Published:Updated:

அதிகாரம்... அந்தரங்கம்! - ரயிலில் ஏறும் மயில்!

அதிகாரம்... அந்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகாரம்... அந்தரங்கம்

- மாஸ்க் மேன்

“ஆங்கிலம் அற்புதமாகப் பேசுவார்... அவரது தூய தமிழ்ப் பேச்சைக் கேட்டு கற்றறிந்த அறிஞர்களே விழி உயர்த்துவார்கள். புள்ளிவிவரங்களையும் தரவுகளையும் மேற்கோள்காட்டிப் பேசுவதில் அவரை விஞ்ச முடியாது.” - இப்படித்தான் அந்தத் தலைவரைப் பற்றி ஆச்சர்யத்தோடு பலரும் சிலாகிப்பார்கள். கஞ்சிபோட்ட வெள்ளை வெளேர் கதர்ச் சட்டையும், வேட்டியுமே அவரது அடையாளம். தலைநகரில் தனிச் செல்வாக்கு படைத்தவரின் அந்தரங்கக் கதைகளைக் கேட்டால், அந்தப்புரத்து ஆப்பிள்களே வெட்கத்தில் இன்னும் சிவந்துவிடும்!

சொல்வாக்கும், செல்வாக்கும், செல்வமும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, தலைவரின் பால்ய பருவத்திலேயே இளமை அதிவேகமாக ஊஞ்சலாடத் தொடங்கியது. படித்ததெல்லாம் பெரிய இடத்துக் குடும்பத்தினர் படிக்கும் பள்ளி என்பதால், இளமையிலேயே தலைவருக்கு உயர்மட்ட பெண்களின் நெருக்கம் எளிதாகக் கிடைத்தது. மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றவருக்கு அது இன்னும் வசதியாகிவிடவே... ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, ப்ளம்ஸ் என விதவிதமான கனிகளைச் சுவைக்கத் தொடங்கினார்.

படிப்பு முடித்து பணிக்குச் சேர்ந்த தலைவருக்கு உடன் பணியாற்றிய பெண்ணின்மீது காதல். கடும் எதிர்ப்பையும் மீறி காதலியைக் கரம் பிடித்தார் தலைவர். மனைவிக்குப் பிடித்த மணாளனாக வெளியில் வலம்வந்தவருக்கு, மனைவியின் தமக்கை மீதும் பிறந்தது தாகம். மணக்கும் மண்ணின் மைந்தனாகத் தேர்தல் களத்துக்குள் நுழைந்த தலைவரின் பவருக்குப் பணிந்தார் மனைவியின் சகோதரி. இரட்டைக் குதிரை சவாரி செய்த தலைவருக்கு அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளும் தேடிவந்தன.

அன்றைக்குத் தலைவரின் கட்சியில் ஆண்கள் பலருக்கும் கனவுக்கன்னியாக வலம்வந்தார் பின்னாளில் மாண்புமிகுவான அந்தப் பெண்மணி. தலைவரும், அந்த மங்கையும் ஒரே துறையில் பணியாற்றிவர்கள் என்பதால், தலைவருக்கு அந்தப் பெண்ணை நெருங்குவது சுலபமாக இருந்தது. அதேசமயம், அன்றைக்குத் தமிழகத்தின் மூத்த தலைவராக இருந்த ஒரு பெருநிலக்கிழாருக்கும் அந்தப் பெண் மீது பிரியம். இதனால், பலரும் நெருங்கத் தயங்கிய அந்தப் பெண்ணை, ‘அடைந்தால் மகாதேவி... இல்லாவிட்டால் மரணதேவி...’ என்று உருகி உருகிக் காதலித்து, ஒருவழியாகத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். இடையில் என்ன நடந்ததோ... மூத்த தலைவரும் பெருந்தன்மையுடன் இதைக் கண்டுகொள்ளாமல், ‘எனக்குப் பிறகு தலைவனாகும் தகுதி இவனுக்கே’ என்று திருவாய் மலர்ந்தார். அப்புறமென்ன... தலைவரின் தலைமை சிநேகிதியாகவே மாறிப்போனார் அந்த மாண்புமிகு மங்கை.

அன்றைக்குத் தலைவர் கைவசம் வைத்திருந்த துறை சம்பந்தமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பம் உதவி கேட்டு வந்தது. தலைவரின் பலவீனத்தை அறிந்துவைத்திருந்த தொழிலதிபர், வரும்போதே வனப்பான தனது லைஃப் பார்ட்னரையும் அழைத்துவந்தார். கண்ணாடி வழியாகத் தொழிலதிபரின் ஜோடியை உற்று நோக்கி ரசித்த தலைவர், உடனே அந்த அழகியை மட்டும் உள்ளே அழைத்து கையெழுத்து போட்டுக்கொடுத்தார். ‘கையெழுத்து’ போட்ட இடங்களிலெல்லாம் மெய்சிலிர்த்த அந்த அழகிய மங்கை, பிறகு அடிக்கடி கையெழுத்து கேட்க, பளபள... வழவழ... தாள்களில் வழுக்கிக்கொண்டு வருடிச் சென்றன தலைவரின் கரங்கள்!

ஒருகட்டத்தில் முக்கிய பொறுப்பு ஒன்று தலைவரின் கரங்களுக்குள் வந்து விழுந்தது. தலைநகர் அலுவலகத்தில் பகல் முழுவதும் தடிமனான ஃபைல்களை புரட்டி, கறாராகக் கணக்கு பார்ப்பவர், இரவானால் விதவிதமான மெல்லிய வெளிநாட்டு ஃபைல்களில் மூழ்கி கணக்குவழக்கு இல்லாமல் முத்தெடுக்கத் தொடங்கினார். ஏழு நாள்கள்... ஏழு நாட்டு ஃபைல்கள் என்று முறைவைத்து முத்தெடுத்தாலும், ரஷ்ய ஃபைல்கள் என்றால் தலைவருக்குத் தலைகால் புரியாது என்று சொல்லிச் சொல்லிப் பூரிப்பார், அன்றைக்குத் தலைவருக்கு ஃபைல் ஏற்பாட்டாளராக இருந்த அந்த ஏழுமலையான் பெயர் கொண்டவர்.

அதிகாரம்... அந்தரங்கம்! - ரயிலில் ஏறும் மயில்!

முன்பெல்லாம் தனது தொகுதிக்குச் சென்றால் திரும்பி வருவதற்கு விமானத்தை விரும்ப மாட்டார் தலைவர். ரயில் பயணமே போதும் என்று சொல்லிவிடுவார். தொகுதியே தலைவரின் எளிமையைச் சிலாகிக்க... தலைவருக்கு நெருக்கமான இருவர் மட்டுமே அந்த ‘சிக்கு புக்கு’ ரகசியத்தை அறிவார்கள். அடுத்த ஸ்டேஷனில் அதே ரயிலில் ஏறும் ஒரு மயில். பிறகென்ன... விடிய விடிய கான மயிலாட கண்டும் உண்டும் ரசிப்பார் தலைவர். இந்த மயில் சினேகத்துக்கு அணிலாக உதவிய ஓர் அடிப்பொடி பின்னாளில் தலைவரின் ஆசியோடு கோட்டைக்குள் பிரவேசித்த நிஜமெல்லாம் நிகழ்ந்தது.

இரு முனைகளிலும் தவிர்க்க முடியாத விமானப் பயணங்களில் தவித்துப்போனார் தலைவர். மாற்றுவழியை யோசித்த அடிப்பொடிகள், தலைவர் ஏறும் ஊரில் ஓர் அறையும், இறங்கும் ஊரில் ஓர் அறையும் புக் செய்தனர். ஒருவேளை சைவம், மறுவேளை அசைவம் என்று விருந்துண்ட தலைவர், விருந்து படைத்தவர்களைக் கட்சிப் பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்க்கவும் தவறவில்லை. அப்படியொரு பெண்மணி, சில மாதங்களில் கிடுகிடுவென வளர்ந்து, ஒரு நகரத்தின் அதிகாரம்மிக்க பொறுப்பை ஆட்சி செய்ததைப் பார்த்து ‘கோட்டை’ பிரதிநிதிகளே ‘மலை’த்துப்போனார்கள்!

மாநிலத் தலைநகரில் தலைவருக்குத் தனிமை கிடைக்கும்போதெல்லாம், மகளிரணிப் பொறுப்பிலுள்ள அந்தப் பெண்மணிக்கு அழைப்பு விடுப்பார். தலைவரின் மனவோட்டத்தை அறிந்த பெண்மணியும் தவறாமல் வந்து குளிர்வித்துச் செல்வார். அதனாலேயே தமிழகத்தில் அரசியல் செய்துவந்த அந்தப் பெண்மணி, இப்போது தலைநகரில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.

அறிவுஜீவியாக அழைக்கப்படும் அந்தத் தலைவரின் அந்தரங்க லீலைகள் இப்போதும் தொடர்கின்றனதான். என்ன ஒன்று... தலைவரின் தாகம் அடுத்த தலைமுறைக்கும் தொற்றிக்கொண்டதைப் பார்த்து அவர் குடும்பத்துப் பெண்களே தலையிலடித்துக்கொள்கிறார்கள்!