Published:Updated:

மதுரை : ``தமிழக முதல்வர் ஸ்டாலினுடனான நட்புறவு என்றைக்கும் தொடரும்" - பிரேமலதா பேச்சு!

பிரேமலதா
பிரேமலதா

``உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு தே.மு.தி.க-வின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.’’

உடல்நலக்குறைவால் மரணமடைந்த தேமுதிக நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக நேற்று மதுரை வந்திருந்தார் தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா.

பிரேமலதா
பிரேமலதா

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், ``பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்றவற்றாலும், விலைவாசி உயர்வாலும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதைக் கண்டித்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி, வருகிற 5-ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தேமுதிக-வைப் பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போவதோ அல்ல. இது, வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய கட்சி.

பிரேமலதா
பிரேமலதா

மேலும், தேமுதிக-வை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் திருமணம் கலைஞர் தலைமையில் நடைபெற்றது இந்த உலகத்துக்கே தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலினுடனான நட்புறவு என்றைக்குமே இருக்கும்.

சசிகலா, அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அந்தக் கட்சியின் தனிப்பட்ட விஷயம். அது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது" என்றவரிடம்,

பிரேமலதா
பிரேமலதா

'உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு' பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.தேதி அறிவித்த பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேமுதிக கட்சியின் நிலைபாட்டை தலைமை அறிவிக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு