அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

உயரிய பதவியிலிருந்து விலகிய பாதுகாப்பு அதிகாரி, ராஜினாமா கடிதம் கொடுத்த கையோடு சென்னைக்குக் கிளம்பி வந்தாராம். டெல்லி ஆட்களுக்கு மிக நெருக்கமான இவர், தமிழகத்தின் ஆளும் தரப்புக்கும் அநியாய அன்பு காட்டக்கூடியவர்தான். அதனால், அவரையும் முதன்மையானவரையும் சந்திக்கவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதிகாரிகளை டீல் செய்ய முடியாமல் திணறும் விஷயத்தில், இவருடைய ஆலோசனை பெரிய அளவில் வொர்க்அவுட்டாகும் என முதன்மையானவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். #விஜயகாந்த் பட இன்ட்ரோ மாதிரி இருக்கே ப்ரோ!

கிசுகிசு

காவிக் கட்சியின் தேசியத் தலைவரின் பதவி, அடுத்த இரு மாதங்களில் முடிவடைகிறது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய ஆளுமைப் புள்ளிகள் இருவரும் இப்போது இருக்கும் தலைவரே நீடிக்கட்டும் என நினைக்கிறார்களாம். அவர்கள் இருவரும் தற்போதைய தலைவருக்கு வைத்திருக்கும் ஒரே டார்கெட்… தமிழகத்தில் காவிக் கட்சியைச் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதானாம். அதனால், தமிழகத்தை நோக்கி காவிக் கட்சியின் தீவிரமான செயல்பாடுகள் சீக்கிரமே தொடங்கும் என்கிறார்கள். #எல்லாச் சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கி!

கிசுகிசு

நம்பர் நடிகை தாயான விவகாரத்தைப் பெரிதாக்கப் பார்த்தார்கள் பலரும். ஆனால், 2016-ம் ஆண்டே தங்களுக்குப் பதிவுத் திருமணம் நடந்ததாகவும், குழந்தை பெறுகிற பாக்கியம் தனக்கு இல்லாததாலேயே வாடகைத் தாய் மூலமாகப் பெற்றுக்கொண்டதாகவும் நடிகை மருத்துவ ஆதாரங்களோடு விளக்கம் சொல்ல, அரசு சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறையாம். ‘எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். யாமிருக்க பயமேன்?’ எனத் துறை அமைச்சர் கொடுத்த தைரியம்தான், அம்மணியை இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்கவைத்ததாம். அதனால், வாடகைத்தாய் விவகாரத்தில் நடிகைக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என அடித்துச் சொல்கிறார்கள். #யார் இந்தப் பெண்தான் என்று கேட்டேன்... முன்னாலே!

கிசுகிசு

கதர்க் கட்சியின் தலைவர் தேர்தலில், ரகசியப் புள்ளியின் மகன் கேரளத்து நிர்வாகிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தார். ரகசியப் புள்ளியோ அதைக் கண்டிக்காமல், வழக்கம்போல அமைதி காத்தார். இதற்கிடையில் கதர்க் கட்சியில் நான்கு மண்டல நிர்வாகிகளை நியமிக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், தென் இந்திய அளவில் அதைக் கைப்பற்ற ரகசியப் புள்ளி காய்நகர்த்துகிறாராம். மகன் விஷயத்தைப் புகாராக்கி, டெல்லிக்கு அனுப்பியிருக்கும் கதர்க் கட்சி நிர்வாகிகள், அப்பாவின் கனவுக்கு ஆப்புவைக்க ரெடியாகி வருகிறார்கள். #தென்னையைப் பெத்தா இளநீரு... பிள்ளையைப் பெத்தா தகராறு!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் தினசரி பத்திரிகைக்கு வரும் விளம்பரங்களைவிட, எதிர்க் கட்சியின் பத்திரிகைக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் குவிகின்றனவாம். இலைக் கட்சியின் துணிவுப் புள்ளியைப் போட்டி போட்டுப் புகழ நடக்கும் இந்த விளம்பர வியூகம் குறித்து, சமீபத்தில் விசாரித்திருக்கிறார் முதன்மையானவர். ‘அந்த பேப்பருக்கு விளம்பரக் கட்டணம் குறைவு. அதனால்தான் நிறைய விளம்பரங்கள் வருதே தவிர, துணிவானவருக்குப் பெரிய ஆதரவெல்லாம் கிடையாது’ என விளக்கம் சொன்னதாம் ஆளுங்கட்சிப் பத்திரிகை தரப்பு. #‘அந்த வீட்ல மட்டும் எப்படி லைட் எரியுது?’ மொமன்ட்!