Election bannerElection banner
Published:Updated:

சேலத்தில் `சர்வே' எடுக்கும் பிரசாந்த் கிஷோர் டீம்... திட்டத்தின் பின்னணி என்ன?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் நெருக்கடி கொடுத்தால், சொந்த மாவட்ட தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு எடப்பாடி தள்ளப்படுவார் என்று கணக்கு போடுகிறார்கள்

அல்வா துண்டை எடுத்து ருசித்தபடி செய்திக்குள் தாவினார் கழுகார்.

''சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளிலும், தலா 100 பேர் வீதம் 1,100 பேரை சர்வே எடுப்பதற்காகக் களமிறக்கியுள்ளது பிரசாந்த் கிஷோர் டீம். `ஊரடங்கு காலத்தில் அரசின் மீதான மக்களின் மனநிலையை ஸ்கேன் செய்வதற்காகவே இந்த சர்வே' என்கிறார்கள். சேலத்திலுள்ள தொழிற்சங்கங்கள், சமுதாய அமைப்புகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் சர்வே எடுக்கப்படுகிறதாம்.''

'ஓஹோ... எதற்காக சேலத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள்?''

''முதல்வரின் சொந்த மாவட்டம் அல்லவா... தவிர, அ.தி.மு.க-வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் நெருக்கடி கொடுத்தால், சொந்த மாவட்ட தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு எடப்பாடி தள்ளப்படுவார் என்று கணக்கு போடுகிறார்கள். அவரை பிரசாரத்துக்காக வேறெங்கும் நகரவிடாமல் முடக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் திட்டம். இதற்காக மக்களின் பல்ஸைத் தெரிந்துகொள்வதுதான் பி.கே டீமின் திட்டமாம்.''

''அ.தி.மு.க-வில் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சிப் பதவி கொடுத்துவிட்டார்களே?''

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

'' `அவர் பா.ஜ.க மூலம் பதவிக்கு முயல்கிறார்' என்று ஏற்கெனவே நான் கூறியிருந்தேனே... அது பலனளித்துவிட்டது என்கிறார்கள். மேலும், தி.மு.க தலைமையை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி விடுத்த அறிக்கைகளால் அ.தி.மு.க தலைமை குளிர்ந்துவிட்டதாம்.

'இனி எங்கேயும் வாய் பேசக் கூடாது' என்கிற நிபந்தனையுடன் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவரால் நாக்கைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் தெரியவில்லை.''

இன்னும் பல விஷயங்களை அடுக்கிய கழுகார், ''இந்து அறநிலையத்துறையின் சார்பில் 'திருக்கோயில்' என்கிற பெயரில் ஆன்மிக சேனல் ஒன்றைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆணையரின் பொதுநல நிதியிலிருந்து 8.77 கோடி ரூபாய் ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

'கோயில் சொத்துகளையும், வருமானத்தையும் நிர்வகிக்க மட்டுமே இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. சேனல் தொடங்க வேண்டுமானால், அரசின் நிதியிலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். கோயில் வருமானத்திலிருந்து எடுக்கக் கூடாது. தற்போது 'திருக்கோயில்' சேனல் தொடங்க நான்கு முக்கியக் கோயில்களின் வருமானத்திலிருந்து பணத்தை எடுக்கவுள்ளனர். இது சட்ட விரோதமானது' என இந்து இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்துகின்றன. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவெடுத்துள்ளனர்.'' என்றார்.

> "பா.ஜ.க புதிய நிர்வாகிகள் நியமனத்தில் புகைச்சல் உள்ளதாமே?''

> ''தி.மு.க-வில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன சிக்கலாம்?''

> தமிழகத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் நடத்திய ரகசியச் சந்திப்பு... ரஜினிக்கு தூது!

- கழுகார் பகிர்ந்த உள்ளரசியல் தகவல்கள் அனைத்தையும் முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க இங்கே க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்! https://bit.ly/2BNHiso

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு