2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் தொடங்கப் பட்டு, பிறகு தமிழகத்தின் பிற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட அம்மா உணவகத்துக்குக் கிடைத்த வரவேற்பை, அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எளிய மக்களின் பசியைப் போக்கியதில், அம்மா உணவகங்களின் பங்கு மிகப்பெரியது. ‘‘ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சிறப்பாகச் செயல்பட்டுவந்த அம்மா உணவகங்கள், அவரது மறைவுக்குப் பிறகு பல இடங்களில் சரிவர செயல்படாமல் கிடக்கின்றன’’ என்று புலம்புகிறார்கள் ஏழை மக்கள்.

சென்னையில் மட்டும் 407 உணவகங்கள், இவற்றில் சென்னை அரசுப் பொது மருத்துவமனைகளில் 7 உணவகங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளில் 247 உணவகங்கள் என தமிழகத்தில் மொத்தம் 654 அம்மா உணவகங்கள் உள்ளன. காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இரவு வேளையில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய் என இரவு 9 மணி வரை வழங்குகிறார்கள்.

யாராலும் கற்பனை செய்துபார்க்க இயலாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டதால், அம்மா உணவகங்களைப் பார்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வியந்தன. அவ்வளவு ஏன்... எகிப்திலிருந்து பொருளாதார நிபுணர்கள் வந்து பார்த்து அசந்தேபோனார்கள். அம்மா உணவகங்களைப் போலவே கர்நாடகாவில் ‘இந்திரா கேன்டீன்’, தெலங்கானாவில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’, ஆந்திராவில் ‘அண்ணா கேன்டீன்’ என்று அந்தந்த மாநில அரசுகள் உணவகங்களைத் தொடங்கின. இப்படி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த அம்மா உணவகங்கள், தற்போது பல இடங்களில் சரிவர செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

2018-2019ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அம்மா உணவகங்களுக்கு 10 கோடி ரூபாயும், 2019-2020ம் ஆண்டு பட்ஜெட்டில் 12.7 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை முறையாக அம்மா உணவகங்களின் செயல்பாட்டுக்குச் சென்று சேர்ந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், அம்மா உணவகங்களால் 100 கோடி ரூபாய்க்குமேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, சென்னை - கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா உணவகத்துக்கு மதிய வேளையில் விசிட் அடித்தோம்.

நாம் சென்றபோது பொங்கல்-சாம்பார் விற்பனையாகிக்கொண்டிருந்தது. வாங்கி உண்டோம். ஏற்கெனவே அம்மா உணவகங்களில் உணவு உண்ட அனுபவம் இருந்ததால், இப்போதைய தரம் முன்பைவிட மோசமாக இருந்ததை உணர முடிந்தது.

ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்களின் திறப்பு விழாவின்போது, ‘இந்த உணவகத்தில் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உடன் இருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால், அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதார மாகவும் தயாரித்து வழங்க வேண்டும்’ என்று ஜெயலலிதா அறிவுறுத்தியது நம் நினைவுக்கு வந்தது. அது உணவு தயாரிப்பவர்களுக்கும் நினைவிருந்தால் உணவு இவ்வளவு மோசமாக இருக்காதே என நினைத்துக்கொண்டோம். மோசமாக இருந்தாலும் அதையும் சகித்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டிய சூழலில் நிறைய மக்கள் இருக்கின்றனர் என்பது அங்கு உள்ள கூட்டத்தைப் பார்த்தபோது தெரிந்தது.

இதுறித்து குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் மலர்விழியிடம் பேசினோம். “அம்மா உணவகத்தை, கூலித் தொழிலாளர்கள்தான் அதிகளவில் நாடுகின்றனர். குறிப்பாக, துப்புரவுப் பணியாளர்கள். அம்மா உணவகம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பு அவர்கள் பெரும்பாலும் காலை உணவை உட்கொண்டதேயில்லை. ஒரு வடையிலும் டீயிலும் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வர். அம்மா உணவகம், அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. ஒரு வடை வாங்கும் காசிலேயே அவர்களால் ஐந்து இட்லிகளை வாங்கிச் சாப்பிட முடிந்தது. டோர் டெலிவரி செய்வோர், ஆட்டோக்காரர்கள் என பலரும் அம்மா உணவகத்தில்தான் பசியாறுகின்றனர். அப்படிப்பட்ட அம்மா உணவகங்கள் இன்று கண்டுகொள்ளப்படாமலும், அங்கு தயாராகும் உணவின் தரமும் குறைந்து போகிறது என்ற செய்தி, உண்மையிலேயே எனக்கு வருத்தமளிக்கிறது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், அதை தமிழக அரசு கண்டறிந்து சரி செய்ய வேண்டும்’’ என்றார் தவிப்போடு.

