக்கிறது ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிதி மோசடி. வழக்குகளின் தீவிரத்தைக் குறைத்து, ஹெலிகாப்டர் சகோதரர்களைக் காப்பாற்றச் சொல்லி காவிக் கட்சியின் வேல் பிரமுகரைப் பசையும் கையுமாகப் போய்ப் பார்த்தார்களாம் சிலர். ‘நான் சிபாரிசு பண்ணினால் இன்னும் சில வழக்குகளையும் சேர்த்துப் போடுவாங்க. இதுதான் உண்மைநிலை’ எனச் சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டாராம் வேல் பிரமுகர். #படபட பப்பாளித் தோட்டம்... படுத்த பாயச் சுருட்டிக்கிட்டு எடுத்தாண்டி ஓட்டம்!

மாஜி மில்க் மினிஸ்டர் தனக்கு நெருக்கமான மீடியா தொடர்பாளர்களைச் சந்தித்து, ‘கொஞ்ச நாள் நம்மளைப் பத்தி பாசிட்டிவ் செய்தியும் வேணாம், நெகட்டிவ் செய்தியும் வேணாம். நம்ம ஞாபகமே வராத மாதிரி நம்மளைப் பத்தின செய்திகளை நிறுத்தி வெய்யுங்க’ என்றாராம். அதை அப்படியே அன்புக் கோரிக்கையாக்கி நெருக்கமான ஊடகப் புள்ளிகளிடம் ‘அவர் பற்றி இப்போதைக்கு எதுவும் எழுதாதீங்க’ எனக் கெஞ்சிக் கேட்கிறார்களாம் ஊடகத் தொடர்பாளர்கள். #பாவிகளா… எழுதாதீங்கன்னு சொன்னதையும் எழுதிவெச்சிருக்கியளே!

கோட்டை மாவட்டத்தின் இலைக் கட்சி நிர்வாகிகள் பலரும், ஆளுங்கட்சியில் ஐக்கியமானதற்குக் காரணம் சட்டரீதியான நடவடிக்கைகளை கவனிக்கும் அமைச்சர்தானாம். அவரே முன்பு இலைக் கட்சியில் இருந்தவர்தான் என்பதால், பழைய பாசத்தில் பலருக்கும் போன் போட்டு அழைத்துவந்துவிட்டாராம். ‘மாவட்டத்தின் மொத்தப் புள்ளிகளையும் கூண்டோடு கொண்டுவருவேன்’ எனவும் சபதம் போட்டிருக்கிறாராம். அதைத் தடுக்க, குட்கா மாஜியை கட்சி வேலைகளில் தீவிரமாக இறங்கச் சொல்லியிருக்கிறது இலைக் கட்சி. #அடங்காத பிள்ளை பெத்தா, ஒறங்காம முழிச்சிருக்கணும்!

மீசை மினிஸ்டருக்கும், அன்பான யூத் மினிஸ்டருக்கும் இடையேயான பூசல் மீண்டும் பட்டவர்த்தனமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். டெல்டா மாவட்டம் வரை யாருக்குச் செல்வாக்கு என அறிவிக்கப்படாத போட்டியே நடக்கிறது. யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் நிர்வாகிகள் திண்டாட, விஷயம் தலைமை வரை போயிருக்கிறது. ‘ஏழு மாவட்டச் செயலாளர்கள் என் கையில்’ என மீசை மினிஸ்டர் சொன்ன வார்த்தைகள் தலைமையை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறதாம். #அப்படிச் சொல்லு வழக்க... அவ கையில கொடு உழக்க!

மேல்சபை கொண்டுவரலாமா என முதற்கட்ட ஆலோசனையைத் தொடங்கியபோதே, நடுநிலைக் கட்சித் தலைவர் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார். ‘கொரோனா நேரத்தில் கௌரவப் பதவிகள் தேவையா?’ என அவர் சீற, ஆளுங்கட்சியின் புள்ளிகள் அவரிடம் போனில் பேசினார்களாம். ‘பத்து வருஷமா வாய்ப்போ பதவியோ இல்லாம போராடுறோம். இப்பத்தான் முதன்மையானவர் மனசுவெக்கிறார். அதுக்கு ஆப்புவெக்கப் பார்க்குறீங்களே?’ என்றார்களாம் சில சீனியர்கள். மௌனமாகச் சிரித்திருக்கிறார் நடுநிலைத் தலைவர். #மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?!

கிசுகிசு

காவல்துறையில் இப்போதைக்கு அதிகாரிகள் மாற்றம் இருக்காது எனத் தெளிவாக அறிவித்துவிட்டாராம் முதன்மையானவர். ஆனாலும், ‘உளவுத்துறை பதவிக்குப் புதிய அதிகாரி நியமிக்கப்படவிருக்கிறார்’ எனச் செய்திகள் கிளம்பிக்கொண்டேயிருக்கின்றன. ‘இந்தச் செய்திகளைக் கசியவிடுகிற அதிகாரிகள் யார்?’ என விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் தலைமை அதிகாரி. காரணம், கடந்த முறைபோல் இன்னோர் அதிகார மையமாக உளவுத்துறை மாறக் கூடாது என்கிற கவனம்தானாம். #கழுகு மலை வாழக்கா... இந்தக் கதையைக் கொஞ்சம் கேளக்கா!

எல்லாவிதச் சிக்கலுக்கும் முடிவுகாணும் வகையில், ‘சின்ன தலைவியையே அவைத்தலைவர் பொறுப்புக்குக் கொண்டுவந்தால் என்ன?’ என்கிற விவாதம் இலைக் கட்சிக்குள் பெரிதாகியிருக்கிறது. இதன் பின்னணியில் பணிவானவரின் கைங்கர்யம் இருப்பதாக நினைக்கிறார் துணிவானவர். அதனால் ‘ஆம்’, ‘இல்லை’ என எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காக்கிறார். இதற்கிடையில், ‘பொதுச்செயலாளர் தவிர்த்து, வேறு எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன்’ எனச் சின்ன தலைவி சீறுவதுதான் ஹைலைட் திருப்பம். #பசியாம இருக்க வரம் தாறேன்... பழையது இருந்தா போடுன்னானாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism