Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

ஆனந்த இயக்குநரின் சமீபத்திய படத்தை ரிலீஸ் செய்வதற்கு முதல் நாள், 20 கோடி ரூபாயை செட்டில் செய்யச் சொல்லி, கடுமையான கெடுபிடிகள் காட்டப்பட்டனவாம். ஒரு கட்டத்தில் படம் தமிழில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்கிற நிலை உருவானது. ஆனந்த இயக்குநரின் நிறுவனம் ஏற்கெனவே பெற்ற கடனுக்காகப் பலரும் நெருக்கடி கொடுக்க, பலருக்கும் போன் போட்டுக் கதறியிருக்கிறார்கள். பழகியவர்கள் சிதறி ஓடிய நிலையிலும், ஆளுங்கட்சியின் அரசியல் வாரிசு தானாக வந்து தலையிட்டாராம். தன்னுடைய நிறுவனத்துக்கு ஆனந்த இயக்குநர் ஒரு படம் இயக்கிக் கொடுக்க அக்ரிமென்ட் போட்டு, அதற்கான அட்வான்ஸாக நள்ளிரவில் பணத்தைக் கொடுத்தாராம். #கேட்டா கொடுக்கிற பூமி இது!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவு ஆதரவாளர்களைக் கடகட வேகத்தில் நீக்க முடிவெடுத்த துணிவுத் தரப்பு, மலைக்கோட்டை மாவட்டப்புள்ளியான இனிப்பு மாஜிக்கு மட்டும் தனிரூட்டில் பேரம் பேசியதாம். “தெரியாமல் அந்தப் பக்கம் போயிட்டீங்க. இப்போகூட இந்தப் பக்கம் வாங்க. மாவட்டப் பொறுப்போடு, மாநில அளவிலான அங்கீகாரத்தையும் கொடுக்கிறோம்” என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார்களாம். ஆனாலும், அசைந்து கொடுக்க மறுத்துவிட்டாராம் இனிப்பு மாஜி. இந்த விஷயம், டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளிக்குத் தெரியவர, “சாதி, சமுதாயம்னு வக்கனையா பேசினவங்கல்லாம் அடுத்த நாளே ஓடிப்போயிட்டாங்க. ஆனா, இந்தாளு இவ்வளவு உறுதியா இருக்காரே…” என வாய்விட்டுப் பாராட்டினாராம். பணிவானவரிடம் பேசி, இனிப்பு மாஜிக்குத் தேவையான ஆக்கபூர்வங்களைச் செய்துகொடுக்கச் சொன்னாராம். இந்தக் கோபத்தில்தான் இனிப்பு மாஜியின் மகனையும் கட்சியைவிட்டுத் தூக்கியதாம் துணிவுத் தரப்பு. #அப்ப ஸ்வீட் மாஜிக்கு ஸ்வீட் பாக்ஸ் கன்ஃபார்ம்!

கிசுகிசு

கற்பிக்கும் துறையில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுக் கலங்கடிக்கும் அன்பான அமைச்சர், கடந்த பொதுத்தேர்வில் தேர்வை எழுதாமல் தவறவிட்ட ஆறரை லட்சம் மாணவர்களுக்கு மறு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாதது ஏன்... அவர்களுக்கான சிக்கல்கள் என்னென்ன என விசாரிக்கச் சொல்லி அதிகாரிகளை விரட்டவும் செய்தார். ஆனால், அந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி, மறு தேர்வுக்கு மாணவர்களை அழைத்துவராமல் போக்குக் காட்டுகிறார்களாம் அதிகாரிகள். “கல்விப் பாதையைவிட்டு விலகியிருக்கும் ஆறரை லட்சம் மாணவர்கள் தவறான பாதைக்குப் போய்விடாமல் தடுக்கவேண்டியது அரசின் கடமை அல்லவா?” எனக் கேட்கும் ஆர்வலர்கள், விஷயத்தை அன்பான அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லத் துடிக்கிறார்கள். #நம்ம அதிகாரிகளுக்கு என்னதான் ஆச்சு?!

கிசுகிசு

பள்ளிகள் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையிலும், இலவச சைக்கிள் இன்னமும் மாணவர்களைப் போய்ச் சென்றடையவில்லை. சைக்கிள் டெண்டர் விஷயத்தில் இழுபறி நீடித்தபோது, அரசின் உயரிய அதிகாரி தலையிட்டு வேகப்படுத்தினார். உடனே, டெண்டர் ஓகே ஆகி சைக்கிள்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனாலும், ‘முதன்மையானவரின் தலைமையில் விழா நடத்தித்தான் சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும்’ என சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் மன்னர் மந்திரியிடம் சொன்னாராம். அதனால், அரசுப் பள்ளிகளில் சைக்கிள்கள் வாரக்கணக்கில் சும்மா கிடக்கின்றன. பழுது, பாதுகாப்பு என சைக்கிள்களைக் காக்க முடியாமல் அரசுப் பள்ளிகள் அல்லாடும் நிலையில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக மாணவர்களும் திண்டாடுகிறார்கள். “அரசு நல்லது செய்ய நினைத்தாலும், அதிகாரிகள் முட்டுக்கட்டையா இருக்காங்களே…” எனச் சம்பந்தப்பட்ட துறையிலேயே குமுறல்கள் கேட்கின்றன. #சைக்கிள் டயராவது மாணவர்களுக்குக் கிடைக்குமா?

கிசுகிசு

ஆளுங்கட்சியில் நடக்கும் உட்கட்சித் தேர்தலில், மாவட்டச் செயலாளர்களும் மந்திரிகளும் கூட்டணி அமைத்து, தங்களுக்கு ஆதரவான ஆட்களைப் பதவிக்குக் கொண்டுவருகிற வேலைகளைத் தீவிரமாகச் செய்கிறார்களாம். டெல்டாவின் கடலோர மாவட்டத்தில், இலைக் கட்சியின் பெல் மாஜிக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியின் முரட்டுப் புள்ளியைப் பொறுப்புக்குக் கொண்டுவர உடன்பிறப்புகள் நினைக்கிறார்களாம். அதிகபட்ச ஆதரவும் அவருக்குத்தான் இருக்கிறதாம். ஆனாலும், மாவட்டப் புள்ளி வலுவில்லாத ஒருவரைப் போட்டியின்றி தேர்ந்தெடுக்க நினைக்கிறாராம். இத்தனைக்கும் ஒருகாலத்தில் பெல் மாஜியை நேரடியாகவே எதிர்த்து ஓட ஓட விரட்டியவர் அந்த முரட்டுப் புள்ளி. விவகாரம் இப்போது தலைமையின் கவனம் வரை போயிருக்கிறது. #வலுத்தவையும் வெல்லும்... வலுவில்லாதவையும் வெல்லும்... தட் இஸ் பாலிட்டிக்ஸ்!