Published:Updated:

`சக்திவாய்ந்த முதல்வர்’... அண்ணாமலையைத் தொடர்ந்து ஸ்டாலினைப் புகழ்ந்த ஆளுநர் ரவி! - பின்னணி என்ன?

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
News
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதி நெருங்கிவரும் வேளையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிவருகின்றனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளும் றெக்கை கட்டத் தொடங்கிவிட்டன. ரவி முன்பு உளவுத்துறையில் பணியாற்றியவர் என்பதால், தமிழக அரசை உளவு பார்க்கத்தான் மத்திய அரசால் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றனர். அதற்கேற்றாற்போல தமிழக அரசின் திட்டங்கள் குறித்த அறிக்கையை பவர் பாயின்ட் பிரசன்டேஷனாகக் கேட்டிருந்தார். சில மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் செல்லவிருப்பதாகவும் சொன்னார்கள். இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது, `டைனமிக் சி.எம்’ , அதாவது சக்தி வாய்ந்த முதல்வர் என்றுதான் தனது பேச்சைத் தொடங்கினார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இவருக்கு முன்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் மறைந்த சம்பவத்தின்போது மீட்புப்பணியில் தமிழக முதல்வரும், அரசு அதிகாரிகளும் உள்ளிட்ட குழுவினர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஹெலிகாப்டர் எரியும்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயிலிருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத்துறையினர் மீட்டிருக்கிறார்கள். இதற்காக 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றார். மேலும், ``முதல்வராகக் கடுமையாக உழைக்கிறார் ஸ்டாலின். ஆனால், அவருக்கு நிகராக அமைச்சர்கள் இல்லை” என்றும் பேசியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திடீரென இவர்கள் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசுவது ஏன் என்று அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் கேட்டோம். ``தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஒருபோதும் ஏற்பட வாய்ப்பில்லை. அதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. பா.ஜ.க-வும் கட்டாயப்படுத்தவில்லை. எனினும், பா.ஜ.க-வின் முக்கிய நோக்கமே நாடு முழுவதும் காங்கிரஸைத் தனிமைப்படுத்த வேண்டும்.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் நின்று, தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கிறது காங்கிரஸ். அதனால், தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே டெல்லி பா.ஜ.க-வின் எண்ணம்.

அண்ணாமலை
அண்ணாமலை

என்னதான் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணியில் தொடர்ந்தாலும், தி.மு.க-வுடன் இணக்கமாகச் செல்ல விரும்புகிறது. இன்றைய தேதிக்கு நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி தி.மு.க-தான். மசோதாக்களை நிறைவேற்றும்போது எதிர்த்து வாக்களிப்பது மட்டுமின்றி, வெளிநடப்பு செய்வதும் மரபில் உள்ளது. எதிர்த்து வாக்களிப்பதை மட்டுமே உண்மையான எதிர்ப்பாகப் பார்க்க முடியும். வெளிநடப்பு செய்வது கிட்டத்தட்ட மசோதாவை ஆதரிப்பதற்குச் சமம் என்றாகிவிடும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

`23 எம்.பி-க்களை மக்களவையில் கொண்டிருக்கும் தி.மு.க-வை, நேரடியாக எதிர்க்க வேண்டாம், கொஞ்சம் பாலிஷாகச் செல்லுங்கள்’ என்றே பா.ஜ.க கூறிவருகிறது. கண்டிப்பாக நிறைவேற்றவேண்டிய சட்டங்களில் இப்படியான மறைமுக ஆதரவு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ.க., தி.மு.க-வை நேரடியாக எதிர்ப்பதைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. இதே போன்று நிதித்தேவை என்பது தி.மு.க அரசுக்கு இருப்பதால், ஒரு விஷயத்தில் டெல்லியைப் பகைத்தாலும், சில விவகாரங்களில் மறைமுக டீலிங் வைத்துக்கொள்ளவே தி.மு.க-வும் விரும்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால்தான், 11 புதிய மருத்துவக் கல்லூரித் திறப்புவிழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருக்கிறது தமிழக அரசு. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளும் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. முழுக்க முழுக்க மாநில அரசு தொடர்புடையவை, தமிழக அரசின் நிதியில் கட்டப்பட்டவை. மருத்துவப் படிப்புகளில் 15 சதவிகித சீட் மட்டுமே மத்திய அரசுக்கு உரியது. அப்படியிருக்க கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் வரவேண்டிய தேவை இல்லை. இருந்தபோதும் ஒருசில விவகாரங்களில் இணக்கம் வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கைகளால் கல்லூரிகளைத் திறக்கவைக்கிறது தி.மு.க அரசு.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

இதற்கு மத்தியில் இந்த பிளானில் எந்தவித சிக்கலும் எழுந்துவிடக் கூடாது என்று டெல்லியிலிருந்தே உத்தரவு வந்திருக்கிறது. அதனால்தான், தி.மு.க அரசை எதிர்த்துப் பேசும் அண்ணாமலை, தனிமனிதராக ஸ்டாலினைப் பாராட்டுகிறார். இதேபோல்தான், மாநில அரசுக்கு வில்லனாக இருக்கக்கூடும் என பார்க்கப்பட்ட ஆளுநர் திடீரென நட்புக்கரம் நீட்டுகிறார். இந்த இணக்கம் என்பது இதே இடைவெளியில் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என்கிறார்கள். நண்பர்கள்கூட போட்டி என்று வந்துவிட்டால் எப்படி மோதிப் பார்ப்பார்களோ, அதுபோல தேர்தல் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக பா.ஜ.க-வை எதிர்த்து தி.மு.க-வும், அதேபோல் தி.மு.க-வை எதிர்த்து பா.ஜ.க-வும் பேசியாக வேண்டும். நேரடியாகக் கூட்டணி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை!” என்று முடித்தார்.