Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்,ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்,ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

டெல்லிக்குக் கிளம்பும்போதே ஜாதகரீதியான பலவித சகுனங்களையும் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினாராம் இலைக் கட்சியின் துணிவானவர். அப்படியும் பெரிய அளவுக்குத் திருப்புமுனையான விஷயங்கள் நடக்காதது அவரைச் சோர்ந்துபோக வைத்ததாம். ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது டெல்லி விஷயங்களை முன்னின்று கவனித்த சட்டப் புள்ளி, இப்போது சைலன்ட்டாக ஒதுங்கிக்கொண்டதுதான் துணிவானவரின் சறுக்கலுக்குக் காரணமாம். சட்டப் புள்ளியைச் சமாதானப்படுத்தி அழைத்து வர, சாதிரீதியான முக்கியஸ்தர்களை அனுப்பியிருக்கிறாராம் துணிவானவர். #கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை!

கிசுகிசு

கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சீனியர் அமைச்சருக்கும், புதுமுக அமைச்சருக்கும் முட்டல் மோதல் தூள் பறக்கிறது. அமைச்சரான புதிதில், சீனியருக்கு ராஜ மரியாதை கொடுத்து இலைக் கட்சி மாண்புமிகுக்களையே மிஞ்சுகிற அளவுக்குப் பணிவும் பவ்யமுமாக வலம்வந்த புதுமுக அமைச்சர், இப்போது சீனியரைச் சீண்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறாராம். அரசு விழாக்களிலோ, கட்சி நிகழ்வுகளிலோ சீனியருக்காகக் காத்திருக்காமல் தனக்கு டைமிங்தான் முக்கியம் என ஜபர்தஸ்து காட்டுகிறாராம். இதற்கிடையில் இரு அமைச்சர்களையும் ஓரங்கட்டுகிற அளவுக்கு, கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏ., உறவுப் புள்ளியின் பெயரைச் சொல்லி தனி ராஜ்யம் நடத்துகிறாராம். மாவட்ட நிர்வாகிகள் மண்டை காய்ந்துபோய்க் கிடக்கிறார்கள். #நாம் பிறந்த மதுரையில... ஆளுக்காளு நாட்டாமையாம்!

தி.மு.க-வின் மன்னர் புள்ளி மன்னிப்புக் குறித்து கெத்தாகப் பேசிய வார்த்தைகளைப் பிரகாசிக்கும் சேனலும், அவர்களின் சமூக வலைதளங்களும் வைரலாக்கின. மன்னர் புள்ளிக்கும், சேனல் தரப்புக்கும் சமாதானமாகிவிட்டதோ எனப் பலரும் நினைக்கும் அளவுக்குச் செய்திகளில் மன்னர் புள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிறகுதான் காரணம் புரிந்ததாம்… மதரீதியான அந்தக் காரசாரக் கருத்து பெரிய சர்ச்சையாக வெடித்தால், மன்னர் புள்ளிக்கு எதிராகக் கட்சித் தலைமை திரும்பும் என்பதற்காகவே அப்படிச் செய்யப்பட்டதாம். ஆனானப்பட்ட மன்னர் புள்ளிக்கே இந்த விஷயம் மிக தாமதமாகவே புரிந்ததாம். #என்னா... வில்லத்தனம்?!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த பெண்மணி திடீரென அரசியலுக்கு முழுக்குப்போட்ட பின்னணி, கட்சி வட்டாரத்துக்குள் கடுமையான சலசலப்பைக் கிளப்பிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், `பெண் சபாநாயகர்’ என்கிற பெரிய அங்கீகாரத்தை அடைந்திருக்கலாம் என்கிற மனக்குமுறல் அவருக்குள் நீடித்துக்கொண்டே இருந்ததாம். சமீபத்திய கட்சிரீதியான மன வருத்தங்களும் கைகோக்க, அதன் பிறகுதான் அரசியலுக்கே முழுக்குப்போடும் எண்ணத்துக்கு வந்தாராம். முழுக்குக் கடிதம் கொடுத்த பிறகும், கட்சியின் சீனியர்கள் கண்டுகொள்ளாததுதான் அந்தப் பெண் தலைவருக்குப் பெரிய வருத்தமாம். #தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி!

பல மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்ட அண்ணன் தலைவருக்கு, கடுமையான தொண்டைவலி. அதற்காக யாரும் பரிதாபப்பட்டுப் பேசினால், “அண்ணனோட கஷ்டத்தை நீங்கதானே புரிஞ்சுக்கணும்… என்னை எல்லா மாவட்டங்களுக்கும் அழைச்சு பேசு பேசுன்னா என்னால எப்படிப் பேச முடியும்... உண்மையான அன்பிருந்தால், தயவு பண்ணி என்னை எங்கேயும் வற்புறுத்தி அழைக்காதீங்க…” எனக் கலங்கிப் பேசுகிறாராம் பல மாவட்டப் பொறுப்பாளர்களிடமும். ‘ஒரு மாதத்துக்கும் மேலான ஓய்வு தேவை’ என மருத்துவ ஆலோசனையும் சொல்லப்பட்டிருக்கிறதாம். #நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டு..!