சென்னை மாநகராட்சி ஊழியர்களின் செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செய லாளர் சீனிவாசலுவிடம் பேசினோம்.

“அம்மா உணவகங்கள் எல்லாமே மாநகராட்சியின்கீழ் இயங்குகின்றன. இப்போதைய நிலைமையைப் பார்த்தால், அம்மா உணவகங்கள் எல்லாம் பெயரள வுக்குத்தான் இருக்கின்றன. பராமரிப்பு என்பது சுத்தமாகவே கிடையாது. ஆரம்பத்தில் ஒதுக்கிய அளவுக்கு இப்போது அம்மா உணவகங்களுக்கு நிதியும் ஒதுக்கப் படுவதில்லை. உணவகப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை தொடர்ந்தபடியே இருக்கிறது. இரவுகளில் வழங்கப்படும் சப்பாத்திகள் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. காஸ், தண்ணீர், பாத்திரங்கள், கோதுமை, அரிசி போன்றவை பற்றாக்குறையாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு திட்டத்தில் குறைகள் ஏற்படுவது என்பது இயல்புதான். ஆனால், அவற்றை நிவர்த்தி செய்யாமலேயே இருப்பது பெரும் குறை அல்லவா?’’ என்றவர்,‘‘அம்மா உணவக ஊழியர்களின் நிலையும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. அவர்களுக்கு கடந்த எட்டு வருடங்களாக தினசரிச் சம்பளம் 300 ரூபாய்தான். அதுவே பலருக்கும் நிலுவையில் இருக்கிறது. தலைக்கு கேப், கைகளுக்கு கிளவுஸ் போன்ற உபகரணங்களும் போதுமானதாக இல்லை. பல இடங்களில் அவை வழங்கப் படுவதேயில்லை. சென்னை மாநகராட்சி வரவு- செலவுக்கணக்கில் ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மா உணவக உபகரணங்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகை என ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தத் தொகை செலவு செய்யப் பட்டதா என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

ஆரம்பத்தில், சமையல் பொருள்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் கொள்முதல் செய்தனர். அதில் பல்வேறு குளறு படிகள் நடைபெறுவதாக புகார் கிளம்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் துறை, சமையல் பொருள்களுக்கான கொள்முதலுக்குப் பொறுப்பெடுத் துள்ளது. உணவகங்கள் பழையபடி தரத்துடன் தொடர, தினந்தோறும் அவற்றின் செயல்பாட்டைக் கவனிக்க ஓர் அதிகாரி தேவை. அடிப்படைக் கட்டமைப்பு, கொள்முதல், உபகரணங்கள், ஊழியர்களின் தேவைகள் என அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும். ஜெயலலிதாவால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை, அதே மனப் பான்மையுடன் தொடர்ந்து நடத்துவதற் கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதுகுறித்து மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்து ராமலிங்கத்திடம் விளக்கம் கேட்டோம்.

‘‘அம்மா உணவகம் குறித்த புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில்கூட நந்தனம், ராணிப்பேட்டை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலிருந்து புகார்கள் வந்தன. உடனே அவை சம்பந்தமாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்துக்கும் அவற்றைக் கொண்டுசெல்கிறோம்’’ என்றார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘அம்மா உணவகங்களை மேம்படுத்துவது குறித்து, திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள்களின் தரம் மேம்படுத்தப்படும். இதுபற்றி ஆலோசிக்க, ஜனவரி 13-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடக்கவிருக்கிறது’’ என்றார்.

அம்மா உணவகங்கள் பழையபடி செயல்படும் நாளை எதிர்பார்த்து, விளிம்புநிலை மக்கள் பலர் காத்திருக்கின்றனர்.