Published:Updated:

`அவரு பாவம்ங்க.. விட்ருங்க!' - திண்டுக்கல் சீனிவாசனுக்காக பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்

திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன்
News
திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த செயலை அ.தி.மு.க-வினர் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலையில் பழங்குடி சிறுவனை அழைத்து, தனது செருப்பைக் கழட்ட சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் சம்பிரதாயத்துக்கு வருத்தம் சொன்ன, திண்டுக்கல் சீனிவாசன் பிறகு விஷயம் பெரிதானவுடன் சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி
திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி

ஆனால், சீனிவாசனின் இந்த செயலுக்கு பழங்குடி அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க வின் நமது அம்மா நாளிதழும் சீனிவாசனின் செயலை நியாயப்படுத்தி வரும் சம்பவங்களும் நடக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற வனத்துறை விளையாட்டு போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இதற்காக, மாலை 4.30 மணி அளவில் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்.

வனத்துறை நிகழ்ச்சி
வனத்துறை நிகழ்ச்சி

ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரின் வருகைக்காக நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. 4 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி அமைச்சர் வேலுமணி 1.30 மணி நேரம் தாமதமாக வந்ததால் 5.30 மணிக்குத்தான் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-கள், அதிகாரிகள் அனைவரும் வந்துவிட்டனர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் அப்செட்டாக காணப்பட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆகியோரிடம் முதுமலை சம்பவத்தைப் பற்றயே சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த பத்திரிகை, ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் பேசவில்லை.

“என்ன பேசணும்.? எதுக்கு பேசணும்?” என்று கேட்டார் சீனிவாசன். ``சார் இப்போ நடக்கற நிகழ்ச்சி பத்தியாவது சொல்லுங்கள்” என்று ஊடகங்கள் கேட்டதற்கும் அவர் பேச மறுத்துவிட்டார். திண்டுக்கல் சீனிவாசன் அருகில் அமர்ந்திருந்த பொள்ளாச்சி ஜெயராமன், “அவரு பாவம்ங்க.. விட்ருங்க” என்றார் சிரித்துக் கொண்டே.

பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி
பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி

இதையடுத்து, அங்கிருந்த வனத்துறை மற்றும் மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்கள், “நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் பேட்டிக் கொடுப்பார்” என்று ஊடகங்களை சமாதானப்படுத்தி அமரவைத்தனர்.

அமைச்சர் வேலுமணி வந்தப் பிறகு, நுழைவுவாயில் வரை சென்று அவரை வரவேற்ற திண்டுக்கல் சீனிவாசன், “மீடியா எல்லாம் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. உங்களத்தான் தேடிட்டு இருந்தாங்க” என்று அசடு வழிந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி
திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி

அதற்கு வேலுமணியோ, ``எனக்காக எதுக்கு வெயிட் பண்ணப் போறாங்க..? அவங்க உங்கக் கிட்ட பேசத்தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று சொல்லி நழுவி விட்டார்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி மற்றும் அதிகாரிகள் எல்லோருமே வனத்துறையைப் பற்றித்தான் பேசினார்கள். ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் சில வரிகள் மட்டும் வனத்துறையைப் பற்றி பேசிவிட்டு, “தம்பி வேலுமணி சிறப்பாக பணியாற்றுகிறார். பொள்ளாச்சி ஜெயராமனும் நன்கு பணியாற்றுகிறார்” என்று இருவருக்கும் பாராட்டு மழையை பொழிந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

கடைசியாக நிகழ்ச்சி முடிந்ததும் ஊடகங்கள் மீண்டும் திண்டுக்கல் சீனிவாசனிடம் சென்று, “சார்.. இந்த நிகழ்ச்சிப் பத்தி மட்டும் பேசுங்க” என்றனர். அதற்கு சீனிவாசன், “எதுக்கு..? அதெல்லாம் அந்த அதிகாரிங்கக் கிட்ட கேட்டுக்கோங்க” என்று வேகவேகமாக இடத்தை காலி செய்தார்.