Election bannerElection banner
Published:Updated:

ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பிறகு லாக்டெளனா? - உண்மை நிலவரம் என்ன?

கொரோனா
கொரோனா

2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் மீண்டும் லாக்டெளன் அமல்படுத்தப்படவிருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையா என்பது பற்றி அரசுத் தரப்பில் விளக்கம் கேட்டோம்.

கொரோனா பரவல் தீவிரமானதை அடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சாலைகள் வெறிச்சோடியதையும், மக்கள் நடமாட்டம் அறவே இல்லாமல் சுமார் ஏழு மாதங்கள் வீட்டுக்குள் முடங்கியதையும் முதன்முறையாகப் பார்க்க நேர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியது. ஒருவழியாக கொரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்து நவம்பர், டிசம்பர் மாதங்களிலிருந்து நிலைமை சீராகத் தொடங்கியது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. அது மெல்ல மெல்ல இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. சமீப நாள்களாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் பாடம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்கிடையே மக்கள் மத்தியில் மீண்டும் லாக்டெளன் வருமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அப்படி மீண்டும் லாக்டெளனை அமல்படுத்தினால் வேலை, வாழ்வாதாரம் என்னவாகும் என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

இந்தநிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து, மே மாதம் 2-ம் தேதி, ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்படவிருக்கின்றன. சுமார் ஒரு மாத கால இடைவெளியில் அரசு லாக்டெளனை அமல்படுத்தப்போகிறது என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவிவருகிறது.

`தடுப்பூசிக்காகவா, தேர்தலுக்காகவா?' - அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையும் சர்ச்சைகளும்!

அப்படி நடக்க வாய்ப்ப்பிருக்கிறதா? - அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். `` லாக்டெளன் அறிவிக்க அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக அரசு காபந்து அரசாக மாறிவிட்டது. அதாவது, பல் இல்லாத பாம்புபோல. அத்தனை அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். இங்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் நடக்கும் கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாமிலும் இதேநிலைதான். அதனால், தமிழக அரசோ, முதல்வரோ தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும், மத்திய அரசுக்கு லாக்டெளன் அறிவிக்க அதிகாரம் உண்டு.

ஏப்ரல் 6-ம் தேதியோடு தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிகிறது. ஆனால் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஏப்ரல் இறுதிவரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதனால், ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மட்டும் லாக்டெளன் அறிவிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகவும் ஏப்ரல் 6-க்குப் பிறகு ஊரடங்கு அமல்படுத்த முடியாது. ஏனெனில், அந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடந்தாக வேண்டும்.

நான்கு மாநில வாக்குப்பதிவும் முடிந்து, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, ஐந்து மாநிலங்களிலும் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு வேண்டுமானால் ஊரடங்கை அமல்படுத்தலாம் அல்லது மத்திய அரசே மே 2-ம் தேதிக்கு பிறகு லாக்டெளன் அமல்படுத்தலாமே தவிர, ஏப்ரல் 6-க்கும் மே 2-க்கும் இடையே ஊரடங்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று!” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு