Published:Updated:

`இங்கே ஸ்டாலின், அங்கே மம்தா...!’ -தூத்துக்குடியில் கொதித்த பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

குடியுரிமைச் சட்டத்தை, கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது, ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ.க தோல்வி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``ஜார்க்கண்டில் தனிப்பெரும்பான்மை கட்சியாக பா.ஜ.க வராவிட்டாலும், அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற கட்சியாக பா.ஜ.க., நிலைபெற்றுள்ளது.

விமான நிலையத்தில் பொன்னார்
விமான நிலையத்தில் பொன்னார்

தேர்தல், அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக் கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. தேர்தலில் தற்போது கூட்டணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க மிக வலுவாக உள்ளது.

மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குச் சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதைச் சரி செய்யக்கூடிய முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. மக்களை திசைதிருப்பி கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக ஆதாயம் தேடியே தி.மு.க., காங்கிரஸ்., போன்ற கட்சிகள் பழக்கப்பட்டுவிட்டன.

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

குடியுரிமைச் சட்டத்தை, கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தி.மு.க நடத்துகிற போராட்டம் சரியில்லாத ஒன்று என 60 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, தி.மு.க., இதுபோன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியான முறையில் சேவை செய்ய வேண்டும். பிரச்னைகளை அரசியல் ஆதாயத்துக்காக, அரசியல் காரணத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய காரணத்தினால்தான் ஒரு சில சமூகத்தினர் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய பலன்களை இழந்து நிற்கிறோம் என்பதை உணர ஆரம்பித்துள்ளனர்.

விமான நிலையத்தில் பொன் ராதாகிருஷ்ணன்
விமான நிலையத்தில் பொன் ராதாகிருஷ்ணன்

தி.மு.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சேர்ந்துதான் இந்த நாட்டை அழித்துள்ளனர். பிரச்னைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எறியும் வழக்கத்தை தமிழகத்தில் தி.மு.க-வும், அங்கே மம்தாவும் கையாண்டு வருகின்றனர் இது முறையானதல்ல”என்றார்.

அடுத்த கட்டுரைக்கு