Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

‘சீனியர் அமைச்சர்கள் சிலர், வார இறுதியில் தனியாகக் கூடிக் கலந்து பேசுகிறார்கள்’ என முதன்மையானவருக்கு `நோட்’ வைத்ததாம் உளவுத்துறை. அதிருப்தியான விஷயங்களை விவாதிக்கிறார்களா என செக் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். “ஜாலியும் கேலியுமான சந்திப்புதான்!” எனத் தகவல் சொல்லப்பட்ட பிறகே ஆசுவாசமானதாம் முதன்மையானவர் தரப்பு. #சுண்டக்கஞ்சி சோறுடா... சுதும்பு கருவாடுடா... சலோமியா..!

கிசுகிசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டணியில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் சின்னத்திலும் நின்று வென்ற மன்னர் எம்.பி., டெல்லியில் காவிக் கட்சியின் அடிவருடியாகவே ஆகிவிட்டாராம். காவிக் கட்சியின் உச்சப்புள்ளிகளைச் சந்திப்பது, பிசினஸ் குறித்துப் பேசுவது என ஒரு வர்த்தகர் போலத்தான் அவருடைய அனுதின நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. விரைவில் நாடாளுமன்றத்திலேயே பிரதமரை வானளாவப் புகழ்ந்து பேசுகிற திட்டத்திலும் இருக்கிறாராம் மன்னர் எம்.பி. #ராஜாதி ராஜ... ராஜ கம்பீர... ராஜ குல திலக..!

கிசுகிசு

சி.பி.சி.ஐ.டி மூலமாக விசாரிக்கப்படும் மீசை அமைச்சரின் தம்பி வழக்கு, படு வேகமாகப் போகிறதாம். சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெயமான அதிகாரி, ரௌடிகளின் நெட்வொர்க் குறித்து நன்கறிந்தவர் என்பதால், சம்பவம் நடந்த விதத்தைவைத்து குற்றவாளிகளை நெருங்கும் நிலையில் இருக்கிறாராம். இதற்கிடையில் அவரை அந்தப் பகுதியின் எஸ்.பி-யாக நியமித்து, உள்ளூர் போலீஸின் உதவியையும் கூடுதலாகக் கொடுக்க நினைக்கிறதாம் அரசுத் தரப்பு. நீதிமன்ற அனுமதியோடு இந்த நியமனத்தைச் செய்யப்போகிறார்களாம். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தின் பின்னணியை அறிய முதன்மையானவர் அக்கறை காட்டுகிறாராம். #டிக்... டிக்... டிக்!

கிசுகிசு

பல வருடங்களாகக் கட்டிக்காத்த மாவட்டச் செயலாளர் பதவியைத் திடீரென தாரைவார்த்தார் இலைக் கட்சியின் துணிவானவர். தனக்கு நிழலாக வலம்வரும் ‘கூட்டுறவு’ புள்ளியைக் குளிர்விக்கத்தான் இந்த முடிவு என்றாலும், பணிவானவருக்கு செக் வைக்கும் உள்ளடி அரசியலும் இதில் இருக்கிறதாம். ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கோஷத்தை விரைவில் கட்சிக்குள் கிளப்பி, அதற்கு ஆதரவாகத் தன்னுடைய இன்னொரு பதவியையும் உதறி, பணிவானவரைப் பணியவைக்கத் திட்டமிடுகிறாராம் துணிவானவர். கலகக்குரல் கிளப்ப ஆட்கள் ரெடியாகிவருகிறார்கள். #எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை... என் பங்காளிக்கு ரெண்டு கண்ணும் போயிறணும்!

கிசுகிசு

அரசியல் ஆலோசகரைக் கதர்க் கட்சியில் சேர்க்க, தமிழகத்தைச் சேர்ந்த இரு எம்.பி-க்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். தங்களின் சமூக வலைதளங்களில் சூசகமாகவும் பதிவிட்டார்கள். தேசிய அளவில் தங்களுக்குத் தெரிந்த கதர்க் கட்சி நிர்வாகிகளிடமும் இந்த எதிர்ப்பைப் பெரிதாக்கச் சொன்னார்களாம். “யார் தூண்டுதலில் இப்படிச் செயல்பட்டார்கள்?” என விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் அரசியல் ஆலோசனைப்புள்ளி. #வியூகத்துக்கே வியூகமா?!

கிசுகிசு

பங்களா கொலை வழக்கை விசாரித்த காவல் அதிகாரி, திடீரென மாற்றப்பட்டிருக்கிறார். அவர் இல்லத்திலிருந்து விசாரணை விவரங்கள் வெளியே கசிந்ததாகவும், அது இலைக் கட்சியின் ஆட்களை உஷார்படுத்தியதாகவும் தெரியவந்ததாம். ஆனால், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரியை இந்த வழக்கிலிருந்து நகர்த்தத் திட்டமிட்ட சிலர்தான் இல்லம் குறித்த செய்தியைக் கிளப்பினார்களாம். சட்டென விக்கெட் வீழ்ந்ததில் காவல் அதிகாரிக்கு எதிரான டீமுக்கு ஏக மகிழ்ச்சி என்கிறார்கள். #யார்யா அது... லெஃப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டுட்டு, ரைட்ல போறது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism