Published:Updated:

பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்ட்ரி... தி.மு.க-வுக்கு சாதகமா, சிக்கலா?

தமிழக அரசியல் களத்தில் எழுந்த பல்வேறு சவால்களை, கடந்த அரை நூற்றாண்டு காலமாக தன் மதி வியூகத்தால் வீழ்த்திக்காட்டியவர் மு.கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தி.மு.க என்ற கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தி.மு.க-வின் தேர்தல் வியூகத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். 'Indian Political Action committee' சுருக்கமாக 'IPAC' என்றழைக்கப்படும் நிறுவனம்தான், அண்ணா வளர்த்த கட்சியை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் வேலையைச் செய்யப்போகிறது. விரிவாக படிக்க க்ளிக் செக... http://bit.ly/35lLVDA

தமிழக அரசியல் களத்தில் எழுந்த பல்வேறு சவால்களை, கடந்த அரை நூற்றாண்டு காலமாக தன் மதி வியூகத்தால் வீழ்த்திக்காட்டியவர் மு.கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தி.மு.க என்ற கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அந்தத் தி.மு.க-தான், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேர்தல் வியூக கார்ப்பரேட் நிறுவனத்துடன் இப்போது ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஒப்பந்தத்தில் தி.மு.க சார்பில் ஆலந்தூர் பாரதி கையெழுத் திட்டிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்ட்ரி... தி.மு.க-வுக்கு சாதகமா, சிக்கலா?

பிரசாந்த் கிஷோரிடம் முன்பு பணியாற்றிய சிலரிடம் பேசியபோது, ''பிரசாந்த் கிஷோர், ஜெயிக்கும் குதிரையில் மட்டுமே பந்தயம் கட்டுவார். தமிழகத்தில் தி.மு.க ஜெயிக்கும் என்று கணித்துதான் வலியச்சென்று ஒப்பந்தம் போட்டுள்ளார். அவர் தேர்தல் பணியை மட்டும் பார்க்க மாட்டார்; வேட்பாளர் தேர்விலும் பல சிக்கல்களை ஏற்படுத்துவார். தி.மு.க தரப்பு, முதல்கட்டமாக 15 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. தொகை எதுவும் பேசவில்லை. 'ஜெயித்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று பிரசாந்த் சொல்லியிருக்கிறார். 2021-ல் மேற்குவங்கத்துக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலத் தேர்தல்களை எப்படிக் கையாள்வார் எனத் தெரியவில்லை'' என்றனர்.

பிரசாந்த் கிஷோர் தரப்பில் பேசியவர்களோ, "எங்களுக்கு தொழில், அரசியல் வியூகம் வகுப்பது. தொழில் தர்மத்தை மீறாமல் நாங்கள் செயல்படுவோம். எங்களுக்கு கட்சிப் பாகுபாடு கிடையாது" என்றார்கள்.

- 'IPAC' நிறுவனத்தின் பின்னணி, தி.மு.க-வுக்குள் நுழைந்த விதம் குறித்து முழுமையாக வாசிக்க > 'கருணாநிதி' கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்? https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-political-strategist-prashant-kishor

'வாஸ்து' பிடியில் அறிவாலயம்!

''உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தரப்பு உற்சாகமாகத் தயாராகிவிட்டதுபோலிருக்கிறதே?''

''ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனத் தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்குக் காரணமே, அப்போதுதான் விட்டமின் 'ப'வை நிதானமாக வீடு வீடாக விநியோகிக்க முடியும் என்பதுதான். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2RS0Mls

கூட்டணிக் கட்சிகளிடம், 'சீட் ஒதுக்கீடு பிரச்னையையெல்லாம் மாவட்டச் செயலாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என அ.தி.மு.க தலைமை கைகாட்டிவிட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் சதவிகித அடிப்படையில் சீட் ஒதுக்கீட்டை எதிர்பார்த்ததால்தான், மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கைகாட்டிவிட்டாராம். மாவட்டங்களுடன் கூட்டணிக் கட்சிகள் முட்டிமோதுவதற்குள், தேர்தலே நடந்து முடிந்துவிடும் என்கிறார்கள்.''

பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்ட்ரி... தி.மு.க-வுக்கு சாதகமா, சிக்கலா?

''தி.மு.க தரப்பு இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறதாம்?''

''கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், 'ஆளுங்கட்சியின்மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நிச்சயம் ஜெயிக்கலாம்' என்று தெம்பூட்டுகிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.''

''பிரசாந்த் கிஷோர் இதற்கெல்லாம் எந்த ஐடியாவும் கொடுக்கவில்லையா?''

''சரியாகக் கேட்டீர். அவருடைய ஐடியா வேற லெவலில் இருக்கிறது. ஒருகாலத்தில் பகுத்தறிவுப் பாசறையாகக் கருதப்பட்ட அண்ணா அறிவாலயத்திலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டாராம் அவர். அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் அறைக்கு வலதுபுறத்தில் கதவு ஒன்று இருந்தது. அது வழியாகத்தான் கருணாநிதி வீல் சேரில் அமர்ந்தபடி உள்ளே வருவார். ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அறிவாலயத்தின் மெயின்கேட் வழியே உள்ளே நுழைந்து தலைவர் அறைக்குள் செல்வார். அங்கிருந்து கிளம்பும்போது வலதுபக்கக் கதவின் வழியே காரில் ஏறிச் சென்றுவிடுவார். இதுதான் வழக்கமாயிருந்தது. இப்போது அதில் ஒரு மாற்றம்.''

அப்படி என்ன மாற்றம்? - ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: 'தோஸ்து' கிஷோர்... 'வாஸ்து' பிடியில் அறிவாலயம்! https://www.vikatan.com/government-and-politics/politics/politics-and-current-affairs-dec-18

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |