Published:Updated:

Exclusive: ஜெயலலிதா அத்தையின் ஆசீர்வாதத்தால் மகள் பிறந்திருக்கிறாள்! - நெகிழும் ஜெ.தீபா

மாதவன் - ஜெ.தீபா

"எங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாள். இந்தக் காரணத்தால்தான் முன்கூட்டியே வெளியில் சொல்லவில்லை. கடந்த 5 வருடமாக IVF சிகிச்சையில் இருந்தேன். என் குழந்தை பிறந்ததை ஒட்டியும் வதந்தி பரப்புகிறார்கள்" - ஜெ. தீபா பேட்டி

Exclusive: ஜெயலலிதா அத்தையின் ஆசீர்வாதத்தால் மகள் பிறந்திருக்கிறாள்! - நெகிழும் ஜெ.தீபா

"எங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாள். இந்தக் காரணத்தால்தான் முன்கூட்டியே வெளியில் சொல்லவில்லை. கடந்த 5 வருடமாக IVF சிகிச்சையில் இருந்தேன். என் குழந்தை பிறந்ததை ஒட்டியும் வதந்தி பரப்புகிறார்கள்" - ஜெ. தீபா பேட்டி

Published:Updated:
மாதவன் - ஜெ.தீபா

"எங்களுக்குத் திருமணமாகி 11 வருடங்கள் ஆகுது. எல்லாம் இருந்தும் குழந்தை இல்லாதது மட்டும்தான் பெரும் ஏக்கமா இருந்தது. இத்தனை வருடத்துல எத்தனை மருத்துவமனைகளுக்குப் போயிருப்போம்? அந்த வலி, வேதனை எல்லாம் எவ்ளோ கொடுமையானதுன்னு எங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போ, எங்களுக்கு மகள் பிறந்திருக்கா. அந்த சந்தோஷமே எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டது" என்று நெகிழ்ச்சியும் தாய்மையும் கலந்த பூரிப்புடன் நம்மிடம் பேசுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.

இன்று தீபாவின் பிறந்தநாளையொட்டி தங்களுக்கு பெண் குழந்தைப் பிறந்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது ஜெ.தீபா - மாதவன் தம்பதி. வாழ்த்துகளுடன் மருத்துவமனையில் இருக்கும் தீபாவை போனில் தொடர்புகொண்டு பேசினேன்.

தீபா
தீபா

"இந்த நேரம் இந்த உலகத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நாங்களாத்தான் இருப்போம். மகள் பிறந்திருக்கிறது அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ரொம்ப வருசத்துக்கப்புறம் எங்களுக்குன்னு கொஞ்சி, மகிழ குழந்தை பிறந்திருப்பது பெரும் பாக்யம்தானே? அதான், அவ்ளோ சந்தோஷமா இருக்கோம். அத்தை மறைவுக்குப்பிறகு அரசியல் வெளிச்சத்திற்கு நான் வந்தபோது எல்லோரும் குழந்தையை மையப்படுத்திதான் பேசினார்கள். குழந்தைக்கான முயற்சியில் ஒவ்வொரு முறையும் ஃபெயிலியர் ஆவது எவ்வளவு வேதனையைக் கொடுக்கும்? நிறைய ஃபெயிலியர்ஸ் ஆகிவிட்டால் எமோஷனாகிவிடுவோம் இல்லையா? குறிப்பாக, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் குழந்தை வரப்போகிறது என்று சொல்லிவிட்டு, பின்பு, அது இல்லாமல் போகும் துயரத்தை வார்த்தைகளில் சொல்லவே முடியாது. எத்தனை வருடங்களை ஏமாற்றமுடன் கடப்பது? அதனால்தான், குழந்தைப் பிறக்கும்வரை வெளியில் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம்.

எனது குடும்பத்தினரும் அதையே வலியுறுத்தியிருந்தார்கள். குழந்தைக்கான முயற்சியில், இந்தமுறைதான் சக்சஸ் ஆனது. மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறோம்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி மகள் பிறந்தாள். அப்போது, அறிவிக்கவில்லை. இன்று எனது பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளில் மகள் பிறந்ததையும் அறிவித்தேன். இன்னும் பெயர் எல்லாம் வைக்கவில்லை. குடும்ப முறைப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்" என்கிறவரிடம் "வாடகைத்தாய் மூலம் உங்களுக்கு குழந்தைப் பிறந்ததாகச் பரப்பப்படுகிறதே?" என்று கேட்டோம்.

"அதெல்லாம் தேவையில்லாத வதந்திகள். அவங்களா அப்படி போட்டிருக்காங்க. குழந்தை கொஞ்சம் ப்ரீ மெச்சூர் பேபிதான். ஒன்னரை மாதம் கழித்துதான் பிறந்திருக்கவேண்டும். சூழலால் தற்போதே பிறந்துவிட்டது. கடந்த 5 வருடமாக IVF சிகிச்சையில் இருந்தேன்.

மாதவன் - தீபா தம்பதி
மாதவன் - தீபா தம்பதி

எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டேன். கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் மகள். என் அத்தை ஜெயலலிதாவின் ஆசீர்வாதம், என் அம்மாவின் ஆசீர்வாதம், மாதவன் அம்மாவின் ஆசீர்வாதம் என எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும்தான் இந்த வாழ்நாள் சந்தோஷம் கிடைத்திருக்கிறது" என்று நெகிழ்பவரிடம் "உங்கள் தம்பி தீபக் பேசினாரா?" என்றோம்

"குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மகள் பிறந்த சந்தோஷத்தை சொல்லியாயிற்று. நேற்றிலிருந்துதான்போனையே நான் அட்டெண்ட் செய்கிறேன். மகள் முன்னரே பிறந்ததால் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில்தான் இருக்கிறோம். இனிமேல்தான், எல்லோரும் வருவார்கள் என்று நினைக்கிறேன்" என்கிறார் மகிழ்ச்சி பூரிப்புடன்.