Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இருபதுக்கும் மேற்பட்ட தன் சமூகத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன் போய் பணிவானவரையும் துணிவானவரையும் மசியவைத்து வெற்றிகண்டவர், சமீபத்தில் டெல்லிக்குப்போன இலைக் கட்சியின் தடாலடி எம்.பி. வென்றதும் விசுவாசம் மறக்கும் ஆட்களுக்கு மத்தியில், ‘விரைவில் கவனிக்கிறேன்’ எனத் தனக்கு ஆதரவு கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ-க்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் அவர். “டெல்லி சம்பந்தப்பட்ட எந்த உதவியென்றாலும் தயங்காமல் என்னைக் கேளுங்கள்…” என்றும் சொல்லியிருக்கிறாராம். #கேளுங்கப்பா... அண்ணன்கிட்டதான கேக்குறீங்க..!

கிசுகிசு

“என் படத்துக்கு இந்த அளவுக்கு பிசினஸ் இருக்கும்னு நான் நினைக்கவேயில்லை” - சமீபத்திய படத்தின் ரிலீஸுக்கு முந்தைய லாபம், நடுநிலைத் தலைவரை மலைக்கவைத்துவிட்டதாம். ‘ரிசல்ட் எப்படி இருந்தாலும் நிகர லாபம் 50 சி’ எனக் கணக்கு போட்டு, கச்சிதமாக பிசினஸ் செய்த டி.வி பிரமுகரைக் கொண்டாடுகிறாராம் நடுநிலைத் தலைவர். படத்துக்கான வரவேற்பு பெரிதாக அமைந்த வகையில் ‘லாபம் இன்னும் இரு மடங்காகும்’ என டி.வி பிரமுகர் கணக்கு காட்ட, நடுநிலைத் தலைவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறாராம். #காசு மேல காசு வந்து... கொட்டுகிற நேரமிது..!

கிசுகிசு

தோட்டத்துத் தலைவரின் வாரிசுக்கு ஒருவழியாக புரொமோஷன் கொடுக்கப்பட்டுவிட்டது. தலைவராக உயர்ந்திருக்கும் வாரிசு, தான் ஏற்கெனவே வகிக்கும் இளைஞரணித் தலைவர் பதவியை யாருக்குத் தாரை வார்ப்பது என்பதில் மிகுந்த குழப்பத்தோடு இருக்கிறாராம். இளைஞரணிப் பதவியை வாங்க, பல ரூட்டிலும் ஆட்கள் மெனக்கெடுவதால், இப்போதைக்கு அதையும் சேர்த்து தானே கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டாராம் வாரிசு. ‘இத்தனை வயசுக்கு அப்புறமும் இளைஞரணியை விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறாரே…’ என முணுமுணுக்கிறார்கள் காத்திருப்பவர்கள். #பால் பழம் எனக்குத்தான்... பாயசமும் எனக்குத்தான்!

கிசுகிசு

விவேகமான இளையவருக்குப் பெண் குழந்தை பிறந்த யோகம், தனக்குப் பெரிய திருப்பத்தைக் கொடுக்கும் என நம்பும் சின்ன தலைவி, சமீபத்தில் வித்தியாசமான பெயரைக் குழந்தைக்குச் சூட்டியிருக்கிறார். ‘பிரச்னைகளைக் கடந்து முதன்மையான இடத்தைப் பிடிப்பவள்’ என்பதுதான் அந்தப் பெயருக்கான அர்த்தமாம். #லுலுலுலாயி..!

கிசுகிசு

இலைக் கட்சிக்கும், காவிக் கட்சிக்கும் இடையே நடக்கிற பனிப்போர் பெரிதாகி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை பாதித்துவிடுமோ எனப் பயப்படுகிறாராம் மாஜி காக்கி. அதனால், இலைக் கட்சிக்கு எதிராகக் கருத்துச் சொல்ல வேண்டாம் என சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு ஆஃப் தி ரெக்கார்ட் ஆர்டர் போட்டிருக்கிறாராம். நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி ஒதுக்கீட்டில் 10 சீட்டுகளைக் குறிவைத்து இப்போதே மாஜி காக்கி காய்நகர்த்திவருவதாகச் சொல்கிறார்கள் விஷயப்புள்ளிகள். #சத்தம் போடாம கத்துங்கப்பா... அதானே?!

கிசுகிசு

அரசியலைத் தாண்டி சினிமா பக்கம்தான் வாரிசு இன்னமும் தீவிரமாக இருக்கிறாராம். சந்திப்பு, பேச்சு, சிந்தனை யாவும் சினிமா குறித்தே இருப்பதால், அதை மடைமாற்றத்தான் அன்பான அமைச்சர் மூலமாகத் தீர்மானம் போடச் சொல்லி இல்லத் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டதாம். ஆனாலும், இன்னமும் அடுத்தகட்ட சினிமாக்கள் குறித்தே விவாதித்துவருகிறாராம் வாரிசு. ‘பேன் இந்தியா ஸ்கிரிப்ட் ரெடி செய்து அதில் நான் நடித்தால் எப்படியிருக்கும்?’ எனச் சமீபத்தில் நண்பர்களிடம் ஆலோசித்தாராம். #பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா பாஸ்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism