Published:Updated:

``தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே...” - ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக போஸ்டர்

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க-வை தலைமை ஏற்று வழிநடத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

``தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே...” - ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக போஸ்டர்

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க-வை தலைமை ஏற்று வழிநடத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் நகர்ப் பகுதிகளிலுள்ள சுவர்களில் `தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு, ஐயா ஓபிஎஸ் அவர்களே, கழகத்தைத் தலைமையேற்று வழி நடத்த வாருங்கள்...’ என ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உண்மைத் தொண்டர்கள் என போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த நிர்வாகிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மூத்த தலைவர் மைத்ரேயன் வெளியேறியது பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே முழக்கங்கள் எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சசிகலா ஆதரவாளர்கள் நுழைவதைத் தடுக்கவே இத்தகைய கெடுபிடிகள் எனக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சசிகலா விவகாரம், ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுகள் எழுந்தன.

இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தேனியில் இ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது விவாதமானது. இந்த வரிசையில் ராமநாதபுரத்தில் தற்போது ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

ஒ.பி.எஸ்-ஸுடன் நியமன எம்.பி தர்மர்
ஒ.பி.எஸ்-ஸுடன் நியமன எம்.பி தர்மர்

இதனால் அ.தி.மு.க-வில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இது பற்றி வரும் 23-ம் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தென்மாவட்டத்தில் தன்னுடைய ஆதரவைப் பெருக்கிக்கொள்வதற்காக தன்னுடைய தீவிர ஆதரவாளரான தர்மருக்கு, ஓ.பி.எஸ் மாநிலங்களவை எம்.பி பதவியைப் பெற்று தந்தார். இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ``இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் சென்னை மீட்டிங்குக்கு வந்துவிட்டேன். விசாரித்துக் கூறுகிறேன்” என இணைப்பைத் துண்டித்து விட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக இதேபோல் போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism