Published:Updated:

``வேரில்லாத மரம் அதிமுக... ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா" - டீக்கடையில் மனம் திறந்த கருணாஸ்!

கருணாஸ்.

`மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கையே சூதகமானால் எங்கு குளிப்பது' என்பதுபோல ஆகிவிட்டது அரசியல்.' - கருணாஸ்.

``வேரில்லாத மரம் அதிமுக... ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா" - டீக்கடையில் மனம் திறந்த கருணாஸ்!

`மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கையே சூதகமானால் எங்கு குளிப்பது' என்பதுபோல ஆகிவிட்டது அரசியல்.' - கருணாஸ்.

Published:Updated:
கருணாஸ்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், 'பேனர்' வைத்தது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் மீது திருவாடானை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. கருணாஸுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கருணாஸ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக வந்திருந்த கருணாஸ், நீதிமன்ற வளாகத்திலிருக்கும் டீக்கடையில் அமர்ந்தபடி நம்மிடம் பேசினார்.

கருணாஸ்
கருணாஸ்

``நான் அரசியலைவிட்டு ஒதுங்கி, தற்போது எனது பழைய தொழிலான சினிமாதுறைக்கு வந்துவிட்டேன். ஆறு ஆண்டுகள் அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது அதைவிட்டு ஒதுங்கி எனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்திவருகிறேன். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தாலும் சினிமா என்னை ஆரத்தழுவி வரவேற்றுக்கொண்டது.

தற்போது சசிகுமார், கார்த்தி, ஹரிஷ் கல்யாண், ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால் ஆகியோர் படங்களில் நடித்துவருகிறேன். மேலும், `அம்பாசமுத்திரம் அம்பானி’, `திருநாள்‌’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கத்தில் `ஆதார்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாஸ்
கருணாஸ்

``அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறிய கருணாஸ், ``ஒரு சிலவற்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனப் பேசத் தொடங்கினார்.

`` `மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கையே சூதகமானால் எங்கு குளிப்பது' என்பதுபோல ஆகிவிட்டது அரசியல். மக்கள் சேவை என்பதை மறந்து அரசியலை வியாபாரம் ஆக்கிவிட்டனர். அ.தி.மு.க வேர் இல்லாத மரம்போல் ஆகிவிட்டது. இரட்டைத் தலைமை என்பது கிடையாது. அ.தி.மு.க-வில் தற்போது இருப்பது `டம்மி' தலைமை. அனைவரும் ஒருமித்த கருத்துடன் தலைமையை அறிவிக்க வேண்டும். ஆளுக்கு ஒருவராகக் கைகாட்டும் தலைமை சரியாக இருக்காது" என்றார் சுருக்கமாக.

நம்மிடம் பேசிவிட்டு நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு 21.3.2022-ம் தேதிக்கு வாய்தா பிறப்பித்து, முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சிட்டிபாபு உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism