Election bannerElection banner
Published:Updated:

தேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!

ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

சசிகலாவை வரவேற்று, அ.தி.மு.க நிர்வாகி சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா, தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். விரைவில் அவர் தமிழகம் வருவார் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்துவரும் சூழலில், அ.தி.மு.க-வுக்குள், சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய அ.தி.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க தலைமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிவரும் சூழலில், துணை முதல்வரும், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டத்தில் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
`சொன்ன வார்த்தையை திரும்ப வாங்கிக்கிறேன்னு சொல்லுங்க’ -ஓ.பி.எஸ் குறித்து பேசிய பெண்; பதறிய ஸ்டாலின்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம், வேலப்பர் கோயில் செல்லும் வழி என நகரின் முக்கியப் பகுதிகளில் இன்று காலை சசிகலா படம் பொறித்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. அவை, அ.தி.மு.க ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணித் தலைவர் சின்னராஜா என்பவர் சார்பில் ஒட்டப்பட்டிருந்தன. போஸ்டர்களில், ``தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எங்களின் ராஜமாதாவே, வருக வருக...” என அச்சிடப்பட்டிருந்தது. இதனால், தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஜெயபிரதீப் முகநூல் பதிவு
ஜெயபிரதீப் முகநூல் பதிவு
`குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க; அப்புறம் சவால் விடலாம்!’ - ஓ.பி.எஸ் மகனுக்கு தங்கம் பதில்

இரு தினங்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் சசிகலா விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவிப்பதாகஒ பதிவிட்டிருந்தார். அவரது பதிவு குறித்து, அமைச்சர் ஜெயக்குமார், ``மனிதாபிமான அடிப்படையில் பதிவிட்டிருக்கிறார்” எனக் கூறியிருந்தார். இருந்தபோதும், அ.தி.மு.க வட்டாரத்தில் ஜெயபிரதீப்பின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், தேனியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு