Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

சொல்லிக்கொடுக்கும் துறையில் அடுத்தடுத்து நடக்கும் குளறுபடிகள், முதன்மையானவரை ரொம்பவே சங்கடத்தில் ஆழ்த்தினவாம். ஆனாலும், துறைக்குப் பொறுப்பான அன்பான அமைச்சரை மகனுக்கு நிகராக நினைப்பதால், எவ்வித வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் முதன்மையானவர் அமைதி காத்தாராம். முதன்மையானவரின் எண்ணமறிந்து அன்பான அமைச்சரே நேரில் சந்தித்துப் பேசினாராம். “நான் நல்லபடிதான் செயல்படுகிறேன். உங்களுக்குத் தவறாகத் தோன்றினால் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள்…” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தாராம். மணிக்கணக்கில் நீண்ட பேச்சுவார்த்தை அமைச்சரை ரொம்பவே உற்சாகமாக்கியிருக்கிறதாம். #அன்பிற்கும் உண்டோ..!

கிசுகிசு

விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பு நடத்திவரும் மன்னர் பிரமுகர், சமீபகாலமாக ஆளும் அரசுடன் முட்டல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறாராம். ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தவர் திடீரென நிலைப்பாட்டை மாற்றுவது ஏன் என விசாரணை நடந்ததாம். இதற்கிடையில் காவிக் கட்சிக்கு ஆதரவான ஆளாக அவரை மாற்றவும் முயற்சிகள் நடந்தனவாம். காவி ஆதரவைக் கண்டுகொள்ளாத மன்னர் பிரமுகர், ஆளும் ஆட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் போகவில்லையாம். இதற்கிடையில் அழைப்பு இல்லாமலேயே கதர்க் கட்சியின் வாரிசை நடைப்பயணத்தில் நேரடியாகப் போய் சந்தித்துச் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு வந்திருக்கிறார் மன்னர் புள்ளி. #பயணங்கள் முடிவதில்லை!

கிசுகிசு

இலைக் கட்சியில் பணிவானவர் பக்கம் இருக்கும் ட்ரீட்மென்ட் புள்ளி மன வருத்தத்தில் இருக்கிறாராம். துணிவானவர் பக்கம் போகாமல் தூண்போல் ஆதரவு கொடுக்கும் தன்னை மதிக்காமல், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் இன்னபிற நிர்வாகிகளிடம் பணிவானவர் போன் போட்டுப் பேசுவதுதான் வருத்தத்துக்குக் காரணமாம். அதனால்தான் பணிவானவரின் கவனத்துக்குத் தகவல் சொல்லாமல், சின்ன தலைவியைத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்தாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. பணிவானவரைவிட்டு விலகி, சின்ன தலைவி பக்கம் இணைகிற முடிவை அவர் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். #தர்மமும் துரோகமும் ஒண்ணு... தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டு!

கிசுகிசு

இலைக் கட்சியில் நடக்கும் மோதலில், சாதிரீதியான ஒருங்கிணைப்பையும், உடன்பாட்டையும் செய்ய சைலன்டாகக் காய்நகர்த்திவருவது டெல்டா மாவட்டத்தின் பெல் மாஜிதானாம். ‘சமுதாயத்தைவிட்டுக் கொடுத்துடக் கூடாதுய்யா…’ எனக் கட்சி நிர்வாகிகள் பலரிடமும் பேசிவருகிறாராம். ‘நாம யார் பக்கமும் போக வேண்டாம். ஆனா, நம்ம சமுதாயத்தை விட்டுக்கொடுத்துடக் கூடாது’ என மந்திரம் ஓதுகிறாராம். அசைக்க முடியாத சக்தியாக இருந்த குட்கா மாஜியின் மனதையே ஒருகட்டத்தில் மாற்றிவிட்டாராம் பெல் மாஜி. விஷயம் இப்போதுதான் துணிவானவர் கவனத்துக்குப் போயிருக்கிறது. பெல் மாஜியை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்களாம். #மணியே... மணியின் ஒலியே..!

கிசுகிசு

ஆளும் அரசில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க, மாண்புமிகுக்கள் மத்தியில் கடுமையான போட்டி நடக்கிறது. கிச்சன் வரை நல்ல பெயர் வாங்கிவைத்திருக்கும் அணில் அமைச்சர், முதன்மையானவரிடம் நினைத்த நேரத்தில் போனில் பேசுகிற அளவுக்கு நெருங்கிவிட்டது சீனியர்களைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘பசைப் பரிவர்த்தனைகளை அணில் அமைச்சர் மாதிரி நடத்தினால்தான் நல்ல பெயர் வாங்க முடியும்’ என சீனியர் அமைச்சர் சொல்ல, ‘பசை மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது. சர்க்கரையா பேசுற விதம்தான் அந்தாளை இவ்வளவு நெருங்க வெச்சுருக்கு’ என்றாராம் மீசை அமைச்சர். எப்படியோ இப்போதைக்கு ரேஸில் முந்துகிறார் அணில் அமைச்சர். #அவர் காட்டுல மழை பெய்யுது... அவர் கோட்டையில் கொடி ஆடுது!