Published:Updated:

`அரவணைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை'- சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.ராதாகிருஷ்ணன்!

அவர்கள், தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தமிழை வளர்ப்பவர்களை அரவணைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.

Pon.Radhakrishnan
Pon.Radhakrishnan

பிரதமர் நரேந்திர மோடியின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில் நாகராஜா கோயிலில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

Pon.Radhakrishnan
Pon.Radhakrishnan

அடுத்து, பி.ஜே.பி-யினரின் ரத்ததான முகாமைத் தொடங்கிவைத்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில், செய்தியாளர் சந்திப்பில் தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என நான் கூறியது எட்டு கோடி தமிழர்களை அல்ல. தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அரசியல் நடத்துகின்ற, அரசியல் பிழைப்பு நடத்துகின்றவர் பற்றிதான் சொன்னேன்.

அவர்கள், தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தமிழை வளர்ப்பவர்களை அரவணைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் உரையாற்றுகிறபோது, அதற்கு நன்றி சொல்லக்கூட யாரும் தயார் இல்லை என்றால் என்ன அர்த்தம். அதற்கு, அரசியலைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

Pon.Radhakrishnan
Pon.Radhakrishnan

எனவே, அது தமிழர்களுக்கு எதிரான கருத்து அல்ல, தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிரான கருத்து. நீண்ட காலத்துக்குப் பிறகு, கமல்ஹாசன் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார். அமித் ஷா கூறிய கருத்தை முழுமையாகப் படித்திருந்தால் இதுமாதிரியான விமர்சனங்கள் வந்திருக்காது" என்றார்.