Published:Updated:

கொடநாடு வழக்கு; தொடரும் நடவடிக்கைகள்; கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களா

``தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடிதான் கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கிறோம்" என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மீன் வேட்டைக்குச் சென்றால் முதலில் சின்ன மீன்களைப் பிடித்துவிட்டுத்தான் பெரிய மீன்களைப் பிடிப்பது வழக்கம். அரசியல் வேட்டையிலும் அதே ஃபார்முலாதான் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதன்படியே தி.மு.க-வும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ற சின்ன மீனிலிருந்து தனது கணக்கைத் தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்ததாக சுறா மீனுக்கு வலை வீசிய தி.மு.க., தற்போது திமிங்கிலத்துக்கே வலை வீசியிருப்பதுதான் ஹாட் டாபிக்!

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

சரி, தி.மு.க-வின் இலக்குதான் என்ன? என்று கட்சி சீனியர் ஒருவரிடம் விசாரித்தோம். பெயர், படம் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசத் தொடங்கினார். ``அ.தி.மு.க ஊழல் சாம்ராஜ்யத்தை ஜெ-வுக்கு முன், ஜெ-வுக்குப் பின் எனப் பிரிக்கலாம். ஜெ-வுக்கு முன் ஒருவித அச்சத்தோடு, அளவோடு கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர்கள், ஜெ-வுக்குப் பின் அளவே இல்லாமல் கொள்ளையடித்திருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கும் தெரிந்த ரகசியம்தான். அதனால்தான், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அமைச்சர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரங்களிலும், தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டார். `தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை?’ என்று கேட்டு அ.தி.மு.க-வினர்தான் போராட்டம் நடத்தினார்கள். அதைத்தான் முதல்வரும் சட்டமன்றத்தில் சொல்லிக்காட்டினார். அதைத்தான் செய்தும்வருகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையிலும் ஆதாரங்களுடன் முறையிட்டோம். அதைக்கொண்டும், அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்த புகாரைக் கொண்டுமே வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதே பாணியில்தான் எடப்பாடி மீதும் நடவடிக்கை எடுக்க நினைத்திருந்தோம். இந்தச் சமயத்தில்தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு இருக்கும் தொடர்பு குறித்த ஆவணங்களுடன் அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படும் ஒரு கட்சித் தலைவர் உதயநிதியைச் சமீபத்தில் சந்தித்து அத்தனை தகவல்களையும் குறிப்பிட்டார். அதன்பேரிலேயே கொடநாடு வழக்கு மூலம் எடப்பாடியை நெருக்கினால் உடைந்துபோவார் என்றொரு கணக்கு போட்டு களத்தில் இறங்கினோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Twitter/@Udhaystalin
கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு

அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையிலுள்ள எடப்பாடிக்கு எதிரான புகாரைக்கொண்டும் வழக்கு பதிவு செய்யவிருக்கிறோம். எங்கள் இலக்கு என்பது, ஊழல் செய்த அத்தனை முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்கு போட்டு, அதை விசாரிப்பதற்கு என்றே தனி நீதிமன்றங்களை அமைத்து, 90 நாள்களில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து ஆறு மாதங்களில் வழக்கையே முடிப்பதுதான் இலக்கு.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி

எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணியைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, உதயகுமார், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் என முன்னாள் மாண்புமிகுக்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்!" என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு