பிரீமியம் ஸ்டோரி

நான்கெழுத்து இளைஞர் ஒருவரின் சிபாரிசுகள் அத்தனையும் ஆளுங்கட்சியில் உடனடியாக ஓகே ஆகின்றன. அமைச்சர்கள் தொடங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் சிபாரிசுகளே செல்லுபடியாகாத நிலையில், இந்த இளைஞருக்கு மட்டும் எப்படி இந்த செல்வாக்கு எனக் கட்சிக்குள் கடுமையான குமுறல். கடந்த ஆட்சியிலும் இந்த இளைஞரின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது என்பதுதான் கூடுதல் ஹைலைட். #உஷ்... திஷ்... உஷ்...

மடத்தின் முக்கியப்புள்ளி இறந்ததால், அடுத்து அந்தப் பொறுப்புக்கு யார் என்பது குறித்து சர்ச்சை நிலவியது. முதன்மையானவர் கவனத்துக்கு இது குறித்துச் சொல்லப்பட, ``அரசியல் தலையீடு ஏதுமின்றி யார் நியாயமானவர்களோ அவர்களையே நியமியுங்கள்’’ எனச் சொல்லிவிட்டாராம். அதனால்தான், முக்கியப்புள்ளி இறந்த சில மணி நேரத்திலேயே அடுத்தவர் அறிவிக்கப்பட்டாராம். #பொறுப்பான செயல்!

கிசுகிசு

மில்க் மினிஸ்டரின் வாய்த் துடுக்குப் பேச்சால், அவ்வப்போது சர்ச்சைகள் வெடித்துவருகின்றன. கிறிஸ்தவ மதத்தினர் குறித்து மில்க் மினிஸ்டர் பேசிய பேச்சை மீடியாக்கள் ஊதிப் பெரிதாக்கிய நிலையில், மீடியா புகழ் மாஜி குறித்த கருத்தும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதனால், ‘துறைரீதியான கருத்து தவிர்த்து வேறேதும் பேசக் கூடாது’ எனக் கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது மில்க் மினிஸ்டருக்கு. #வாயை மூடிப் பேசவும்!

ஆளுங்கட்சி சேனல், படத் தயாரிப்பிலும் இறங்கவிருக்கிறது. வருடத்துக்கு பத்துப் படங்கள் எனப் பெரிய திட்டத்தில் இருக்கிறார்கள். முதன்மையானவரிடம் திட்டத்தைக் காட்டி ஓகே வாங்கிவிட்டதால், சினிமா புள்ளிகள் பலரும் சேனலை அணுக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நெளிவு சுளிவு பார்த்து, சரியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கச் சொல்லி உத்தரவாம். #சினிமாவும் அரசியலும் ஒண்ணு, இது தெரியாதவன் வாயில பன்னு!

கதர்க் கட்சியின் சார்பில் அரசுப் பொறுப்பு வாங்கிய சீனியர் புள்ளியை, சமீபத்தில் சின்ன தலைவியின் சேனல் தரப்பில் சந்தித்தார்களாம். ‘நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் பேசினால் சிறப்பாக இருக்கும்’ என்றார்களாம். ‘இப்போதைய ஆளுங்கட்சியின் சிறப்பு குறித்துத்தான் நான் பேசுவேன். ஒளிபரப்ப நீங்கள் தயாரா?’ என அந்த சீனியர் கேட்க, சேனல் தரப்பு கப்சிப். #கேட்டாரே ஒரு கேள்வி... நெஞ்ச கொன்னுபுட்ட படுபாவி!

பாரம்பர்ய நெல் ரகங்களைக் காக்கவும் மீட்கவும், போராடி மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் இயக்கம் தொடங்கும் அறிவிப்புக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு. அதில், நெல் ஜெயராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பொறுப்பும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. ஆனால், அரசுத் தரப்பை அணுகும் வேறு சிலர், நெல் ஜெயராமனின் குடும்பத்துக்கு எதிராக நிற்கிறார்களாம். விவகாரம் இப்போது உரிய துறையின் அமைச்சர் கவனத்துக்குப் போயிருக்கிறது. #பாரம்பர்யத்த காப்பாத்துங்க!

கிசுகிசு

சட்டசபையில் தன் இருக்கைக்கு வந்து, பலரும் வணக்கம் சொல்வதில் வாரிசுப் புள்ளிக்கு தர்மசங்கடமாம். தந்தையிடம் சொல்லி அதைத் தவிர்க்கச் சொல்லலாமே எனச் சிலர் ஆலோசனை சொல்ல, தந்தைக்கு மாற்றாக சீனியர் செயலாளரிடம் சொன்னாராம். “வணக்கம் சொல்றதை ஏன் தவிர்க்கச் சொல்லணும்… வயது தாண்டி வணக்கம் சொல்பவர்களிடம் நீங்க உஷாரா இருந்தா போதும் தம்பி...” என்றாராம் சீனியர் செயலாளர். #வணங்கமுங்க!

அடுத்தடுத்த ரெய்டுகளிலிருந்து காப்பாற்றச் சொல்லி, துணிவானவரிடமும் பணிவானவரிடமும் இலைக் கட்சி மாஜிக்கள் தொடர்ந்து புலம்புகிறார்களாம். டெல்லியிலிருந்து அழுத்தம் கொடுத்தால், ஆளுங்கட்சி அமைதியாகிவிடும் என்கிறார்களாம். டெல்லிக்குப் போய் புலம்பிய பிறகுதான் ரெய்டு ஸ்பீடு பிடித்தது என்பதைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் துணிவும் பணிவும் அமைதி காக்கிறார்கள். #‘அண்ணன் பேரைச் சொன்னியாடா..?’ ‘அதுக்கப்புறம்தான் அடிக்கவே ஆரம்பிச்சாய்ங்க!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு