Published:Updated:

அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் வேண்டாம்! - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பி.ஆர்.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஆர்.பாண்டியன்

அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் வேண்டாம்! - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் வேண்டாம்! - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் வேண்டாம்! - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published:Updated:
பி.ஆர்.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஆர்.பாண்டியன்

தி.மு.க ஆட்சியில் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் போட்டாலும்கூட, நலத்திட்டங்கள் எதுவும் கடைக்கோடி விவசாயியைச் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. இந்தப் பின்னணியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறதே?”

“விவசாயத் தேவையில் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒன்றியத்துக்கும் வேறுபாடுகள் இருக்கும். யாருக்கு என்ன வேண்டும், எந்தப் பகுதிக்கு என்ன திட்டம் தேவை என்பதில் அக்கறை காட்டாமல், மேலிருந்தே திட்டங்களை அறிவிப்பதால் வருகிற பிரச்னை இது. ‘அண்ணா, கலைஞர் பெயரில் இலவசமெல்லாம் வேண்டாம். மாறாக அந்த நிதியை நெல், கரும்பு மற்றும் விளை பொருள்களுக்கான விலையாகக் கொடுத்தால் போதும்’ என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.”

அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் வேண்டாம்! - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

“அரசின் நலத் திட்டங்கள் கடைக்கோடி விவசாயியைச் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி...”

“யானைப் பசிக்குச் சோளப்பொரி போலத்தான் நிதி ஒதுக்குகிறார்கள். அதனால் எந்தத் திட்டமும் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. முதலில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ‘சந்தை ஒப்பந்தம்’ வேண்டும் என்கிறோம். இதையெல்லாம் செய்யாமல், வெறுமனே வாயால் வடை சுட்டால் எப்படி?”

“வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய பிறகும் இதில் மாற்றம் இல்லை என்கிறீர்களா?”

“பட்ஜெட் தாக்கல் செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லையே... வெற்று அறிவிப்பால் என்ன பயன்... மேலும், வேளாண்மைக்கான நிதி ஆதாரத்தை ஊழல், முறைகேடுகள் இல்லாமல், விவசாயிகளுடன் இணைந்து கூட்டாகச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு இங்கு எங்கே இருக்கிறது?”

“அப்படியென்றால், தமிழ்நாடு அரசு விவசாயிகளைவிட்டு விலகியிருக்கிறதா?”

“ஆமாம்... வேளாண்துறைக்கும் விவசாயி களுக்கும் என்ன இணைப்பு இங்கு இருக்கிறது... கலெக்டர் தலைமையில் நடைபெறுகிற மாவட்ட விவசாயக் கூட்டத்தைக்கூட தி.மு.க மாவட்டச் செயலாளர், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் நடத்துகிற நிலைதானே தமிழ்நாட்டில் இருக்கிறது... இந்தச் சூழலில், விவசாயிகள் தங்கள் கருத்தை எப்படிச் சுதந்திரமாக எடுத்துச்சொல்ல முடியும்... சமீபகாலங்களில் இந்த நெருக்கடி பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்திருக்கிறது.”

“விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு அரசின் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்லவேண்டியதுதானே?’’

“விவசாயிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. விவசாயி களுக்கு ஒதுக்கப்படுகிற நிதியைச் செயல்படுத்து வதற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள், வேளாண்மைக்காக நிர்வகிக்கப்படும் குழுக்கள் போன்றவற்றில் விவசாயிகளுக்கு இடம் தருவ தில்லை. விவசாயிகளுக்கான தேவைகள் அறிந்து திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப் புகள் மறுக்கப்படுகின்றன. இப்படி இருக்கும்போது வேளாண்மைக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்படி எல்லோரையும் சென்றடையும்?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism