Published:Updated:

`பா.ஜ.க தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைவது ஏன்?' - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் எம்.பி

Pragya Singh Thakur

தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் மூத்த தலைவர்களின் மரணத்தைப் பார்க்கும்போது, மகாராஜ் ஜி சொன்னது உண்மையோ எனத் தோன்றுகிறது.

`பா.ஜ.க தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைவது ஏன்?' - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் எம்.பி

தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் மூத்த தலைவர்களின் மரணத்தைப் பார்க்கும்போது, மகாராஜ் ஜி சொன்னது உண்மையோ எனத் தோன்றுகிறது.

Published:Updated:
Pragya Singh Thakur

முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி என அடுத்தடுத்து பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களின் மரணத்துக்குக் காரணம், எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவிவிட்டதுதான் எனக் கூறியிருக்கிறார் எம்.பி பிரக்யா சிங் தாகூர்.

Pragya Singh Thakur
Pragya Singh Thakur

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பிரக்யா சிங் தாகூர். பி.ஜே.பி-யைச் சார்ந்த பெண் சாமியாரான இவர், சர்ச்சைக்குப் பெயர்போனவர். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரக்யாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அவர் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைதில் முக்கியப் பங்காற்றியவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர் பின்னாளில் நடைபெற்ற மும்பைத் தாக்குதலின்போது மரணமடைந்தார். இந்நிலையில் ஹேமந்த் கர்காரே மீது விமர்சனங்களை முன்வைத்த பிரக்யா சிங், “ ஹேமந்த் கர்காரே நான் செய்யாத தவறுகளுக்கு என்னைக் கொடுமைப்படுத்தினார். அப்போதே அவரைப் பார்த்து, `நீங்கள் ஒருநாள் அழிந்து போவீர்கள்' என்று சாபமிட்டேன். என்னுடைய சாபத்தால்தான் அவர் உயிரிழந்தார்” எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நான் அனைத்தையும் கூட்டத்திலேயே பேசிவிட்டேன், மேலும் பேசுவதற்கு ஒன்றுமில்லை.
பிரக்யா சிங்

அதேபோல், `காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர்' என பிரக்யா சிங் கருத்து தெரிவித்ததற்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றும் பபுல் கவுர் ஆகியோருக்கான அஞ்சலி செலுத்தும் கூட்டம் மத்திய பிரதேச பா.ஜ.க மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பிரக்யா சிங் தாகூர், `` ஒருமுறை என்னுடைய குருநாதர், எங்களுக்குக் கெட்ட காலம் வரப்போவதாக எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் பி.ஜே.பி-க்கு எதிராக அழிக்கும் சக்திகளைப் பயன்படுத்தும் என்றார். நான் அதை மறந்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் மூத்த தலைவர்களின் மரணத்தைப் பார்க்கும்போது, அவர் சொன்னது உண்மையோ எனத் தோன்றுகிறது" எனப் பேசினார்.

Pragya Singh Thakur
Pragya Singh Thakur

அஞ்சலிக் கூட்டம் நிறைவடைந்து பிரக்யா சிங் வெளியே வந்தபோது, அவர் மேடையில் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், ``நான் அனைத்தையும் கூட்டத்திலேயே பேசிவிட்டேன். மேலும், பேசுவதற்கு ஒன்றுமில்லை“ எனப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.