Published:Updated:

``நேரு அரசு செய்ததுதான் ஜனநாயகப் படுகொலை!" - பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

pon radhakrishnan
pon radhakrishnan

மதத்தின் ஆணி வேராக இருக்கக்கூடிய சாதியத்தை ஒழிக்காமல், ஊரும் சேரியுமாக உள்ளூரிலேயே பிரிந்துகிடக்கும் மக்களை 'ஒரே தேச'த்துக்குள் அடைப்பதென்பது வாக்கு அரசியலுக்குத்தானே பயன்படும்?"

மும்மொழிக்கொள்கை, புதிய கல்விக்கொள்கை, முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பா.ஜ.க தலைவர்கள் படு 'பிஸி!' மத்திய ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த மூவ் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியோடு, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன்... https://bit.ly/2TFSTOS

"காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில், இப்படி ஜனநாயகப் படுகொலை செய்திருப்பது நியாயம்தானா?"

"565 சமஸ்தானங்களை ஒன்றாக இணைக்கும்போது அந்தந்த மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியா இணைத்தார்கள்? நம் சகோதரர்களாக நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினராக இருந்த மக்களைப் பிரித்துத் தனி நாடாக அறிவிப்பதற்கு முன், வாக்கெடுப்பு நடத்தாத காங்கிரஸ் கட்சி, இப்போது ஒரு பகுதியை நாட்டோடு இணைக்கும் முயற்சிக்கு, 'வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கேட்பது எந்த ஊர் நியாயம்?

pon radhakrishnan
pon radhakrishnan

ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கலாம் என்று அன்றைக்கு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுதான் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை."

"நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள்தான் முதுகெலும்புடன் செயல்படுவதாகச் சொல்லியிருக்கிறார்களே?"

"(சிரிக்கிறார்) அந்தக்காலத்தில், வீட்டு வேலையெல்லாம் செய்துமுடித்த பின், ஏதாவதொரு வேலையைச் செய்தாக வேண்டுமே என்று எண்ணும் பெண்கள், பேன் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!"

"மதத்தின் ஆணி வேராக இருக்கக்கூடிய சாதியத்தை ஒழிக்காமல், ஊரும் சேரியுமாக உள்ளூரிலேயே பிரிந்துகிடக்கும் மக்களை 'ஒரே தேச'த்துக்குள் அடைப்பதென்பது வாக்கு அரசியலுக்குத்தானே பயன்படும்?"

"மதம் சார்ந்துதான் சாதி இயங்குகிறது என்பதை நான் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒருகாலத்தில், சாதியக்கொடுமைகள் நடந்தன... அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால், எந்த சாமியும் மனிதர்களில் ஏற்றத்தாழ்வு பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. சண்டாளர் உருவில் வந்த சிவன், 'எனக்குள் இருப்பவனும் உனக்குள் இருப்பவனும் ஒன்றேதான்; யாரை ஒதுங்கிநிற்கச் சொல்கிறாய்?' என்று ஆதிசங்கரரையே கேட்டுத் தெளிவடைய வைத்ததாக ஆன்மிகம் சொல்லியிருக்கிறது."

எந்த சாமியும் மனிதர்களில் ஏற்றத்தாழ்வு பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை.

"அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தானே வேலூர்த் தேர்தல் முடிவும் நிரூபித்திருக்கிறது?"

"இது தி.மு.க-வுக்கு உரிய வெற்றி இல்லை. கடந்த முறை மாநிலம் முழுக்க பெரும் வித்தியாசத்தில் தி.மு.க-வை ஜெயிக்க வைத்த மக்கள், இம்முறை வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, தி.மு.க-வின் வீழ்ச்சிக்கு இது ஒரு தொடக்கம்!"

- காஷ்மீர் விவகாரம், கும்பல் வன்முறைகள், உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு, ராஜ்ய சபா சீட் உள்ளிட்டவை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்!" https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-senior-leader-pon-radhakrishnan-exclusive-interview

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

பின் செல்ல