Published:Updated:

``நான் கட்சியில் இணைவதை விடவும்... இதுதான் முக்கியமானது!" - காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தன் ட்விட்டர் பக்கத்தில், ``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

``நான் கட்சியில் இணைவதை விடவும்... இதுதான் முக்கியமானது!" - காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தன் ட்விட்டர் பக்கத்தில், ``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி

தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு, 2024 தேர்தல் வியூகம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையை, சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட குழு ஒரு வாரத்துக்குள் ஆய்வுசெய்து, கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கும் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தது. இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைந்துவிட்டதாக பா.ஜ.க உள்ளிட்டக் கட்சிகள் கூறிவந்தன.

சோனியா காந்தி!
சோனியா காந்தி!

அதைத் தொடர்ந்து, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்திருக்கும் தேர்தல் வியூக அறிக்கை, அந்தக் கட்சியின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் குஜராத் தேர்தலிலும், 2024 லோக் சபா தேர்தலிலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவார் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இருப்பினும், பிரசாந்த் கிஷோருக்குக் கட்சிக்குள் பதவி ஏதாவது அளிக்கப்படுமா என்பது வரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தல், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரன்தீப் சுர்ஜிவாலா
ரன்தீப் சுர்ஜிவாலா
Twitter

அதில் காங்கிரஸில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியானது. மேலும், காங்கிரஸ் தலைமை பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை ஏற்று அது தொடர்பாக மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் `நவ் சங்கல்ப சிந்தன் ஷிவிர்' என்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தன் ட்விட்டர் பக்கத்தில், ``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்  ட்விட்
பிரசாந்த் கிஷோர் ட்விட்
ட்விட்டர்

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பான அந்தக் கட்சி மேலிடத்தின் ஆஃபரை நான் நிராகரித்து விட்டேன். நான் அந்தக் கட்சியில் இணைவதை விடவும், அந்த கட்சி தன்னுடைய ஆழமான கட்டமைப்பு பிரச்னைகளில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதை நான் என்னுடைய கோரிக்கையாக முன்வைக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்து கட்சிக்குள்ளேயே அதிரிப்தி நிலவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism