Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

வாய்த்துடுக்காகப் பேசும் டெல்லி மணியான புள்ளிக்கு நியமன எம்.பி பதவி இந்த மாதத்தோடு முடியப்போகிறது. மீண்டும் ‘தன்னை நியமன எம்.பி-யாக அறிவிக்க வேண்டும்!’ எனக் காவிக் கட்சியின் உச்சபுள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார் மணியான புள்ளி. “கொடுத்துத் தொலைப்போம்… இல்லையேல் எதையாவது கிளறிக்கொண்டேயிருப்பார்” எனப் பலரும் சொன்ன நிலையில், “அவருக்கு இனி கட்சியிலேயே இடமில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம் உச்சபுள்ளி. “பதவி கிடைக்காவிட்டால், மணியான புள்ளியின் பாய்ச்சல் பட்டையைக் கிளப்பும்” என்கிறார்கள் டெல்லி சோர்ஸுகள். #அவசரப்பட்டுட்டியே குமாரு!

கிசுகிசு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, எம்.பி-க்களின் சிபாரிசு அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்த வழக்கத்தை திடீரென நிறுத்தியது பா.ஜ.க அரசு. இதை எதிர்க்கட்சிகள் பலரும் வசைபாடிவரும் நிலையில், தி.மு.க-வின் இளம் எம்.பி ஒருவர் ஆதரித்து ட்வீட் போட, டெல்லியின் மில்க் எம்.பி கொதித்துவிட்டாராம். “இப்படி ஆள் ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுத்தா, நான் எதுக்குக் குழுத் தலைவரா இருக்கணும்?” என ஆதங்கப்பட்டதோடு, முதன்மையானவர் கவனம் வரை இந்த விவகாரத்தைக் கொண்டுபோனாராம். “கண்டிக்கிறேன்!” என முதன்மையானவர் சொன்ன பிறகுதான் மில்க் எம்.பி-க்குக் கொதிப்பு அடங்கியதாம். #படுத்துறாய்ங்களே என்னிய..!

கிசுகிசு

இனிஷியல் அமைச்சருக்கு நெருக்கமானவராகச் சித்திரிக்கப்பட்ட கொங்கு மண்டல அழகு அம்மணி மீது, கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், இனிஷியில் அமைச்சரை இனியும் நம்பக் கூடாது என அப்படியே அணில் அமைச்சர் பக்கம் தாவிவிட்டார் அம்மணி. இனிஷியல் அமைச்சரின் கவனத்துக்கு வராதவாறு, அணில் அமைச்சரைத் தன் கணவருடன் சந்தித்த அம்மணி, ‘இனி என் அரசியல் எதிர்காலம் உங்களை நம்பித்தான்’ எனக் கலங்கினாராம். “நான் தலைவரிடம் பேசி நல்லது பண்றேன். விரைவில் பழையபடி பொறுப்புக்குக் கொண்டுவருகிறேன்” என நம்பிக்கை கொடுத்து அனுப்பினாராம் அணில் அமைச்சர். ஸோ, அம்மணி இப்போ வெரி ஹேப்பி #அணில்னாலே உதவிதானே!

கிசுகிசு

“எங்கள் தலைவர் நேரில் அழைத்தும் ஏன் கட்சி அலுவலகத் திறப்புவிழாவைப் புறக்கணித்தீர்கள்?” என பா.ஜ.க-வின் ஆளுமைப்புள்ளியிடம் ஆதங்கப்பட்டாராம் முதன்மையானவரின் நெருக்கப்புள்ளி. “எங்கள் சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி இருவரையும் விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி பிரதமர் சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு முதல் நாள் இரவு உங்கள் சேனல், தேசிய அளவில் புதிய ஒருங்கிணைப்பை ஸ்டாலின் உருவாக்கப்போவதாகச் செய்தி வெளியிட்டது. அதனால்தான் புறக்கணித்தோம்” என்றாராம் ஆளுமைப் புள்ளி. தனக்குத் தெரியாமலேயே எப்படி அப்படியொரு செய்தியை வெளிச்ச சேனல் வெளியிட்டது என முதல்வர் ஸ்டாலினுக்குக் கடுமையான குழப்பமாம். இத்தனை நாள்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. #உலகத் தொலைக்காட்சிகளில் பல முறையாக...

கிசுகிசு

இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடிகளை நினைத்து, தமிழகத்திலிருக்கும் ஆளுங்கட்சியின் சீனியர் புள்ளி ஒருவர் ரொம்பவே கவலைப்படுகிறார். ‘அண்டை நாட்டின்மீது அவ்வளவு அக்கறையா?’ என நினைக்காதீர்கள். மொத்த முதலீடுகளையும் சண்டை நடக்கும் அண்டை நாட்டில்தான் நிறுவிவைத்திருக்கிறாராம் அவர். தன்னுடைய முதலீடுகள் மட்டுமல்லாமல், கட்சியில் இருக்கும் இன்னும் சிலரையும் சில வருடங்களுக்கு முன் அண்டை நாட்டுக்கு அழைத்துப்போய் முதலீடு செய்யவைத்தாராம். இப்போது அவர்களுக்கும் இவர்தான் தண்டம் அழுகிற நிலையாம். #சோனமுத்தா... போச்சா!?

கிசுகிசு

ஏதாவது சர்ச்சையாகப் பேசியே தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும் மன்னர் புள்ளிக்கு, கவர்னர் பதவி கொடுக்கப்படப்போவதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. டெல்லி சோர்ஸுகளிடம் இதுகுறித்து மன்னர் புள்ளியே ஆர்வம் தாங்காமல் விசாரித்தாராம். ‘ஆம்…’ எனப் பெரும்பான்மை ஆட்கள் சொல்ல, மன்னர் புள்ளி திக்குமுக்காடிக் கிடக்கிறார். #என் காதையே என்னால நம்ப முடியலைங்கறேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism