Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

“பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த படங்களை நிறைய எடுக்க வேண்டும். இதைத் திரைத்துறையினருக்கான கோரிக்கையாக வைக்கிறேன்” எனச் சமீபத்தில் பேசினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், நல்ல திரைப்படங்களை ஊக்குவிக்கும்விதமாக வருடம்தோறும் வழங்கப்படும் திரைப்பட விருதுகளை, கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசு வழங்காமல் நிறுத்திவைத்திருக்கிறது. இரண்டு வருட விருதுகளுக்கான பட்டியல் ரெடியான நிலையில், அதற்கான தங்கம் வாங்கிப் பல காலமாக ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கிறதாம். ‘பட்டியல் ரெடி… தங்கம் ரெடி… அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம்?’ எனக் கேட்டால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைக் கைகாட்டுகிறார்களாம் அதிகாரிகள். # லோ பர்ஃபார்மன்ஸ் விருதை அமைச்சருக்குக் கொடுக்கலாமே?!

கிசுகிசு

‘பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், துறையை நடத்துவது முடியாத காரியம்’ என முதன்மையானவரிடம் விளக்கமாகச் சொன்னாராம் துறையின் அமைச்சர். ‘டிக்கெட் உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும். நிதிச் செயலாளர் மூலமாக வேறு தீர்வை யோசியுங்கள்’ எனச் சொன்னாராம் முதன்மையானவர். துறை மாற்றம் நடந்தபோது, அடுத்தகட்ட முன்னேற்றமாக நினைத்த அமைச்சர், இப்போது அநியாயத்துக்கு அல்லாடுகிறாராம். #வலி... அது வேற டிப்பார்ட்மென்ட்!

கிசுகிசு

காவிக் கட்சியின் காக்கி மாஜி, தீவிரமான வசூல்வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். வசூல் என்றவுடன் தவறாக நினைக்க வேண்டாம். கட்சிக்கான நிதியைத் திரட்டத்தான் அவ்வளவு வேகம் காட்டுகிறாராம். ‘ஒரு நாளைக்கு ஒரு கோடி’ என டார்கெட் வைத்து, தொழிலதிபர்கள் பலரையும் சந்தித்து நிதி திரட்டுகிறாராம். கட்சியின் கஜானாவை வலுவாக்கினால்தான் டெல்லி தலைமை தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கும் என்கிற கணக்குதான் காக்கி மாஜியை இந்த அளவுக்கு இயக்குகிறதாம். #ரெசிப்ட் கொடுப்பீங்களா சார்?

கிசுகிசு

காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதில், அணில் அமைச்சர் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தனக்குவேண்டிய பர்சென்டேஜ் பார்ட்டிகள் மூலமாகவே காற்றாலை அதிபர்களை வழிக்குக் கொண்டுவர நினைக்கிறாராம். இந்நிலையில் காற்றாலை அதிபர்கள் பலரும் கூட்டாகக் கிளம்பிப் போய், மாம்பழக் கட்சியின் இளையவரைச் சந்தித்துக் குமுறினார்களாம். ‘காற்றாலை மின்சாரத்தை அதிகமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்’ என இளையவர் சமீபத்தில் ஆக்ரோஷம் காட்டிய பின்னணி இதுதானாம். #ஓ... காத்து அப்படி அடிக்குதா?!

கிசுகிசு

மயங்கி விழுந்த பிறகு, உடல்நலனில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கிவிட்டாராம் அண்ணன் தலைவர். உணவு விஷயங்களில் வழக்கமாக வெளுத்துக்கட்டுபவர், இப்போது அநியாய டயட்டில் இருக்கிறாராம். அசைவ உணவுகளிலும் கொழுப்பு குறைவானது எது என ஆராய்ச்சி நடத்தி, அதில் குறைவாக எடுத்துக்கொள்கிறாராம். இரவு 7 மணிக்குப் பிறகு பச்சைத் தண்ணீர்கூட அண்ணன் குடிப்பது கிடையாதாம். ‘இரவு என்பது உடலுக்கான ஓய்வாத்தான் இருக்கணும்… அப்பவும் வயித்தை நிரப்பிவைக்கக் கூடாது’ எனத் தம்பிகளுக்கும் தன் பாணியைச் சொல்லிக்கொடுக்கிறாராம் அண்ணன் தலைவர். #அப்ப... அவிச்சுவெச்ச கறி இட்லியை என்ன பண்றது?

கிசுகிசு

ஆளும் வாரிசின் சமீபத்திய படம் திரைக்கு வந்தது. படத்துக்குப் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி நிர்வாகிகள் மூலமாக, தமிழ்நாடு முழுக்க தியேட்டர்களை முழுவதுமாக புக் பண்ணச் சொன்னார்களாம். மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், இளைஞரணி நிர்வாகிகள் என ஒவ்வொரு ஷோவையும் ஒவ்வொரு தரப்பினர் முழுதாக ஆக்கிரமிக்க உத்தரவாம். அதேபோல் இணையதள அணியினருக்குப் படம் குறித்த பாசிடிவ்வான கருத்துகளைப் பெரிதாகப் பரப்பச் சொல்லி அசைன்மென்ட்டாம். ‘இந்தக் கட்சியில நீடிக்க இன்னும் என்னவெல்லாம் பண்ணணுமோ?’ எனத் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக வெசனப்படுகிறார்கள் கட்சி நிர்வாகிகள். #நெஞ்சுக்கு பீதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism