Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

எப்போதுமே சிபாரிசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டாதவர், சீறும் தலைவர். பசுமையான துறையில் பணியாற்றும் மிக நெருங்கிய நண்பருக்கு இடமாறுதல் தேவைப்பட, அதிலிருக்கும் நியாயத்தைச் சொல்லி முதன்மையானவரிடம் நேரில் பேசினாராம். உரிய துறையின் அமைச்சரை அழைத்து, “உடனே இவர் கேட்கும் டிரான்ஸ்ஃபரைச் செய்து கொடுங்கள்” என முதன்மையானவர் சொல்ல, நெகிழ்ந்துபோய் நன்றி சொல்லியிருக்கிறார் சீறும் தலைவர். அடுத்த வாரமே உரிய நபருக்கு டிரான்ஸ்ஃபர் போடப்பட்டதாம். அதிர்ச்சி என்ன தெரியுமா? அவர் கேட்ட இடத்தைத் தவிர்த்துவிட்டு, முன்பிருந்த தொலைவைக் காட்டிலும் அதிக தொலைவுக்குத் தூக்கியடித்து உத்தரவாம். “நான் பழைய இடத்திலேயே இருந்திருக்கலாமே” என நண்பர் வருத்தப்பட, அதிர்ந்துபோய்க் கிடக்கிறார் சீறும் தலைவர். #இனி ஏதாச்சும் கேட்ப… மொமென்ட்!

கிசுகிசு

பணிவானவரின் மனைவி மாரடைப்பால் மரணமடைய, இடிந்துபோனதாம் அவர் குடும்பம். சில மாதங்களாகவே மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் போக, அவ்வளவு கவனம் எடுத்துப் பார்த்தாராம் பணிவானவர். கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, நல்லது கெட்டது என எந்த நிகழ்வுக்கும் மனைவியை அவர் வெளியே அனுப்பவில்லையாம். ‘கட்சிரீதியான கவலைகள் விரைவில் சரியாகும். அதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டாம்’ எனச் சொல்லி பணிவானவர் தன் மனைவியைத் தேற்றியபோது, ‘சின்னம்மாவைச் சங்கடப்படுத்தாதீங்க…’ என ஆரம்பித்து, நிறைய விஷயங்களை நினைவூட்டினாராம். மிக நெருக்கமானவர்களிடம் அதைச் சொல்லிச் சொல்லிக் கதறியிருக்கிறார் பணிவானவர். #நினைவுகளுக்கும் மறதிகளுக்கும் இடையிலிருக்கிறது அரசியல்!

‘மணல் உள்ளிட்ட எந்தப் பணியிலும் நான் ஈடுபடுவது இல்லை’ எனப் பத்திரிகைகளில் தன்னிலை விளக்கம் கொடுத்த ரெய்டு புகழ் புள்ளிதான், அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்துக்குமே இப்போது நிழலாக விளங்குபவராம். கடந்த ஆட்சியில் நிழல் சக்தியாக ஆட்டிப்படைத்தவர், இந்த ஆட்சியிலும் அதே பவரோடு வலம்வருவதைக் கண்டு திகைத்துப்போயிருக்கிறார்கள் அமைச்சர்கள். துறைரீதியான பணிகள் குறித்த விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் ரெய்டு புள்ளி, அந்தப் பணியை யாருக்கு ஒதுக்கீடு செய்வது, எவ்வளவு தொகை நிர்ணயிப்பது என அனைத்தையும் தீர்மானிக்கிறாராம். தன் நிறுவனத்தையோ பெயரையோ வெளியே காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமான ஆட்களைவைத்து நிழல் ஆட்சி நடத்துகிறாராம் ரெய்டு புள்ளி. #ஆட்சி மாறியும் காட்சி மாறலையே… கோவிந்தா!

கிசுகிசு

முதன்மையானவரின் வாரிசுக்கும் அன்பானவரின் வாரிசுக்கும் இடையே முட்டல் மோதல் எனச் சில நாட்களுக்கு முன்னர் கடுமையான பரபரப்பு. சட்டமன்றக் கூட்டத்தில் அன்பானவரின் வாரிசு, முதன்மையானவரைப் பற்றி சிலாகித்த நாளில் மீண்டும் பேரன்பு பெருக்கெடுத்து ஓடியதாம். பழைய மன வருத்தங்கள் நீங்கி மீண்டும் நட்புக்கொடி பறக்கிறதாம். #அன்பில் உதயமான நட்பே... அடடே கவிதை!

உப்புக்குப் பெயர்போன மாவட்டக் காவல்துறை வட்டாரத்தில், மாஜி மாநகரப் பெண்மணியின் மகன் மீது எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகள் குவிகின்றனவாம். நில மோசடி, பண மோசடி எனப் பல புகார்கள் நீள்வதால் பலரிடமும் புகார் வாங்கி குண்டாஸில் போட்டுவிடலாமா என யோசிக்கிறது காவல்துறை. அரசியல்ரீதியான சங்கடங்கள் வரக் கூடாது என்பதற்காகச் சற்றே யோசிக்கிறார்களாம். #கண்ணதாசனுக்கு என்ன பட்டம்? ஏன் ஆளுக்கொரு சட்டம்!

ராஜ்யசபாவுக்குச் சிறுபான்மைப் பட்டியலில் உள்ள ஒருவருக்கு சீட் கொடுக்க நினைத்த முதன்மையானவர், உற்ற துணையாக இருக்கும் சட்டப் பிரமுகர் பெயரைத்தான் டிக் செய்ய எண்ணினாராம். ஏற்கெனவே அவருக்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் வேறு வழியின்றி, கோட்டைப் புள்ளிக்குக் கொடுத்தார்களாம். இந்த விஷயத்தைச் சட்டப் பிரமுகரிடமே முதன்மையானவர் சொல்ல, ‘நீங்க நினைச்சதே போதும் சார்’ என நெகிழ்ந்தாராம் அவர். #பிரெண்டேய்... ஃபீலாய்ட்டாப்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism